இன்றைய புனிதர் - ஜனவரி 4 - புனிதர் ஃபோலிக்னோ நகர் ஏஞ்செலா ***


புனிதர் ஃபோலிக்னோ நகர் ஏஞ்செலா

(St. Angela of Foligno)

கைம்பெண், மறைப்பணியாளர், இறையியலாளர்களின் ஆசிரியை:

(Widow, Religious, and Mistress of Theologians)

விதவை மற்றும் மறைப்பணியாளர்:

(Widow and Religious)

பிறப்பு: கி.பி 1248

ஃபோலிக்னோ, தூய ரோமானியப் பேரரசு

(Foligno, Holy Roman Empire)

இறப்பு: ஜனவரி 3, 1309

ஃபோலிக்னோ, திருத்தந்தையர் மாநிலங்கள்

(Foligno, Papal States)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க மதம் (செயின்ட் பிரான்சிஸின் மூன்றாவது ஆணை)

(Roman Catholicism - (Third Order of St. Francis)

முக்திப்பேறு பட்டம்: ஜூலை 11, 1701

திருத்தந்தை பதினோராம் கிளெமென்ட்

(Pope Clement XI)

புனிதர் பட்டம்: அக்டோபர் 9, 2013

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)

முக்கிய திருத்தலம்:

சிசா டி சான் ஃபிரான்சிஸ்கோ, ஃபோலிக்னோ, பெருஜியா, இத்தாலி

(Chiesa di San Francesco, Foligno, Perugia, Italy)

நினைவுத் திருநாள்: ஜனவரி 4

பாதுகாவல்:

பாலியல் சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள்

(Those afflicted by sexual temptation, Widows)

ஃபோலிக்னோவின் புனிதர் ஏஞ்சலா, ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை சபையின் மறைப்பணியாளர் ஆவார். அவர் தனது மாய வெளிப்பாடுகளைப் பற்றிய விரிவான எழுத்துக்களிலிருந்து ஒரு மாயையுள்ளவராக அறியப்பட்டார். மரியாதை காரணமாக, கத்தோலிக்க திருச்சபையில் தோன்றிய அந்த எழுத்துக்கள், அவரை "இறையியலாளர்களின் ஆசிரியர்" என்று அறிய உதவின.

ஏஞ்சலா தனது ஆன்மீக எழுத்துக்களுக்கு மட்டுமல்லாமல், ஒரு மத சமூகத்தை ஸ்தாபிப்பதற்காகவும் குறிப்பிடப்பட்டார். இந்நிறுவனம், ஒரு ஆன்மீக சபையாக மாற மறுத்துவிட்டது எனினும், இதனால் தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதற்கான தனது சேவைப்பணிகளைத் தொடர்கின்றது. இந்நிறுவனம் இன்னமும் செயல்பாட்டில் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபை 2013ம் ஆண்டு, ஏஞ்சலாவை ஒரு புனிதராக பிரகடனம் செய்தது.

ஏஞ்சலாவின் பிறந்த தேதி, உறுதியாக தெரியவில்லை எனினும், அவர் பிறந்த வருடம், கி.பி. 1248ம் ஆண்டு என பட்டியலிடப்பட்டுள்ளது. அவர், இத்தாலி (Italy) நாட்டின், பெருஜியா மாகாணத்திலுள்ள ( Province of Perugia), கீழ்-மத்திய ஊம்ப்ரியாவின் (East Central Umbria), பழமையான ஒரு நகரமான  ஃபோலிக்னோவில் (Foligno) ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். தமது வாழ்க்கை முறையை எளிமைப்படுத்த விரும்பும் மக்களுக்கு ஏஞ்சலா ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.. தம்முடைய இளவயதில், ஆடம்பர மற்றும் இவ்வுலக இன்ப வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய உற்சாகமான மனோபாவம் அவரை பாவமான நடத்தைக்கு உட்படுத்தியது. திருமணமான இவருக்கு, தமது ஒருவேளை சிறு வயதிலேயே, பல குழந்தைகள் இருந்தன. ஏஞ்சலா உலகத்தையும் அதன் இன்பங்களையும் நேசித்ததாக தெரிவிக்கிறார். 40 வயதில், அவருக்கு புனிதர் ஃபிரான்சிஸின் திருக்காட்சி கிடைத்தததாகவும், அப்பொழுது அவர் தமது வாழ்க்கையின் வெறுமையை உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தக் காலத்திலிருந்தே, உயர்ந்த பரிபூரணத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்து நடத்தத் தொடங்கினார். பின்னர் அவர் பிரார்த்தனை மற்றும் தவ வாழ்க்கையைத் தொடங்கினார். அடுத்த ஆறு ஆண்டுகளில், படிப்படியாக அவர் மக்களிடமும் ஆன்மீக மற்றும் சேவைகள் தொடர்புடைய ஷயங்களுடனும் தனது தொடர்புகளைத் திசைதிருப்பினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏஞ்சலாவின் தாயார் மரித்துப்போனார். சில மாதங்களுக்குப் பிறகு, அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் தொடர்ந்து மரித்தனர். தம்முடைய சேவை செய்யும் ஒரு பெண்ணான மசாஸுவோலா (Masazuola) என்பவரை தம்முடைய தோழியாக ஏற்ற அவர், தன் உடைமைகளைத் திசைதிருப்பவும், தவம் செய்பவராகவும் வாழ ஆரம்பித்தார். ஏஞ்சலா அநேகமாக கி.பி. 1291ம் ஆண்டில் தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபையில் சேர்ந்தார். அர்னால்டோ (Arnoldo) என்ற ஃபிரான்சிஸ்கன் துறவியின் வழிகாட்டுதலின் கீழ் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அர்னால்டோ, இவரது ஒப்புரவாளராகவும் (Confessor)  பணியாற்றினார்.

பெரும் மத்தியகால மாயைகள் நிறைந்தவராக கருதப்பட்ட ஏஞ்செலா, அநேக மாயைகளை திருக்காட்சியாகக் காணும் பேருபெற்றார். இவை, பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில், இரண்டு தொகுப்புகளாக படைக்கப்பட்ட இவை, (Il Libro Della Beata Angela da Foligno) என பெயரிடப்பட்டுள்ள.

ஒரு சிறிய சீடர்களின் குழு இப்புனிதரைச் சுற்றி கூடியது. அவர் புத்திசாலித்தனமாக அவர்களை வழிநடத்தி, அடிப்படை கிறிஸ்தவ வாழ்கை முறைகளை அவர்களுக்கு அறிவுறுத்தினார். அவரது அறிவுறுத்தல்களிலிருந்து இந்த பகுதி ஜெபத்தையும் வேதத்தைப் பற்றிய தியானத்தையும் ஆதரிக்கிறது: 

            தெய்வீக ஒளி இல்லாமல் மீட்படைய முடியாது. தெய்வீக ஒளி நம்மை ஆரம்பிக்கவும் முன்னேறவும் செய்கிறது, மேலும் அது நம்மை முழுமையின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. எனவே நீங்கள் இந்த தெய்வீக ஒளியைத் தொடங்கவும் பெறவும் விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் முன்னேற ஆரம்பித்திருந்தால், ஜெபியுங்கள். நீங்கள் பரிபூரணத்தின் உச்சியை அடைந்திருந்தால், அந்த நிலையில் இருக்கும்படி ஒளிமயமாக இருக்க விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் விசுவாசத்தை விரும்பினால், ஜெபியுங்கள். உங்களுக்கு நம்பிக்கை வேண்டுமானால், ஜெபியுங்கள். நீங்கள் தர்மத்தை விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் எளிமையை விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் கீழ்ப்படிதலை விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் கற்பு வாழ்க்கையை விரும்பினால், ஜெபம் செய்யுங்கள். நீங்கள் மனத்தாழ்ச்சியை விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் சாந்தகுணத்தை விரும்பினால், ஜெபியுங்கள். நீங்கள் துணிச்சலை விரும்பினால், ஜெபியுங்கள். உங்களுக்கு ஏதாவது நல்லொழுக்கம் வேண்டுமானால், அதற்காகவும் ஜெபியுங்கள்.

இந்த பாணியில் ஜெபியுங்கள்: கடவுள்-மனிதனாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, வறுமை, வலி, அவமதிப்பு மற்றும் உண்மையான கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் கொண்ட வாழ்க்கை புத்தகத்தை எப்போதும்  வாசியுங்கள்.

கி.பி. 1308ம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று, தான் விரைவில் மரித்துவிடுவேன் என்று ஏஞ்சலா தனது தோழர்களிடம் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு கிறிஸ்து அவருக்குத் தோன்றி, அவரை பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல தனிப்பட்ட முறையில் வருவதாக உறுதியளித்தார். அவர் கி.பி. 1309ம் ஆண்டு, ஜனவரி மாதம், 3ம் நாளன்று, உறக்க நிலையிலேயே அமைதியாக மரித்தார்.