160 தூய லூர்து அன்னை ஆலயம், ஊமாரெட்டியூர்

  

தூய லூர்து அன்னை ஆலயம்

இடம் : ஊமாரெட்டியூர்

மாவட்டம் : ஈரோடு
மறை மாவட்டம் : உதகை

நிலை : பங்குதளம்
கிளை : புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கிட்டப்பட்டி.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு அமல்ராஜ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜெரோம்.

குடும்பங்கள் : 86
அன்பியங்கள் : 6

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
வார நாட்களில் திருப்பலி மாலை 06.00 மணிக்கு.

திருவிழா : மூன்று நாட்கள் நவநாள். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 11ம் தேதி ஒரு நாள் திருவிழா.

சிறப்பு :

1984 ல் திருச்சிலுவையிலிருந்து ஒளி வடிவில் காட்சி தோன்றி, அருகில் இருந்த ஒரு பாறையில் சிலுவையாக பொறிந்துள்ளது. அக்காட்சி இன்றளவும் மறையாமல் இருப்பது புதுமை.

2016 ம் ஆண்டு இது தனிப்பங்காக ஆயர் அவர்களால் உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜெரோம் அவர்களை பணியில் அமர்த்தினார்கள்.

லூர்து மாதா கெபி, புனித அந்தோணியார் கெபி, வனத்து சின்னப்பர் கெபி என மூன்று கெபிகள் ஆலய வளாகத்தில் உள்ளன. பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இங்கு வந்து தூய லூர்து அன்னை வழியாக இறைவனின் அருள் வளங்களை பெற்று செல்கின்றனர்.

அன்னை ஏராளமான அற்புதங்களை நாள்தோறும் செய்து வருகின்றார்.

வழித்தடம் : ஈரோடு - மேட்டூர் வழித்தடத்தில் சுமார் 40 கி.மீ தொலைவில் ஊமாரெட்டியூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.