தவக்கால சிந்தனைகள் 14 : தாயும் மகனும் சந்திக்கிறார்கள் ***

இது ஒரு வரலாற்று சிறப்பு சந்திப்பு அல்லது இரண்டு வரலாறுகளின் சந்திப்பு. அன்பிற்கு  எங்களைவிட சிறந்த எடுத்துக்காட்டுகள் இந்த வையத்தில் இல்லை என்று இருவரும் சொல்லாமல் சொல்கின்றன.

“ மனிதா உன் மீது நான் கொண்டுள்ள அன்பை நீரூபிக்க இதை விட மேலான செயல் எனக்கு தெறியவில்லை “ என்று சொல்லி சிலுவையை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்திருந்த்து ஒரு அன்பு.

இன்னொரு அன்பு தான் பாலூட்டி சீராட்டி வளர்த்த தன் ஒரே மகனை, தன் அன்பை, தன் உலகத்தை இந்த தரணிக்கு தாரைவார்க்கத் துணிந்துவிட்டது.

அதற்காக அந்த அன்புத் தாய் செய்த தியாகங்கள் எத்தனை ? அனுபவித்த வேதனை எத்தனை ? இன்னல்கள் எத்தனை ? இப்போது இந்த இன்னல்களுக்கு மத்தியிலும் ஏன் தன் மகனை சந்திக்க வந்தார் தன் மகனின் அந்த ஒரு இக்கட்டான நெருக்கடியான நிலையிலும் அவனுக்கு ஒரு ஆதரவு, ஒரு உறுதி, ஒரு வீரம், ஒரு தெம்பு கொடுத்தாக வேண்டும். அதுவும் என்னால் மட்டுமே அவனுக்கு கொடுக்கமுடியும் என்று தோன்றியதால் துணிவோடு தன் உள்ளத்தை தயாரித்துக் கொண்டு தன் மகனை எதிர்கொள்ள வந்துவிட்டார்.

இப்போது இயேசு சுவாமி எனும் அன்பு. ஒரு மகனாக தன் தாயை சந்தித்தே ஆகவேண்டும். அதுவும் இந்த சூழ்நிலையில் என் தாயை நான் தாயை சந்தித்தே ஆகவேண்டும் என்று என் உள்ளம் துடிக்கிறது. இதை என் தாய் எப்படியோ உணர்ந்துவிட்டார். அதனால்தான் இப்போது என் முன்னால் வந்து நிற்கின்றாள். தன் உணர்ச்சிகள், பாசம், வேதனை, துக்கம் இதை எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு. தான் உடைந்தால் தன் மகன் உடைந்துவிடுவான் என்ற முன்னெச்சரிக்கையோடு செயல்படுகிறாள்.

இயேசுவுக்கும் தெறியும் தன் தாயின் நிலை. நான் எப்போதெல்லாம் துவண்டேனோ, வருந்தினானோ, வெறுக்கப்பட்டு தள்ளப்பட்டேனோ அப்போதெல்லாம் என்னை தேற்றியது என் தாயின் புண்ணகைதானே ! என் தாயின் தேனைவிட இனிமையான சொற்கள்தானே ! அதிலும் குறிப்பாக எருசலேம் ஆலயத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டு நான் துவண்டபோது  என் தாயின் மெல்லிய புண்ணகையும், தேற்றலும், ஊக்கமும்தானே !
என்னைத் தேற்றியது.

இப்போதும் எனக்கு அதே ஊக்கத்தை தாருங்கள் அம்மா! என்று நான் மனதில் நினைத்தேன் நீ என் எதிரே வந்துவிட்டாய். அதுதானே அம்மா உன் ஸ்பெசல். இந்த உன்னோட சிறப்பான குணாதிசயத்தால்தானே வானகமும் வையகமும் உன்னைக் கொண்டாடுகிறது.

அம்மா ! என்ற சொல்லுக்கு முழு இலக்கணம் நீயே. முழு தகுதியும் நீயே ! இதை கடவுள் எப்படியோ தெறிந்து கொண்டு உன்னை தன் தாயாக்கிகொண்டார்.

கல்வாரியில் இந்த நான்கு கண்கள் பேசிய மொழி என்னவாக இருந்திருக்கும். ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த தங்கள் முழு அன்பையும் இந்த ஒற்றைப்பார்வைகள் உணர்த்தியிருக்கும். இந்த பார்வை மொழியில் கொடுத்தல் வாங்குதல் நடந்திருக்கும். கொடுத்தது தாயின் அன்பு, பெற்றது மகன் அன்பு, பெற்றாலும் தன் தாய்க்கு பார்வையாலே தேற்றலும் உறுதியும் இந்த மகன் கொடுக்கிறாள். அன்புக்கு பதில் அன்பு கொடுக்காமல் செல்வது இந்த மகனாலும் முடியாத செயலே.

இப்போது ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய ஒரு கேள்வி. நம் ஒவ்வொருவரும் கடவுள் கொடுத்த தாயை எப்படி வைத்திருக்கிறோம். ஒரு நேரத்தில் அன்பை பொழிந்தபோது தேனாக இனித்தவள் இப்போது ஏன் கசக்கிறாள். அன்று அவளை எதிர்பார்த்து இருந்தோம் இன்று அவள் நம்மை எதிர்பார்க்கிறாளே அதற்காகவா?. உன் தாயின்மீது  நீ அன்றும் இன்றும் எதிர்பார்த்திருப்பது எதாவது தேவையாக இருந்திருக்கலாம். ஆனால் அன்றும் இன்றும் உன் தாய் உன்னிடம் எதிர்பார்பாது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு மட்டும்தான். எப்போதோ கேட்ட பழமொழி “ பணிக்கு சென்று வீடு திரும்பும் ஒருவனின் மனைவி அவன் மடியைப் பார்ப்பாள். நம் கணவன் நமக்காக என்ன வாங்கி வந்திருக்கிறான் என்று. ஆனால் அவன் தாயோ அவன் வயிற்றை பார்ப்பாள். நம் பிள்ளை சாப்பிட்டானா? களைப்பாய் வந்திருப்பானே?” என்று அதுதான் தாய்.

கல்வாரி நாயகன் அந்த சூழ் நிலையிலும் தன் தாயிடம் அன்பு காட்டினார். நாம் நம் தாயிடம் நாம் அன்பு காட்டுகிறோமா காட்டுவோமா? காட்டுவோம்....

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்...

இயேசுவுக்கே புகழ்!  மரியாயே வாழ்க!