புனித தேவசகாயம் பிள்ளை வரலாற்றில் சில தகவல்கள்!

இந்து ஆச்சாரம் மிகுந்த உயர் குலத்தில் பிறந்தவர்

கிறிஸ்துநாதரை ஏற்றுக் கொண்டபின் எந்த வேதனைகளையும் அவருக்காக அவரில் தாங்கும் வலு பெற்றிருந்தார்

ஜெபம் செய்வதில் பிடிப்பு அதிகம் உள்ளவர்

கிறிஸ்தவராக மாறிய பின்பு இந்து ஆச்சாரங்களை முக ஸ்துதிக்காக கூட ஏற்கவில்லை

எனவே தந்தையை சடுதி மரணத்தில் இழந்தார்

மனைவியை கிறிஸ்தவத்தை தழுவ விரும்புகிறாயா என கேட்டு முழு சம்மதத்துடன் ஞானஸ்நானம் பெறச் செய்தார்

சிறையில் அடைக்கப்பட்ட பின்பு உணவின்றி துன்புறுத்தலால் தனது வழிக்கு கொண்டுவர மன்னர் முயன்று தோல்வி கண்டார்

எனவே எருக்கம்பூ மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது பின்பறம் பார்க்க அமர்த்தி ஊர்வலமாக அடித்து இழுத்துச் சென்றனர்

அலகை வழி நெடுகிலும் அவரை தன்பங்கிற்கு சோதித்து துன்புறுத்தியது

குடிக்க நீர் தராத பட்சத்தில் ஆரல்வாய்மொழி நோக்கிய வேதனை பயணத்தில் புலியூர் குறிச்சியில் தாகம் தணிக்க பாறை மீது தனது முழங்கையை இடித்து நீரூற்று கிளம்பச் செய்தார் அவரும் படை வீரர்களும் தாகம் தணித்தனர்

அங்கு தற்போது புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளது நீரூற்று சற்று ஆழத்தில் உள்ளது

நீண்ட பயணத்திற்குப் பின் பெருவிளை அடைந்தார்

அங்கு ஒரு மந்திரவாதியைக் கொண்டு உடலெல்லாம் மிளகாய் பொடியை அரைத்து பூசச் செய்தனர்

அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை புனிதர் ஆசிர்வதிக்க கரு உருவானது

பின்னர் ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் வைத்து துப்பாக்கியால் சுட அனுமதி வழங்கப்பட்டது

துப்பாக்கி வெடிக்கவில்லை புனிதரிடம் சேவகர்கள் மன்றாடியதால் துப்பாக்கியை ஆசிர்வதித்துக் கொடுத்தார் இப்போது குண்டு பாய்ந்து மலை மேல் பாறையிலிருந்து கீழே விழுந்து விண்ணகம் நுழைந்தார்

அப்போது அங்கிருந்த பாறை பிளந்து விழுந்து மணி ஒலி எழுப்பியது

இன்றும் அந்த பாறை அங்கே உள்ளது

அவரது சரீரத்திற்கு நிழல் தந்த ஆலமரக்கிளை இன்றும் இளந்தளிராக காட்சியளிக்கிறது மற்ற பகுதி சாதாரணமாக உள்ளது

அதன்பின் அவரது சரீரம் கிறிஸ்தவர்களால் எடுத்து செல்லப்பட்டு கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அவரது அடக்க பூசை கொல்லம் ஆயர் அவர்களால் துறவறத்தாருக்குரிய திவ்யபலி பூசையாக நிறைவேற்றப்பட்டது

புனிதரின் துணைவியார் ஞானப்பூ வடக்கன்குளத்தில் வசித்து விண்ணக வாழ்வை அடைந்தார் அவரது கல்லறை வடக்கன்குளத்தில் உள்ளது

புனிதத்துவம் என்பது கிறிஸ்துநாதர் தமக்கு அளித்த சிலுவையை சுமந்து பின் செல்வதில் உள்ளது

அது புனித தேவமாதாவால் எளிமையாக்கப்பட்டுள்ளது அன்னையின் வழியாக பயணிப்பது மீட்பை உறுதி செய்கிறது