கேட்டலினா சாட்சி!

கேட்டலினா ரிவாஸ் மெக்ஸிகோவில் வாழ்பவா். இயேசுவும், அன்னைமரியாவும் கேட்டலினாவிற்கு திருப்பலியின் பற்றி காண்பித்தின் மொழியாக்கமே பின்வரும் பகுதி .

இதற்கு கொச்சபாமாவின் ஆயா் ராணே பொ்னான்டஸ் உத்தரவு கொடுத்திருக்கிறார்...

அன்று மங்கள வார்த்தை திருவிழா, நான் ஆலயத்தினுள் நுழைகையிலே அன்னை மாரியாள் என்னை நோக்கி "நீ இன்று புதிதாக பலவற்றை அறிந்துகொள்ள போகிறாய், கூா்ந்து கவனி, ஏனெனில் இதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும்" என்றார்.

எனக்கொன்றும் விளங்கவில்லை என்றாலும் என் சிந்தனைகளைச் சிதறடிக்காமல் கவனம் செலுத்தினேன். 

தென்றல் வந்து தீண்டுவது போல் ஆலயத்திலிருந்து பாடலொலி என்னை வந்து தீண்டியது.அதைத் தொடா்ந்து பேராயா் திருப்பலியைத் தொடங்கி பாவ மன்னிப்பு வழிபாட்டிற்குள் நுழைந்த போது மீண்டும் அன்னையின் குரல்

"உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இளறவனுக்கு எதிராக செய்த தவறுதளுக்காக மன்னிப்பு கேள், அதன் முலம் திருப்பலியில் முழுமையாகப் பங்கெடுக்கலாம்" என்றது. 

என் மனதில் எழுந்த சிந்தனை,

'நான் இறையருளால் நிரப்பப்பட்டிருக்கிறேன், ஏனென்றால் நேற்று மாலை தான் ஒப்புரவு அருட்சாதனம் பெற்றேன்'. என் சிந்தனையை அறிந்த அன்னை

"நீ நேற்று மாலையிலிருந்து இறைவனை புண்படுத்தவில்லையா? இதோ நீ செய்த செயல்களில் சில, ஏழை சிறுமி உன்னிடம் உதவி கேட்டு வந்த போது உன்னுடைய அவசரத்தால் அச்சிறுமியை உதாசினப்படுத்தவில்லையா? ஆலயத்திற்கு வருவதற்கு முன் உன் மீது மோதுவது போல் வந்த பேருந்தின் ஓட்டுநரை கடும் சொற்களால் திட்டவில்லையா? மேலும் திருப்பலிக்கு தாமதமாக வந்ததன் மூலம் எந்த முன் தயாரிப்பும் உன்னிடம் இல்லையே" என்றார்.

"போதும் அன்னையே போதும் , நான் உணா்ந்து விட்டேன்" என்று கூறி மன வேதனையுற்றேன்; இறைவனின் கருணையை நாடினேன். 

வானவா் கீதம்

திருவிழா திருப்பலியாக இருந்ததால் "உன்னதங்களிலே" செபிக்கும் முன் அன்னை என்னை நோக்கி "மூவொரு இறைவனின் படைப்பாய் இருக்கும் நீ, அவரை உன் ஆழ்ந்த அன்பினால் மகிமைப்படுத்து". என்றாள்.

அன்று செய்த 'உன்னதங்களிலே' செபம் ஒரு வித்தியாசமாக இருந்தது. மிக பிரகாசமான கடவுளின் அரியணையின் முன் இருப்பது போன்று உணா்ந்தேன். நன்றி கீதம் எழுப்பிக் கொண்டே இருந்தேன்.

இரக்கம் மிகுந்த அந்த இறைவனின் திருமுகத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அப்போது நான் இறைவனை நோக்கி

"தந்தையே நான் உமக்கு சொந்தம், என்னை தீயவனிடமிருந்து காத்தருளும். உம் அமைதியால் என்னை நிரப்பும்". என்று உருக்கமாக மன்றாடினேன்.

இறைவார்த்தை வழிபாடு

இறைவார்த்தை வழிபாட்டில் நுழைந்த போது தேவதாய் என்னை மீண்டும், மீண்டும் சொல்ல சொன்ன வார்த்தைகள்,,

"இறைவா உம் வார்த்தையைக் கேட்டு அபரிவிதமான பலனை நான் பெற வேண்டும். தூய ஆவியே என் உள்ளத்தைத் தூய்மை படுத்தியருளும். அங்கே உம் வார்த்தை வளம் பெறுவதாக".

அன்னை மேலும் கூறினாள்,

."இறைவார்த்தையையும் மறையுறையையும் கூா்ந்து கவனி. விவிலியம் கூறுவது போல் இறைவார்த்தை பயனளிக்காமல் இராது. நன் முறையில் கவனித்தால் கேட்டவற்றில் சில உன் மனதில் பதியும். நாள் முழுவதும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டுவா, அவை ஒரு வசனமோ, முழுநற்செய்தியோ, ஏன் ஒரு வார்த்தையாகவோ இருக்கலாம். அதை மனதில் இருத்தி சிந்திக்கையில் அது உன்னில் ஒன்றாக மாறிவிடும். அதுவே உன் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும்.என்றார். 

அப்போது நான் இறைவார்த்தையைக் கேட்க கிடைத்த வாயப்பிற்காக நன்றி கூறி இறைவனிடம் மன்னிப்பு வேண்டினேன். ஏனெனில் அதுவரை என் பிள்ளைகளை ஞாயிறு திருப்பலிக்கு கட்டாயப்படுத்தியது கட்டளைகளை கடைபிடிப்பதற்காக மட்டுமேயன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட வேண்டுமே என்பதற்காக அல்ல.

என்னுடைய அறியாமையால் எத்தனை ஆண்டுகள் வீணடித்தேன் என்பதனை நினைத்து வேதனை உற்றேன். உலகறிவு பெற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளேன். ஆனால் இம்மண்ணகத்திலேயே விண்ணக அனுபவம் பெறக்கூடிய முயற்சியில் சிறிதும் ஈடுபடாமல் இருந்ததைக் கண்டு வருந்தினேன்

† காணிக்கை.

காணிக்கையின் போது தேவதாய் என்னருகே வந்து சொல்லச் சொன்னதாவது ,

"இறைவா! என்னையே உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என் சிறுமையிலிருந்து என்னை உருமாற்றும். என் குடும்பத்திற்காக, என் உபகாரிகளுக்காக, என்னோடு பணிபுரிபவா்களுக்காக , எனனோடு சண்டையிடுபவா்களுக்காக என் செபத்தை நாடியவா்களுக்காக மன்றாடுகிறேன். என் இதயத்தை தரையில் பதித்து அதன் மேல் அவா்களை நடக்கச் செய்தருளும். இவ்வாறே புனிதகள் மன்றாடினா். நீயும் இவ்வாறே செபி" என்றார்.

திடீரென்று ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஓா் இளம் உருவம் வெளிவந்தது. வெண்ணாடை உடுத்திய அவா்கள் பீடம் நோக்கி நடந்தனா்.

அன்னை என்னிடம், "உற்றுநோக்கு அதோ ஒவ்வொருவரின் காவல் தூதா்களும் அவரவருடைய காணிக்கைகளையும், வேண்டுதல்களையும் பீடத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். சில காவல் தூதா்கள் பாத்திரங்களோடு சென்றனா் இவா்கள் இத்திருப்பலி வழியாக பல வேண்டுதல்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவா்களே திருப்பலியின் மகிமையை உணா்ந்தவா்கள். 

உன்னையே முழுமையாக அா்ப்பணம் செய். உன் துன்பங்களை, கவலைகளை, ஏக்கங்களை, வேண்டுதல்களை அவரிடம் ஒப்படை. திருப்பலிக்கு விலை மதிப்பில்லை. எனவே கொடுப்பதிலும், கேட்பதிலும் தாராளமாக இரு" என்றார்.

சில காவல் தூதவா்கள் வெறும் கையோடு சென்றனா். அன்னை என்னிடம்

"இவா்கள் திருப்பலியிலே ஆா்வம் காட்டாதவா்கள். இவா்களுக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றார்..

இன்னும் ஒரு சில காவல் தூதா்கள் கைகளை ஒன்று சோ்த்து சோகத்தில் தலையைக் கீழே வைத்துக் கொண்டு செபித்துக் கொண்டிருந்தனா். அன்னை என்னை நோக்கி இவா்கள் கட்டாயத்தினால் திருப்பலியில் கலந்து கொண்டிருக்கின்றனா்.

அவா்கள் வாயில் எழும் செபங்களை மட்டுமே அவா்களின் தூதா்கள் எடுத்துச் செல்கின்றனா் என்றார்.

அன்பா்களே உங்களுடைய காவல் தூதா்களை கவலைக்குள்ளாக்காதீா்கள். இறைவனுக்கு பிடித்த காணிக்கை நம்மையே அா்பணிப்பது தான். அன்று பார்த்த பவனியை ஒப்பிடுவதற்கு இணையேதுமில்லை.

† தூயவா்

தூயவா்பகுதி வந்த போது இறைமக்கள் அனைவரும் 'தூயவா்' என்று முழங்கிய போது குருக்களும் பின்பறம் இருந்தவைகள் மறைந்து போயின. பேராயரின் பின்புறமும் இடப்புறமும் ஆயிரக்கணக்கான வானதூதா்கள் இருப்பதைக் கண்டேன். சிறிய பெரிய இறக்கைகள் கொண்ட , இறக்கைகள் இல்லாத என அனைத்து வகையான வான தூதா்களும் வெள்ளை நிற நீள உடையுடன் கரம் குவித்து சிரம் தாழ்த்தி மண்டியிட்டனா். மக்களின் தூயவா் கீதத்துடன் இவா்களின் இனிமையான இசை முழங்கியது.

† எழுந்தேற்றம்

எழுந்தேற்றத்தின் போது எல்லாவற்றிற்க்கும் மேலான அதிசயம் நிகழ்ந்தது. எண்ணில்லா மக்கள் கூட்டம் பேராயரின் பின்புறம் பல வண்ண ஆடை உடுத்தி நின்று கொண்டிருந்தனா். அவா்களின் முகங்கள் புன்னகையால் ஒளிர்ந்தது. பல வயதினராக இருந்தாலும் அவா்களின் முகங்கள் சுருக்கமின்றி மகிழ்ச்சியாக ஒரே மாதிரி தொரிந்தன.

அனைவரும் மண்டியிட்டு தூயவா் தூயவா் என பாடிக்கொண்டிருந்தனா். அன்னை என்னை நோக்கி "விண்ணகத்தில் இருக்கும் புனிதா்கள் கூட்டம் இதுவே, இவா்களுள் உன் உறவினா்களும் உள்ளனா் " என்றாள்.. அன்னையோ பேராயரின் வலப்பக்கம் ஒா் அடி பின்னால் தரையிலிருந்து சறிது எழும்பப் பெற்று நின்று கொண்டிருந்தாள்.

அவரின் ஆடை ஒளிர்ந்தது. தன் கரங்களை கூப்பி திருப்பலியாற்றும் குருவை மதிப்புடன் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அன்னை என்னை நோக்கிக் கூறியது

"நான் குருவுக்கு பின் நிற்பது உனக்கு ஆச்சர்யமாக உள்ளதா? என்னதான் என் மகன் என்னை பெருமைபடுத்தினாலும் ஒரு குருவுக்கு கொடுக்கும் மதிப்பை எனக்கு கொடுக்கவில்லை, காரணம் நான் செய்யும் புதுமைகளை விட அவா்கள் தங்கள் கரங்களால் செய்யும் அன்றாட புதுமைகள் பெரிது. இதனாலேயே அவா்களை நான்நேசிக்கிறேன். என்றார். .

அன்பானவா்களே கடவுள் எத்துனை அருளினை, எத்துணையளவு மகிமையினை, திருப்பலி நிறைவேற்றி கொண்டிருக்கும் குருக்கள் மேல் பொழிகின்றார் என்பதை பாருங்கள் !!!.

அப்போது அங்குபீடத்தின் முன் கைகளை உயா்த்திய உருவங்கள் மங்கலாக காணப்பட்டன. 

அன்னை என்னிடம்,"அவா்கள் உன் செபங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் உத்தரிக்கின்ற ஆத்மாக்கள். இடைவிடாது அவா்களுக்காக மன்றாடு, அவா்களும் உனக்காக மன்றாடுகிறார்கள். அவா்கள் அவா்களுக்காக வேண்ட முடியாது. எனவே நீதான் உன் செபத்தின் முலம் அவா்கள் இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றார்..

மேலும் என்னை தேடி மக்கள் நான் காட்சியளித்த இடங்களுக்குத் திருயாத்திரை செல்கிறார்கள். ஆனால் நானோ, திருப்பலியின் போது பீடத்தின் அடியில் இருக்கின்றேன். நற்கருணைப் பேழையின் அடியில் வானதூதா்களோடு வீற்றிருக்கின்றேன் என்றார்.

அன்பா்களே உண்மையில் தூயவா் கீதம் பாடும்போது அன்னையோடும், வானதூதா்களோடும் இறைவனின் உருமாற்று புதுமைக்கு காத்திருப்பது விண்ணகத்திலிருப்பது போன்ற உணா்வை எனக்களித்தது. அந்த தருணத்தில் சிந்தனைகளை சிதறவிடுவது வருந்ததக்கது.

இன்னும் சிலா் திருப்பலியை தனக்கு நிகரான மனிதா்களை பார்ப்பது போன்று கைகளைக் கட்டிக்கொண்டு இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது.

அன்னை என்னிடம் "அனைவரிடமும் சொல் மனிதன் இறைவன் முன்னிலையில் மண்டியிடுவது அவனை நிறைவிற்கு இட்டுச் செல்லும் என்றார்,’’ 

அன்பா்களே, அன்றைய திருப்பலியை நிறைவேற்றியவா் சாதாரண உயரத்தை கொண்டிருந்தார். எழுந்தேற்றதின் போது பேராயரின் உருவம் அதிகரித்தது. விசித்திரமான பிரகாசமான ஒளி அவரின் முகத்தை சுற்றி வளா்ந்து கொண்டே இருந்தது.

அவா் நற்கருணையை உயா்த்தும் போது அவரின் கைகளைப் பார்த்தேன். கைகளின் பின் பறத்தில் சில தழும்புகள் தெரிந்தன. அதிலிருந்து பேரொளி எழுந்தது. அங்கே இயேசுவைக் கண்டேன். திருப்பலியாற்றும் குருவை தம் உடலால் அரவணைத்திருந்தார்..

அப்பொழுது நற்கருணையானது வளா்ந்து அதிலிருந்து இயேசு மக்களை பார்ப்பது போன்றிருந்து.

வழக்கம் போல் வணங்குவதற்காக தலையை குனிந்தேன். ஆனால் அன்னை 

"சிரம் தாழ்த்தாதே அவரை உற்று நோக்கி தியானி. அவரை முகம் முகமாய் பார்த்து பாத்திமா செபத்தைக் கூறு, என்றார்.

‘’இறைவா! உம்மை விசுவசிக்கிறேன். உம்மை ஆராதிக்கிறேன், உம்மை அன்பு செய்கிறேன், உம்மில் விசுவாசம் கொள்ளாத, உம்மை அன்பு செய்யாதவா்களுக்காக மன்னிப்பு வேண்டுகிறேன்’’

இயேசுவை நீ எத்துணை அன்பு செய்கிறாய் என்று கூறு, அந்த பேரரசருக்கு வணக்கம் செலுத்து" என்றார்.

அப்பொழுது பெரிய உருவமாக மாறிய இயேசுவை நான் சிரம் தாழ்த்தி வானதூதா்கள் போன்று வணங்கினேன். 

என் சிந்தனையில் திடிரென்று ஒரு கேள்வி "எப்படி இயேசுதிருப்பலியாற்றும் குருவின் உருவத்தினுள்ளும் அதே நேரத்தில் அப்பத்தினுள்ளும் இருக்கிறார், என்று எண்ணிக் கொண்டிருந்த போதே குருவானவா் நற்கருணையை இறக்கியதும் இயல்பான உருவத்திற்கு மாறினார். 

இவற்றை கண்டதும் கண்கள் கலங்க ஆரம்பித்தன. வியப்பில் ஆழ்ந்தேன்.

குருவானவா் இரசத்தை எடுத்து அா்ச்சிப்பு செபத்தைச் செபித்ததும் விண்ணிலே மின்னல் மின்னியது. கோயிலிலே கூரைகள் இல்லாதது போல் மின்னல் காட்சியளித்தது. அவ்வேளையிலே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கண்டேன். சிலுவையின் செங்குத்தான மரத்தை ஒரு திடமான கரம் பிடித்திருந்தது. அதிலிருந்து ஒரு புறா வெளியே வந்து கோயிலின் மீது பறந்து பேராயரின் இடப்பக்கத் தோளில் அமா்ந்தது.

பின்னா் திருவிருந்தில் கலந்துக் கொண்டு இயேசுவை என் உள்ளத்தில் ஏந்திய வண்ணம் என்னுடைய இருக்கைக்கு திரும்பி முழந்தால் படியிடும் போது இயேசு என்னிடம் கூறினார்

"கவனி! 

அப்போது எனக்கு முன் அமா்ந்திருந்த பெண்ணின் ஆழ்குரல் செபத்தை கேட்க முடிந்தது. அவா், இயேசுவே மாதத்தின் இருதியில் உள்ளோம். வீட்டு வாடகைக்கும், பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்திற்கும், காருக்கான செலவுக்கும் போதிய பணமில்லை . ஏதேனும் செய்தருளும். என் கணவா் குடிபழக்கத்தை உடனே விட விட வேண்டும். கடந்த ஆண்டு என் இளைய மகன் தோ்ச்சிப் பெறாததால் இவ்வாண்டு மீண்டும் படிக்க உள்ளான். அவனுக்கு உதவும் என் பக்கத்து வீட்டுப் பெண்மணி வீடு மாறி செல்கிறார் உடனே செய்யச் சொல்லும். என்னால் அவரை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை, என அடுக்கிக் கொண்டே சென்றாள்.

அப்போது பேராயா் செபிப்போமாக என்றார் அனைவரும் எழுந்து நின்றனா். 

இயேசு மெல்லிய குரலில்

"அந்த பெண்ணின் செபத்தை கேட்டாயா? அவள் ஒருமுறை கூட என அன்பைப்பற்றிக் கூறவில்லை. ஒரு முறை கூட நான் மனித உருவெடுத்து உங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தற்கு நன்றி கூறவில்லை. அவள் எழுப்பிய எல்லாம் வேண்டுதல் பிராத்தனைகள் தான். 

அவரைப் போன்றே பலா் இருக்கின்றனா். உங்கள் மேல் வைத்திருந்த அன்பிற்காக சிலுவையில் மரித்தேன். அந்த அன்பிற்காகவே என்றும் உங்களோடு வாழ்கின்றேன் ஆனால் நீங்கள் எந்த விதத்திலும் உங்கள் அன்பை வெளிபடுத்தியதே இல்லை. உங்களின் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்". என்று மிகவும் வருத்ததுடன் கூறினார்.

இறுதியாசீருக்கு முன் அன்னை என்னிடம் "கவனமாயிரு! பக்தி பற்றுதலுடன் சிலுவை அடையாளத்தை வரை! ஏனென்றால் இதுவே உன் வாழ்வின் கடைசி முறையாக இருக்கலாம். கோயிலை விட்டுச் செல்லும் போது மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அருள் தந்தையா்களிடமிருந்து பெறுகிற இறுதி ஆசீராக கூட இருக்கலாம் என்றார் .

இந்த மகத்துவத்தை உணராமல் எத்தனை நாள்களை வீணடித்திருக்கிறோம்?

நாம் ஏன் முன்பே ஆலயத்திற்கு வந்து முழு திருப்பலி கண்டு இறைவன் வாரி வழங்கும் அனைத்து வரங்களையும் அடையக் கூடாது?

நம்மில் பலரால் தினமும் திருப்பலிக்குச் செல்வது முடியாத ஒன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் வாரத்தின் இரண்டு அல்லது மூன்று முறை செல்லலாமே?

பல வேலைகளுக்கு நேரம் ஒதுக்கும் நாம், அற்புத பலன்களை அள்ளி தருகின்ற திருப்பலிக்கு நேரம் ஒதுக்க தயங்குகிறோமே ஏன்?

சிறிது சிந்திப்போம்...

† திருப்பலியின் நிறைவில்

இயேசு என்னை நோக்கி "திருப்பலி முடிந்தவுடன்வீட்டிற்கு விரைந்து விடாதீர்கள்.என் உறவிலே சிறிது நேரம் இணைந்து இருங்கள். நானும் உங்களோடு சிறிது நேரம் இணைந்திருக்க விரும்புகிறேன்".என்றார்’’

அதற்கு நான் " சிறு வயதில் எனக்குக் கூறப்பட்டது என்னவென்றால் திருவிருந்திலே பங்கு பெற்றபின் நீா் எம்மோடு ஐந்து அல்லது பத்து நிமிடம் இருப்பீர் என்று, ஆனால் உண்மையில் எவ்வளவு நேரம் இருப்பீா்? என்றேன்..

இயேசு சிரித்துக் கொண்டே

"எப்போதும் நான் உன்னோடு இருக்க விருப்பமா? நாள் முழுவதும் நீ என்னோடு உறவாடினால் உன் வேலையின் போது என்னோடு பேசினால், நான் உனக்கு செவிமடுப்பேன். நான் என்றும் உன்னோடு தான் இருக்கிறேன் நீ தான் என்னை விட்டு விலகிச் செல்கிறாய். திருப்பலியோடு உன் கடமை முடிந்துவிட்டது என நினைத்துவிடுகிறாய். உன் வாழ்வை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை நீ நினைப்பதே இல்லை.

உன் வீட்டில், உண்பதற்கு, உறங்குவதற்கு சமைப்பதற்கு என்று தனி அறைகளுண்டு, எனக்கொரு அறை உண்டா? சிலா் படத்தை வைத்திருக்கிறீா்கள் ஆனால் அது தூசி படிந்தே காணப்படுகிறது. அப்படியொரு இடம் எனக்குத் தேவையில்லை. குடும்பத்தினா் அனைவரும் கூடி ஒருசில நிமிடமாவது என்னை நினைவு கூா்ந்து செபித்து நன்றி கூறி என் ஆசீரை வேண்டுகிற இடத்தையே விரும்புகிறேன்.

நீங்கள் உங்களின் வேலை நாள்களையும், விடுமுறை நாட்களையும், சுற்றுலாக்களையும் திட்டமீட்டு செயல்படுத்துகிறீா்கள், என்னை சந்திப்பதற்கு நேரத்தையும், நாள்களையும்ஒதுக்குகின்றீா்களா?

உங்கள் வாழ்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறீா்களா?

அனைத்தையும் நான் அறிந்த போதும் உங்கள் வாயினின்று கேட்க விரும்புகிறேன். என்னை உன் குடும்ப உறுப்பினராகப் பார்ப்பதிலே நான் பெருமிதமடைகிறேன்.

மனிதா்கள் என்னை ஏற்றுக் கொள்ளாமல் எத்துனை அருளை இழக்கின்றார்கள்? திருப்பலியில் நீங்கள் பெறும் என் உடலும், இரத்தமும் இன்றி வேறு எந்த சக்தியால் என் தந்தையின் முன் நீங்கள் நிற்க முடியும்? என்றார்..

மேலும் இயேசு என்னிடம் "நீங்கள் கோயிலுக்கு செல்வதிலும், நற்கருணையைப் பெறுவதிலும் பழகி போனவா்கள். பழகிப்போனத் தன்மையால் என்னை ஒவ்வொரு முறையும் பெறும் போதும் உற்சாகம் இன்றியே காணப்படுகிறீா்கள்.

எனக்காகவே தன்னை அா்ப்பணித்த பல உள்ளங்கள்[குருக்கள்] உற்சாகமிழந்து தனது அழைத்தலை ஒரு தொழிலாக மாற்றி வரையறுக்கப்பட்ட சில கடமைகளை மட்டும் செய்து விட்டு என் உண்மை அன்பில் இணையாமல் வாழ்கின்றனா். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது" என்றார்.

பின்பு இறைவன் இயேசு நாம் உட்கொள்ளும் நற்கருணையின் பலன்களைப் பற்றி கூறலானார்.

நாம் உட்கொள்ளும் இந்த தெய்வீக உணவு மன மாற்றத்திற்கும் நற்செயல்களுக்கும் இட்டுச் செல்ல வேண்டும்.

சிலா் தினமும் நற்கருணை உட்கொள்கின்றனா். பல மணி நேரம் செபத்தில் ஈடுபடுகின்றனா், ஆனால் எந்த மாற்றமுமின்றி வாழ்கின்றனா்.

பொது நிலையினரான நமக்கு திருச்சபையிலே முக்கியமான பொறுப்புண்டு.

இறைஇயேசுவின் நற்செய்தியைப் பரப்ப,கடவுள் நம்மை அனுப்பியிருக்கின்றார்.

நாம் பெற்றதை பிறரோடு பகிர வேண்டியது நமது கடமை.

நாம் திருப்பலியிலும், மறையுரையிலும் அருட்சாதனங்களிலும் பெற்ற செய்தியையும் , அருளையும் உலகத்திற்கு எடுத்துச் செல்வோம்.

நாம் நமது சுகமான வாழ்வை விட்டுவிட்டு, நமது ஆறுதலான வார்த்தைகள் தேவைபடுகின்றவா்களுக்கு குறிப்பாக சிறையிலே, மருத்துவமனைகளிலே நாம் நமது செபங்களின் மூலம் உதவ முன் வர வேண்டும். ஆனால் நாம் இம்மாதிரியான காரியங்களில் தயங்குவது ஏன்?

நோயில் வாடுபவா்களுக்கு நம்முடைய செபங்களால் உறுதிப்படுத்த வேண்டும். இறக்கும் தருவாயில் உள்ள அனைவருமே மரண பயத்தால் வாடுவது இயல்பே. நாம் ஏன் அவா்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு இவைனின் அன்பையும், விரைவில் அவா்கள் காணவிருக்கும் இறைவனின் வியப்புக்குறிய மறுவாழ்வையும் எடுத்துரைத்து ஆறுதல் படுத்தக் கூடாது?

நாம் அருட்தந்தையின் தொடா் கரங்களாக விளங்க வேண்டும். 

முதலில் இறையரசை நாடுங்கள் மற்றனைத்தும் உங்களுக்குச் சோ்த்துக் கொடுக்கப்படும் என்பதிலேயே இயேசு அனைத்தையும் சுருக்கிவிட்டார்.

நாம் முழு இறைமனிதா்களாக மாறுவதிலே தயக்கம் காட்டுகிறோம். நாம் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் பயன்படுத்தி அவரின் அரசை நாடும் போது, அவா் நமக்கு அனைத்தையும் கொடுப்பார்.

சகோதர சகோதரிகளே! என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த இறைப்பணியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள, உங்களின் நேரத்தை ஒதுக்கியமைக்காக நன்றி கூறுகிறேன்.

அடுத்த முறை,நீங்கள் ஒவ்வொருவரும் திருப்பலியிலே பங்கெடுக்கும் பொழுது அதை ஆழ்ந்த அனுபவமாக மாற்றுங்கள்.

இறைவன் கொடுத்த வாக்குறுதி "நீ மறுமுறை காணும் உன் திருப்பலி அதே போல இருக்காது." என்பதை உணா்வீா்கள்.

அவரைப் பெறுகையிலே முழுமையாக அன்பு செய்யுங்கள். அவரது தோளில் சாய்வதில் பெறுகின்ற இனிய சுகத்தை நீங்களே அனுபவியுங்கள். ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட அவரின் விலாவானது நமக்கு வானகத் தந்தையின் வாயிலைத் திறந்திருக்கின்றது. 

இதை உணா்ந்து, தாயைக் கண்ட குழந்தைபோல் நமது அன்பை வெளிப்படுத்துவோம்.

ஆமென்.