பாப்பரசர் தவறக் கூடியவரே!

19-ம் பக்கக் குறிப்பின் விளக்கம்

பாப்பரசர் தமது ஆசனத்தின் அதிகாரத்தைக் கொண்டு வேதசாத்தியங்களைப் பிரகடனம் செய்யும்போதும், நல்லொழுக்க விதிகளை ஏற்படுத்தும்போதும் மட்டுமே தவறாவரத்தோடு செயல்படுகிறாரே தவிர, அவரது தனிப் பட்ட செயல்களில் இத்தவறாவரத்தை அவர் கொண்டிருப் பதில்லை .

இதற்கான உதாரணங்கள் வருமாறு:

- முதல் பாப்பரசரான அர்ச். இராயப்பர் முகத்தாட்சணி யமுள்ளவராகவும், வெளிவேடமுள்ளவராகவும் நடந்து கொண்டது பற்றி அர்ச். சின்னப்பர் அவரைக் கண்டித்தார் (கலாத். 2:11-14 காண்க.).

- பாப்பரசர் முதலாம் ஹோனோரியுஸ், கிறீஸ்துநாதருக்கு ஒரே ஒரு சுபாவம், தேவ சுபாவம் மட்டும்தான் உண்டு என்று போதித்த மோனோத்தெலிஸத் தப்பறையை ஆதரித் தார். அவர் மரித்து 40 ஆண்டுகள் கழித்து, கி.பி. 680-ல் கான்ஸ்தாந்திநோப்பிள் மூன்றாம் பொதுச் சங்கம் அவரது தப்பறையைக் கண்டனம் செய்தது.

- பாப்பரசர் 23 ம் அருளப்பர் தமது இரண்டாம் வத்திக் கான் சங்கத் தொடக்க உரையில், மனிதர்கள் பாவங்களில் இருந்து மனந்திரும்பாவிடில், பெரும் அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்று போதிக்கும் தீர்க்கதரிசிகளை ஒட்டுமொத்த மாகச் சாடினார்: "நவீன காலங்களில் அவர்கள் ஒழுங்கீனத் தையும், அழிவையும் தவிர வேறு எதையும் காண முடிவது இல்லை . நம் காலம் கடந்த காலங்களை விட, அதிக மோச மாகிக் கொண்டு வருகிறது என்று இவர்கள் கூறுகிறார்கள்.... ஏதோ உலக முடிவு நெருங்கி விட்டதைப் போல, இவர்கள் எப்போதும் பேரழிவையே முன்னுரைக்கிறார்கள்!''

இவ்வார்த்தைகளின் மூலம், பாவத்தின் தண்டனை தேவ கோபமும், பேரழிவுமே என்று முன்னுரைத்த இசை யாஸ், எரேமியாஸ், எசேக்கியேல், தானியேல் முதல் ஸ்நாபக அருளப்பர் வரையுள்ள அனைத்து தீர்க்கதரிசி களையும், ஏன் கிறீஸ்துநாதரையுமே கூட, அவர் கண்டனம் செய்தார்!)

- ஆறாம் சின்னப்பர் இரண்டாம் வத்திக்கான் சங்க ஆவணங் களை அமல் செய்ததன் மூலம் மனச்சான்றின் சுதந்திரம், மதச் சுதந்திரம், பாப்புத்துவ மேற்றிராணித்துவ சமத்துவம், போலி யான கிறீஸ்தவ ஒன்றிப்பு என்னும் பெரும் தப்பறைகள் திருச்சபையில் நுழையக் காரணமாக இருந்தார். பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் தமது அப்போஸ்தலிக்க அதிகாரத்தைக் கொண்டு, நித்தியக் கட்டளையாகத் திருச் சபைக்குத் தொகுத்தளித்த பாரம்பரிய பூசைப் புத்தகத்தை எந்த விதமான மனவுறுத்தலுமின்றி, அலட்சியம் செய்து விட்டு, புதுப்பூசையைப் புத்தம்புதிதாய் உருவாக்கி அமல் படுத்தி, இவ்வாறு ஓர் ஒட்டு மொத்த விசுவாச மறுதலிப்பைத் தொடங்கி வைத்தார். இவ்வளவையும் செய்து விட்டு, 1973 ஜூன் 29 அன்று, தாம் பதவியேற்ற ஒன்பதாம் ஆண்டு நிறைவுநாள் அன்று, தாம் நிறைவேற்றிய அர்ச். இராயப்பர், சின்னப்பர் திருநாள் பூசையில் ஆற்றிய பிரசங்கத்தில் பின்வரும் பயங்கரத்துக்குரிய வார்த்தை களையும் கூறினார்:

"ஏதோ ஒரு விரிசலின் வழியாக, சாத்தானின் புகை கடவுளின் ஆலயத்திற்குள் நுழைந்து விட்டது. சந்தேகமும், நிச்சயமற்ற நிலையும், பிரச்சினையும், அமைதியின்மையும், அதிருப்தியும், குழப்பமும் நிலவுகிறது. அவர்கள் ஏதாவது ஒரு பத்திரிகையில், அல்லது ஏதாவது ஒரு சமூக இயக்கத் தில் பேசும் முதல் தேவ நிந்தையான தீர்க்கதரிசியை நம்பு கிறார்கள். அவன் பின்னால் ஓடி, உண்மையான வாழ்வை அடைவதற்கான வழி அவனிடம் இருக்கிறதா என்று கேட் கிறார்கள். உண்மையான வாழ்வுக்கான வழிக்கு நாம் ஏற்கெனவே சொந்தக்காரர்களாக இருக்கிறோம் என்ற உண்மையை நாம் அறியாமலிருக்கிறோம். சந்தேகம் நம் மனச்சான்றுகளில் நுழைந்து விட்டது. அது ஒளிக்குத் திறப் பாக இருந்திருக்க வேண்டிய ஜன்னல்கள் வழியாக நுழைந்து விட்ட து.....

சங்கத்திற்குப் பிறகு, திருச்சபையின் வரலாற்றில் சூரிய ஒளியின் நாள் வந்து விடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குப் பதிலாக, மேகங்கள், கடும்புயல், இருள், ஆராய்ச்சி, நிச்சயமின்மை ஆகியவற்றின் நாள்தான் வந்து சேர்ந்திருக் கிறது. நாம் எக்குமெனிசத்தை போதிக்கிறோம், ஆனால் அதற்கு எதிராக, மற்றவர்களிடம் இருந்து நம்மையே நாம் தொடர்ந்து பிரித்துக் கொள்கிறோம். பெரும் படுகுழிகளை நிரப்புவதற்குப் பதிலாக, நாமே அவற்றைத் தோண்ட முயல்கிறோம்.”

- இரண்டாம் அருள் சின்னப்பர் எந்த விதிவிலக்குமின்றி, எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுகிறார்கள், ஏனெனில் "மீட்பின் பரம இரகசியத்தில் ஒவ்வொரு மனிதனும் இணைக்கப்படுகிறான். இந்தப் பரம இரகசியத்தின் வழி யாகக் கிறீஸ்து ஒவ்வொரு மனிதனோடும் என்றென்றைக் குமாகத் தம்மை இணைத்துக் கொள்கிறார்" என்று போதித் தார் (ரெதெம்ப்தோரிஸ் மிஸ்ஸியோ, 7.12.1990 மடல்).

கிறீஸ்தவர்கள் அல்லாதோர் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளையும், (அதாவது, உதாரணமாக, இந்துக் கடவுளர், புத்தர், வீனஸ், அப்பொல்லோ போன்ற பொய்த் தெய்வங்களின் ஆராதனையைக் கூட) ஏவித் தூண்டுபவர் பரிசுத்த ஆவியானவரே என்று அவர் போதித்தார் (ரெதெம்ப்தோர் ஓமினிஸ், 4.3.1979).
1984-ல் அவர் கொரியாவிலுள்ள புத்தர் கோவிலுக்குச் சென்று அங்கிருந்த பிரமாண்டமான புத்தர் சிலைக்கு விக்கிரக வழிபாடு செலுத்தினார்.

2.2.1986 அன்று இந்தியாவில் சைவ சமயத்தாரின் சின்னமான திலகம் அணிவித்து வரவேற்கப்பட்டார்.

1986, அக்டோபர் 27 அன்று அவர் அசிசியில் சர்வ சமய வழிபாடு நடத்தினார். இந்துக்கள், முஸ்லிம்கள், புத்த மதத் தினர் தொடங்கி ஆப்ரிக்க செய்வினை மதமான வூடு மதத் தினர் வரை அனைவரும் அர்ச். பிரான்சிஸ் அசிசியார் பேரா லயத்தின் தனித்தனி அறைகளில் தத்தம் விக்கிரக வழிபாட் டுச் செயல்களை நிறைவேற்றினர். இந்த அறைகளிலிருந்த பாடுபட்ட சுரூபங்களும், மற்ற சுரூபங்களும், படங்களும் மற்ற கத்தோலிக்க அடையாளங்களும் அகற்றப்பட்டன.

முஸ்லிம்களுக்கு மெக்கா இருந்த கீழ்த்திசை நோக்கிய அறை தரப்பட்டது. யூதர்கள் கத்தோலிக்க முறைப்படி ஒருபோதும் மந்திரிக்கப்படாத அறை ஒன்றைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். வூடூ மதத்தினர் உலக சமாதானம் வேண்டி, தங்கள் அறையில் சமாதானச் சுருட்டு பிடித்தார்கள். இந்தத் தேவ துரோகங்களின் உச்சக் கட்டமாக, புத்த மதத் தலைவ ரான தலாய் லாமா பேராலய தேவநற்கருணைப் பேழைக்கு மேல் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டார்.

1999 மே 14 அன்று இந்தப் பாப்பு தமத்திரித்துவத்திற்கு எதிரான தேவதூஷணங்கள் அடங்கியதும், சேசுவின் தெய் வீகத்தை மறுதலிப்பதுமான முஸ்லிம்களின் குர்ரானுக்கு வணக்கம் செலுத்தி, அதை முத்தமிட்டார்.

1986-ல் உரோமையிலுள்ள யூத ஜெபக்கூடத்திற்குச் சென்று, யூதர்கள் தங்கள் "மெசையாவின்'' வருகைக்காக ஜெபித்தபோது, அவர்களோடு சேர்ந்து தலைவணங்கினார்.

26.3.2000 அன்று ஜெருசலேமிலுள்ள யூதர்களின் புனிதத் தலமான அழுகைச் சுவர் முன் நின்று, மெசையாவின் பிரதி நிதியான பாப்பரசர் "மெசையாவின் வருகைக்காக ஜெபித்தார்!

இடச்சுருக்கம் கருதி, இத்துடன் முடித்துக் கொள்வோம். தனிப்பட்ட காரியங்களில் பாப்பரசர் தவறக் கூடியவரே என்பதை நிரூபிக்க மேற்கூறிய சாட்சியங்கள் போதுமானவை.

மரியாயே வாழ்க!