பைபிளும், அதைப் படிக்கும் முறையும்

மேற்கண்ட சில எளிய விளக்கங்கள் வழியாகக் கத்தோலிக்கப் போதனைகள் பைபிள் அடிப்படையில் அமைந்தவை என்றும், தவறான வழி காட்டிகள் அல்லது திருச்சபைக்கு எதிரான சக்திகள் தான் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன என்றும் அறியலாம்.

பைபிள் வாசிப்பது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதுவும் பைபிள் வாசிப்பின் அவசியம் பின்வரும் வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது: திபா. 119:105 அல்ல து சங்.118:105 /எசாயா 55:10-11/ எபி.4:12/2 திமோ . 3:16.

அதே சமயம் பைபிள் வாசிப்பதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், எச்சரிக்கைகள் எவை என்பதைப் பின்வரும் வசனங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

எசாயா 34:16/2 திமோ . 4:3/2பேதுரு 1:20/2பேதுரு. 3:16.

ஆண்டவர் இயேசுவுக்கு வேதநூல் பழைய ஏற்பாடு மட்டுமே! புதிய ஏற்பாடு என்பது அவருக்குப் பின் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு. புதிய ஏற்பாட்டு நூல்களாக எவற்றை ஏற்கலாம் என முடிவெடுத்துத் தீர்மானித்தது கத்தோலிக்கத் திருச்சபை. கி.பி. 393இல் ஹிப்போ சங்கமும், கி.பி.397இல் கார்த்தேஜ் சங்கமும் புதிய ஏற்பாடு எது என்பதைத் தீர்மானித்தன.

கி.பி. 1500களில் திரிதெந்தின் சங்கம் இதனை மீண்டும் வலியுறுத்தியது. எனவே கத்தோலிக்கத் திருச்சபையே பைபிளின் தாய்! மேலும் வாய்மொழிப் பாரம்பரியமும், திருச்சபையின் அதிகாரமும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது பைபிள் (2 தெச. 2:15; 2 திமோ . 2:2; மத். 16:18,19; மத்.18:17).

எனவே, பைபிளுக்கு விளக்கம் அளிக்கும் போது, மனம் போன போக்கில் விளக்கம் அளிக்கக் கூடாது. அது வாரப் பத்திரிகை அல்ல! கடவுளின் புத்தகம்! ஒரு பகுதியை மட்டும் படித்து உடனே முடிவுக்கு வரக் கூடாது! ஒப்பிட்டு நோக்கி அர்த்தம் காண வேண்டும் இசை.34:16).

உதாரணமாக மத். 28:20இல் உலக முடிவு வரை உங்களோடு இருக் கிறேன் என்றால் உலகம் முடிந்த பிறகும் உங்களோடு இருக்கிறேன் என்று பொருள். மேலும் தி.பா. 110:1(சங். 109:1) உம் பகைவரை உமக்குக் கால்மணையாக் கும்வரை வலப்பக்கத்தில் அமரும் என்றால் கால்மணை ஆக்கிய பிறகும் அமரும் என்றும் அர்த்தம்.

அவ்வாறே மத். 1:25இல் அவள் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அறியாதிருந்தார் என்றால் பெற்ற பின்னும் அறியாதிருந்தார் என்றே பொருள். வேறு தவறான விளக்கங்கள் கொடுத்துக் கடவுளின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது. கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ விளக்கங்களே சரியானவை ஆகும்.


நம் கடமைகள் / பெருமைகள் :

கத்தோலிக்கத் திருச்சபையைப் பற்றி நாம் அறிய வரும்போது நாம் பெருமைப்படுகிறோம். அதே சமயம் நம் கடமைகளையும் உணர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் நாமே மற்ற அனை வரிலும் பரிதாபத்திற்குரியவர் ஆவோம்.