புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 5 :

நேற்று நற்கருணை வாங்கிய நம் புனிதையுடன் ஆண்டவர் அன்யோன்யமாக பேசியதைப் பார்த்தோம் அல்லவா அந்த உரையாடல் இன்னும் முடியவில்லை.. இதுவரை பேசியதை விட இப்போது பேசுவதுதான் மிகவும் முக்கியம்..

பரவசம் இன்னும் முடியவில்லை.. இயேசு விடை பெறும் முன் தன் பாடுகளின் கருவிகளை அவளுக்கு பரிசாகக் கொடுத்தார். ஆனால் முள்முடியை மட்டும் தரவில்லை. இதைக் கண்ட புனிதை தன் மணவாளரின் முள்முடியின் மீது தனக்குள்ள உரிமையை விட்டுத்தர இசையவில்லை. ஆனால் இயேசு மீண்டும் குதர்க்கம் செய்கிறார். அவளுக்கு இரண்டு முடிகளைக் காட்டுகிறார். ஒன்று முட்களால் ஆனது. இன்னொன்று மலர்களால் ஆனது. 

“உனக்கு எது வேண்டும் ?” என்று கேட்கிறார். புனிதை தயக்கமின்றி முள்முடியைக் காட்டுகிறாள்.

“ அன்பரே ! நான் விரும்புவது எதுவென்று உமக்குத் தெறியுமே?” என்றாள். அவள் சொன்னது புரியாததுபோல் மலர்களால் ஆன முடியை கையில் எடுத்துக்கொண்டு,

“ இதுதானே நீ விரும்புவது அன்பே !  இதையே வைத்துக்கொள் “ என்றார் சேசு. “ இல்லை.. இல்லை.. இதுவல்ல என் அன்பரே! நான் விரும்புவது எது என்று உமக்கு தெறியுமே “ என்றாள் புனிதை. தமது இளம் மணவாட்டியின் பதிலால் பூரிப்படைந்த சேசு முள்முடியினை அவள் இருதயத்தில் வைத்தார்.

“ மலர்களான முடியை நான் இன்னொரு நாளில் தருகிறேன் “ என்றும் கூறினார். “ சரி அன்பரே ! உமது விருப்பப்படியே ஆகட்டும் “ என்றார் புனிதை.

வார்த்தைப்பாடு கொடுத்த நாளிலிருந்து ஓராண்டளவாக விண்ணக வரங்கள் பல புனிதை மீது பொழியப்பட்டது. ஆண்டின் இறுதியில் அவளது மணவாளர் ஆன்மாக்களை மீட்கும் அவரது போராட்டத்தில் அவளையும் பங்கு பெற் அழைத்தார் ( இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது)

1585- ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி, சேசு உலக மக்கள் அனைவரும் கட்டிக் கொள்ளும் பாவங்களை சுமந்தவராக தம்மை அவளுக்கு காட்டினார். இதனால் புனிதை மூன்றுமணி நேரம் இடைவிடாமல் அழுதாள். பின்பு சேசு தன் அழகிய வடிவத்தைக் காட்டினார். இதனால் புனிதை அமைதியானாள்.

ஒரு நாள் சேசு மோதிரத்தைக் காட்டி, “ நீ என்னுடைய மணவாளி என்பதற்கு அடையாளமாக உனக்கு இதை அணிவிக்கிறேன். ஆனால் மனிதர்கள் கண்களுக்கு இது தெறியவேண்டாம் என்று நீ நினைப்பாயே” என்றார்.

புனிதை, “ ஆண்டவரே, உமது மனதின்படி செய்யும். ஆனால் ஆண்டவரே நீர் எப்படி மறைந்திருக்கிறீரோ, அது போல நானும் மறைந்து வாழ அருள் புரியும்” என்று கூறினாள். சேசு இப்போது அம்மோதிரத்தை அவள் விரலில் அணியவே, அவள் “வாழ்வது நானல்ல, என்னில் சிலுவையில் அறையுண்ட சேசுவே வாழ்கிறார் “ ( கலாத். 2:20) என்று கூறினாள்.

சேசுவின் பத்தினி என்றால் ஆன்மாக்களின் தாயாக இருக்க தான் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொண்ட புனிதை ஞானவிதமாக மகப்பேறு துன்ப துரிதங்கள், பலியாதல், மரணமடைதல் வழியாகத்தான் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

சில நாட்கள் கழித்து மே மாதம் 4- தேதி சேசு தமது முள்முடியை தேவதாய், அர்ச்.அகஸ்டின், அர்ச்.சியென்னா கேத்ரின் ஆகியோர் முன்னிலையில் புனிதையின் தலையில் சூட்டினார். மகிழ்ச்சியடைந்த புனிதை,

“ எந்த அரசர் தன் முடியை எடுத்து தமது மணவாளியின் தலையில் சூட்டி அவளை அரசியாக்குவார் “ என்று பூரிப்படைந்தாள். ஆண்டவரால் முடி சூட்டப்பட்டது அவளுக்கு பெரிய ஆறுதல் தந்தது. ஆனால் அவளது வலிகள் தொடர்ந்தன.

நன்றி : மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி “ மாதா பரிகார மலர், சிறந்த கத்தோலிக்க புத்தகங்களுக்கு தொடர்பு கொள்க. சகோ. பால்ராஜ் Ph. 9487609983, சகோ. கபரியேல் Ph.no. 9487257479

குறிப்பு : ஆண்டவரோ, தேவதாயாரோ காட்சி கொடுக்கிறார்கள் என்றால் அந்த ஆன்மாக்கள் பலி ஆன்மாக்களே.. அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்..அவர்கள் சாவதற்குள் ஒரு வழியாகிவிடுவார்கள்… துன்பங்கள் தொடர்கதையாகும்.. அவர்கள் தங்கள் வலிகளை ஆண்டவரின் பாடுகளோடு இனைத்து ஆன்மாக்களை மீட்க வேண்டும்..

இந்த முள்முடி, மலர் முடி காட்சி பல புனிதைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது அவர்களுள் ஒருவர் புனித மார்கரீத் மரியம்மாள்.. ஆனால் எல்லாருமே ஆண்டவருடைய முள்முடியையே தேர்வு கொள்வார்கள்.. இத்தனைக்கும் அவர்களுக்கு சலுகை உண்டு.. அவர்கள் மலர் முடியை தேர்வு செய்தாலும் அவர்கள் பாடுகளின்றி  மோட்சம் போக முடியும்.. ஆனால் அத்தனை புனிதர்களும், புனிதைகளும் முள் முடியை தேர்வு செய்து ஆண்டவருடைய வழியில், எண்ணற்ற ஆன்மாக்களை மீட்டு.. அவர்களோடு சேர்ந்து போகவே ஆசிக்கின்றனர். அதுதான் ஆண்டவர் காட்டிய இடுக்கான வழி..

என்னதான் ஆண்டவரின் காட்சிகள், பரிசுகள், வரப்பிரசாதங்கள் கொடுக்கப்பட்டாலும் நித்தமும் ஏராளமான சிலுவைகள் உண்டு..

நமக்கும் இப்போது ஒரு பெரிய சிலுவை கொடுக்கப்பட்டுள்ளது…அதை முனுமுனுப்பின்றி சுமந்து நமது ஆன்மாவையும், பிறர் ஆன்மாக்களையும் மீட்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !