புனித பாசி மரிய மதலேனாள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து 6 :

ஆண்டவரும் அடிக்கடி புனிதைக்கு உலகத்தார் கட்டிக்கொள்ளும் பயங்கர பாவங்களையும், அதற்காக அவர்களுக்கு வர இருக்கிற தண்டனையையும் காட்டுவார். அச்சமையம் புனிதையின் உள்ளத்திலிருந்து எழும் ஜெபம் இவ்வாறு இருக்கும் :

“ ஆண்டவரே, உமக்கு எதிராகச் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கான தண்டனை என் மேல் விழட்டும். ஓ என்ன பயங்கரம்! நான்தான் இந்த தீமைகளுக்கெல்லாம் காரணம். ஐயோ, ஆண்டவரே, என்னால் முடிந்தால், இப்பாவிகள் அனைவரையும் திருச்சனையின் அரவணைப்பிற்குள் கொண்டுவர எவ்வளவோ ஆசையாய் இருக்கின்றேன்”

மேலும் அந்த ஆன்மாக்கள் நரக நெருப்பிற்குள் எறியப்படுவதை அவள் காணும் போது, “ ஐயோ, நிர்பாக்கிய ஆன்மாக்களே, நீங்கள் நித்தியத்திற்கும் கடவுளை இழந்துவிட்டீர்கள் “ என்று கண்ணீர் விட்டு அழுவாள். தனது சகோதரிகளிடம், 

“ நித்தியத்திற்கும் ஒரு ஆன்மா இழக்கப்படுகிறது… என்ற வார்த்தையின் பொருளை, அதன் நிதர்சனமான உண்மையை நாம் கண்டுகொண்டால், நமது சரீரத் தேவைகளை நிறைவு செய்வதை மறந்துவிடுவோம். இன்று எத்தனை ஆன்மாக்கள் நரக நெருப்பில் எரியப்படுகின்றனர். இதற்கு எப்படி நாம் கணக்கு கொடுக்கப் போகிறோம். ஏனெனில் நீங்களோ.. நானோ சேசுவின் திருஇரத்தத்தை அவர்களுக்காக ஒப்புக்கொடுத்திருந்தால் அல்லது இந்த ஆன்மாக்களுக்கு இரக்கம் காட்டும்படி ஆண்டவரிடம் மன்றாடியிருந்தால் ஆண்டவரது சினம் தனிந்திருக்கலாம். இந்த ஆன்மாக்களும் நரக வேதனையிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பார்கள்.

நன்றி : மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி..

சிந்தனை : மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் வாழும் வரைதான்  நித்திய நரகத்தில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறது..

செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க பாவசங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம் இருக்கிறது..

அந்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய இந்த உலகத்து துன்பச்சிலுவைகள் இருக்கிறது..

மீண்டும் பாவத்தில் விழுதல் கூடாது.. முடிந்தவரை போராட வேண்டும்.. தெறியாமல் தவறிவிட்டால் குருக்களின் பாவசங்கீர்த்தன தொட்டி நோக்கி ஓட வேண்டும்..

நன்றாக நினைவில் வைக்கவேண்டிய விசயம்.. நாம் பாவசங்கீர்த்தனம் செய்த உடன் நாம் உடனடியாக நரக ஆபத்தில் இருந்து விடுதலை பெறுகிறோம்… இந்த உலகத்தில் பரிகாரம் செய்யவில்லை என்றால் உத்தரிக்கும் ஸ்தலம் போய் அங்கு பரிகாரம் செய்தாக வேண்டும்.. ஆனால் அங்கு ஆறுதல் உண்டு… அதற்கு முடிவு உண்டு.. பின் நம்மால் மோட்சம் போக வேண்டும்..

பாவசங்கீர்த்தனம் மாதம் ஒரு முறையாவது செய்வது அவசியம்..அவசியம்..அவசியம்..

நரகத்தை தவிர்க்க நம் அன்புத்தாய் மாதா எளிய வழிகளைத் தந்துள்ளார்கள்.. அதுதான் ஜெபமாலை.. உத்தரியம்..

“ உத்தரியம் அணிபவர்கள் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள் “ என்று நம் தேவ மாதா வாக்கு கொடுத்திருக்கிறார்கள்.. அப்படியென்றால் அந்த ஆன்மாவின் பொறுப்பை மாதா எடுத்துக்கொள்கிறார்கள்… அதாவது நம் இரட்சண்யத்தின் பொறுப்பை மாதாவிடம் ஒப்படைத்து விடுகிறோம்..

நம் ஆன்மாவின் இன்சூரஸ் எஜென்ட் மாதாவாகிவிடுகிறார்கள்..

ஆனால் இப்போது உத்தரியம் அணியும் பக்தி கத்தோலிக்கர்களிடம் இருக்கிறதா? அதை எடுத்துச் சொல்லி அணிய வைக்க எத்தனைபேர் இருக்கிறார்கள் ( வாழும் ஜெபமாலை இயக்கம் தவிர).. காணாமலே போய்விட்டது..  நல்ல விசயம்.. நம் ஆன்மாவைக் காப்பாற்றும் எளிய விஷயங்களையெல்லாம் பிசாசு என்றோ மறக்கச் செய்துவிட்டான்.

அதைப்போல ஒழுங்காக குடும்ப ஜெபமாலை செய்துகொண்டிருந்த கத்தோலிக்க குடுபங்களை டி.வி.யைக் காட்டி கவிழ்த்துவிட்டான் அல்லவா..

நரகம் பெரிய கொடூரமான இடம்.. ஆனால் அதிலிருந்து நம்மை பாதுகாக்க மாதா நிறைய எளிய வழிகளை நமக்காக பெற்று தருகிறார்கள்.. ஆனால் நாம்தான் மாதாவையும் கண்டுகொள்வதில்லை.. அவர்கள் சொல்லிய விஷயங்களையும் கண்டு கொள்வதில்லை.. அதை மக்களை செய்யும்படி தூண்டுவதும் இல்லை..

தினமும் ஜெபமாலை சொல்வோம்… உத்தரியம் அணிவோம்..( முதல் முறை குருவானவர்தான் அணிவிக்க வேண்டும்) மாதம் ஒருமுறையாவது பாவசங்கீர்த்தனம் செய்வோம்.. நாம் பங்கேற்கும் திருப்பலிகளில் நம்மையும், நம் குடும்பத்தையும், உத்தரிக்கும் ஆன்மாக்களையும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்..

( உத்தரியம் சம்பந்தமாக தனிபதிவு வரும்..)

இயேசுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !