செபமாலை விண்ணகத்தின் திறவுகோல் மட்டுமல்ல, மாறாக நம் வாழ்க்கையில் அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தக் கூடிய மந்திரக்கோல். அதுபோல உத்தரியம் இப்பூவுலக வாழ்வில் நமக்கு பாதுகாப்பு கவசமாக அமைகிறது. மரியாயின் உத்தரியத்தை நாம் அனைவரும் அன்பு செய்ய வேண்டும் அதை அடிக்கடி வணங்க வேண்டும்.
15 ஆம் பெனடிக்ட் போப்பாண்டவர் உத்தரியத்தை முத்தமிடும் ஒவ்வொரு முறைக்கும் 500 நாள் பலனளித்துள்ளார். இந்த மரியன்னையின் உத்தரியம் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, இது எல்லாருக்கும் பொருந்தும், பல கத்தோலிக்கர் அல்லாதோர் மனந்திருந்தியதால் பல புதுமைகள் நிறைவேறியுள்ளன. அவர்கள் இந்த உத்தரிய பக்தியால் பலனடைந்துள்ளனர்.
" என்பால் மரியாய் உண்மைநான அக்கரைக் கொண்டுள்ளாள் என்பதை அறிய விரும்புகிறேன். உத்தரியத்தின் மூலம் எனக்கு உண்மையான உறுதிமொழி தந்துள்ளாள். நான் என் கண்களைத் திறந்தால் போதும். இத்த உத்தரியத்திற்கு தனது பாதுகாப்பை அளித்துள்ளாள் " என்கிறார் கிளாடுதெ கொலம்பியர்.
" யார் இந்த உத்தரியத்தை அணிகிறார்களோ, அவர்கள் நிரந்தர நெருப்பில் துன்பப்பட மாட்டார்கள் " .
புனித சிலுவை அருளப்பரின் சகோதரனாகிய யேபஸ் பிரான்சிஸ் என்பவருக்குச் சில பேய்கள் தோன்றி மூன்று காரியங்கள் தங்களை வருத்துவதாகக் கூறின. முதலாவது இயேசுவின் நாமம் ; இரண்டாவது மரியன்னையின் நாமம் ; மூன்றாவது கார்மேல் மலைமாதாவின் உத்தரியம் . " எங்களிடமிருந்து பல ஆன்மாக்களை பிரிக்கின்ற அந்த உடையை கழற்றி விடுங்கள். அதை அணிபவர்கள் அனைவரும் புனித மரணமடைவதால் எங்களிடமிருந்து தப்புகிறார்கள் " என்றன.
எனவே உம்முடைய உத்தரியம் ஆழமான பொருள் கொண்டது. விண்ணகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத பரிசு ; மரியன்னையே இதைக் கொணர்ந்தாள்.
" பக்தியுடனும், விடாமல் தொடர்ந்தும் அதை அணியவும், அது என்னுடைய உடை " என்கிறாள். " அதை நீ அணிவதால் தொடர்ந்து என்னை நீ நினைவில் கொள்கிறாய். நானும் உன்னை விண்ணுலகடைய உனக்கு உதவி புரிகிறேன் " ,என்று நமது அன்னை வலியுறுத்துகிறார்கள்.
புனித சைமன் ஸ்டாக் செய்த செபம் :-
******************************************
( இந்த மன்றாட்டு கடந்த ஏழு நூற்றாண்டுகளாக சொல்லப்படுகிறது. மரியாவின் உதவியைத் தேடித்தர இம்மன்றாட்டு தவறியதில்லை ).
செபம்
°°°°°°°°°°°
அழகிய கார்மேல் மலரே ! பலனளிக்கும் திராட்சைக்கொடியே, விண்ணகத்தின் ஒளியே புனிதமாயும் தனிமையிலும் இறைமகனை இவ்வுலகில் ஈந்தாயே ! என்றும் கன்னியான மரியே ! எனது தேவைகளில் எனக்கு உதவும். கடலின் விண்மீனே, எனக்குத் துணைபுரிந்து என்னைக் காப்பாற்றும். நீர் என் தாயெனக் காட்டும்.
பாவமின்றி பிறந்த ஓ ! மரியே !
உம்மை அண்டிவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னிகையே கார்மேல் மலரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உத்தரியத்தை அணியும் அனைவரின் பாதுகாவலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உத்தரியத்தை அணிந்து மரிப்பவர்களின் நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித சூசையப்பரே, திரு இருதய நண்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠