உலகுக்கு இயேசு, மாதாவின் எச்சரிக்கை ***

தண்டனை வருவதற்கு முன்பு பாவிகளுக்கு என்னுடைய அளவில்ல இரக்கம் கடைசி கட்டம் போல் உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் . காலம் இருக்கும்போதே இந்தப் பேரிரக்கத்தை ஆன்மாக்கள் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு மன்றாடுகின்றார்.  சகோதரி ஃபாஸ்டீனாவுக்கு கட்டளையிட்டதாவது : -
         
" எழுது ! உலகுக்கு என்னுடைய இரக்கத்தைப் பற்றிப் பேசு. அது எவ்வளவு அளவிட முடியாதது என்று கண்டு கொள்ளட்டும். உலகின் கடைசி நாட்கள் அடுத்து வருவதற்கு இஃது ஓர் அடையாளம். அதன் பின் தீர்வை நாள் வரும்  .நான் நீதியுள்ள நீதிபதியாய் வருமுன் என்னை இரக்கத்தின அரசராகக் காண்பிப்பேன் ; இரக்கத்தின் வாயில் வழியாய் செல்ல விரும்பாதவன், நீதியின் வாயில் வழியாய்ச் செல்ல வேண்டியதிருக்கும். இப்போது என்னுடைய இரக்கத்தின் காலத்தை நீடிக்கிறேன். என்னுடைய வருகையின் காலத்தை உணராதவனுக்கு ஐயோ கேடு " என்றார்.

   " தீர்வை நாளுக்கு முன்பு வானத்தில் ஓர் அடையாளம் தோன்றும். வானத்திலும் பூமியிலும் எல்லா வெளிச்சமும் அணைந்துவிடும். ஆகாயத்தில் சிலுவை அடையாளம் தோன்றும். என் கை, கால், காயங்களிருந்து ஒரு வெளிச்சம் புறப்பட்டுக் கொஞ்ச காலத்திற்குப் பூமிக்கு ஒளி கொடுக்கும் " என்றார்.

   கி. பி.  1936 - ஆம் ஆண்டு மங்கள வார்த்தை விழாவன்று நமது மாதா அவர்கள் காட்சி கொடுத்து ஃபாஸ்டீனாவுக்கு சொன்னதாவது :-

    " நான் ஒரு மீட்பரை உலகிற்குக் கொடுத்தேன்.  நீ அவரது இரண்டாவது வருகைக்கு உலகைத் தயாராக்க வேண்டும். அப்போது அவர் இரக்கமுள்ள மீட்பராக அன்று, நீதியுள்ள நடுவராக வருவார். அந்த நாள் பயங்கரமானதாகவும் நீதியின் நாளாகவும், இறைவனின் கோபத்தின் நாளாகவும் இருக்கும். வான தூதர்கள் நடுநடுங்குவர். இன்னும் நேரமுருக்கும்போதே ஆன்மாக்களிடம் இப்பெரும் இரக்கத்தைப்பற்றிப் பேசு. இப்போது நீ அமைதியாக இருப்பாயானால் அந்த இறுதி நாளில் அநேக ஆன்மாக்களுக்காக நீ கணக்குக் கொடுக்க வேண்டியதிருக்கும். எதற்கும் அஞ்சாதே. இறுதிவரை பிரமாணிக்கமாயிரு ! " என்பதாகும்.