வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடி கொண்டார்!

''வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடி கொண்டார்''

  - அருளப்பர் (யோவான்) 1:14

முதலில் கடவுளின் அன்பை பார்ப்போம்...

''கடவுளுக்கு கண் இல்லையா?'' ''நம்ம கஷ்டம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது'' ''அவரு கடவுளு, நம்ம யாரு சாதாரண மனுசன்'' இதைப்போல எத்தனையோ கமெண்ட் நம்மவர்கள் ஏன் நாமே ஒரு சில சூல்நிலையில் சொல்லியிருப்போம்...

சரி.. தன் ஆவியை ஊதி தன் சாயலாகவும் பாவனையாகவும் படைத்த முதல் மனிதன் பாவத்தில் விழுந்தான். கடவுள் கூட இருந்து வழி நடத்தியும் இஸ்ராயேல் மக்கள் பாவத்தில் விழுந்தார்கள். எத்தனையோ இறைவாக்கினர்கள் மூலமாக பேசியும் மீண்டும் மீண்டும் மனிதர்கள் தன் பலவீனத்தால் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தார்கள்.

கடவுளும் “ திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்” என்று நினைக்காமல் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருந்தார்.பாவங்கள் கூடிக்கொண்டே போயின குறைந்த பாடில்லை.. ஒரு நிலையில் சோர்வு அடைந்திருக்கலாம் சற்று வெறுப்பும் அடைந்திருக்கலாம் சரி நானே மனிதனாக பிறக்கின்றேன். உங்கள் பாவத்திற்காக நிந்தையும் கொடிய வேதனையும் அனுபவித்து அவமான மரணமான சிலுவையில் மரிக்கின்றேன்.. அப்போதாவது மனம் மாறுவீர்களா? திருந்துவீர்களா? பாவத்தை விட்டுவிடுவீர்களா? சாத்தானை விட்டுவிடுவீர்களா? என்று பாவமான இவ்வுலகில் பரிசுத்தரான பரமன் ஒரு பரிசுத்த தாயின் உதிரத்தில் தோன்றி மனிதரானார்... வார்த்தை மனுவுருவாகி நம்மிடையே குடி கொண்டார்...

இது ஒரு எல்லையற்ற அன்பு.. துவக்கமும் முடிவும் இல்லாத அன்பு.. பாவத்தில் வீழ்ந்து கிடந்த உலகத்தை மீட்க தானே மனிதனாகி உதித்த அன்பு…

சிந்தனை :

''தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையிம் நேசிப்பது'' என்ற உம்முடைய வார்த்தை எங்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்கிறது.. இறைவன் இயேசு சுவாமி நம் உள்ளத்தில் பிறக்கவேண்டுமென்றால், நம்முடைய கடினத்தன்மை இளகித்தான் ஆக வேண்டும்..பிறரை நேசித்துதான் ஆக வேண்டும்.. ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.. அதற்குண்டான ஆற்றலை தர ஜெபிப்போம்.. “

இயேசுவுக்கே புகழ்!  அருள் நிறைந்த மரியாயே வாழ்க!