வெஸ்பர்ஸ் என்னும் மாலை ஜெபம்.

பரிசுத்த ஆண்டவளே! உமது கிருபையுடைத்தான உதவியைத்  தந்தருளும், மாசற்ற கன்னிகையே! சகல சத்துருக்களிடமிருந்து  என்னைக்  காத்தருளும்!

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்  மகிமை உண்டாவதாக! ஆதியில் இருந்தது  போல இப்பொழுதும்  எப்பொழுதும்  என்றென்றும் இருப்பதாக ஆமென். அல்லேலூயா

சங்கீதம்

1. ஆதித்தன் ஆருடன் நான்கு
சோதி இரேகைகள் பின்னிடப்
பாக்கியம் பெற்றிலங்கின
ஆக்காஸின் சூரிய கடிகாரமே

2. வார்த்தை மாம்சமாகி
வரம்பில்லாக் கடவுள் வானோர்க்குத்
 தாழ்ந்து மனிதனை உன்னத
ஸ்தலத்துக்கு உயர்த்தினார்

3. வெய்யோன் கதிர்களுக்கிடையில்
மெய்யாய் இலங்குகிறாள் மாமரி
வைகறை உதயம் போல் அவள்
விளங்குகிறாள் உற்பவத்தில்

4. முட்களிடையில் லீலியாம்
சர்ப்பத்தின் தலையை நசுக்கினாள்
திங்களின் வதனத்தால்
தயங்குவோருக்கு ஒளியாம்

முதல்:வானத்தின் மாறாத ஒளியை உதிக்கச் செய்தேன்
எல்: பூமி முழுதும் மூடுபனியைப் போல் மூடினேன்

முதல்: ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக்  கேட்டருளும்
எல்: என்னுடைய அபயசத்தம்  உமது சந்நிதி மட்டும்  வரக்கடவது

செபிப்போமாக
புனித மரியாயே, யாரையும் கைவிடாதவரும்  புறக்கணியாதவருமான  மோட்ச இராக்கினியே!  எங்கள்  ஆண்டவராகிய  இயேசுக்கிறிஸ்துவின்  தாயே பூலோகத்துக்கு  ஆண்டவளே! உம்முடைய  கருணைக்  கண்ணால்  என்னை நோக்கி என்னுடைய பாவங்களுக்கெல்லாம்  உம்முடைய  திருக்குமாரனிடம்  இருந்து  மன்னிப்பை அடைந்து  தந்தருளும். உம்முடைய  மாசற்ற உற்பவத்தை இப்போது மிகுந்த  பக்தியுடன்  கொண்டாடுகிறபடியால் கன்னி கையான நீர் பெற்றவரும் ஏக திருத்துவத்தோடு சீவியருமாய் இராச்சிய பரிபாலனம்  செய்கிறவருமாய்  இருக்கிற இயேசுக்கிறிஸ்து நாதருடைய தயையால் நித்திய பாக்கியமாகிய சம்பாவனையை இனி அடைவேனாக. ஆமென்.

ஆண்டவளே, எம்முடைய மன்றாட்டைக்  கேட்டருளும், என்னுடைய அபயசத்தம்  உமது சந்நிதி மட்டும்  வரக்கடவது.

ஆண்டவரை வாழ்த்தக் கடவோம், இறைவனுக்குப் புகழுண்டாகக்  கடவது!

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய
இரக்கத்தினால்  நித்திய  சமாதானத்தில் இளைப் பாறக் கடவது.

ஆமென்.