மழையைப் போல வருவாயே இயேசையா வறண்டு போன பூமி நானய்யா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மழையைப் போல வருவாயே இயேசையா

வறண்டு போன பூமி நானய்யா (2)

என் வாழ்விலே விளைச்சல் இல்லையே

என் மனதிலே சாந்தி இல்லையே (2)


1. பாவங்களெல்லாம் போக்கிடுமய்யா

பயத்தை மனதிலே நீக்கிடுமய்யா (2)

இயேசு கிறிஸ்துவே என் தெய்வமே - 4

இனிய வரங்களால் என்னைக் காத்திடுவீரே - 2


2. மனக்குறையெல்லாம் தீர்த்திடுமய்யா

உடல்குறையெல்லாம் நீக்கிடுமையா (2)

இயேசு கிறிஸ்துவே குணமளிப்பவரே - 4

உனது கரங்களால் என்னைக் குணப்படுத்திடுமே - 2