இசை என்னும் அமுதை இறைவனுக்கே என்றும் சுவை தந்த செசிலியே காவலியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இசை என்னும் அமுதை இறைவனுக்கே என்றும்

சுவை தந்த செசிலியே காவலியே

பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்

பணிந்திட்டோம் அருள்பெறவே தினமும்

பாடுவோம் புகழ் பாடிடுவோம்

கூடுவோம் உம்மை நாடிடுவோம்


1. தேனினும் இனிய தமிழிசையாலே

தினமுமைப் புகழ்வோமே

தேவனை நாளும் புகழ்ந்து யாம் பாட

தேடும் உன்னருள் தாராய் எமக்கு


2. பாடகர் அனைவரின் காவலும் நீயே

பாடிடுவோம் தினமே

பாடலினாலே மறைபணி புரிய

பரனிடம் வேண்டிடுவாய் என்றும்