ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் இந்த பாஸ்கா உணவை உண்பதற்கு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆசைமேல் ஆசையாய் இருந்தேன் - இந்த

பாஸ்கா உணவை உண்பதற்கு (நான்) - 2


1. பாடுகள் துவங்கும் காலம் இது நம் கண் முன் தெரிகின்றது

பகிர்ந்திடும் விருந்து வேளையிது இங்கு அன்பு மலர்கின்றது

அன்பில் பிறந்திடும் துன்பங்கள் - மகிமையின் வாசல்கள் - 2


2. உடலின் உழைப்பும் வலிமையையும் - நாம்

பகிர்ந்தே வாழ்ந்திடுவோம்

குருதியில் கலந்த நல்லறங்கள் நம்

வாழ்வில் நிறைத்திடுவோம்

பகிர்ந்து வாழும் நெஞ்சங்கள் - பலியதன் பீடங்கள் - 2