உணவு அருந்திய பின் நன்றியறிந்த தோத்திரம்

சதாகாலத்திற்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனஞ் செய்கிறவருமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள சர்வேசுரா, தேவரீர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும், தேவரீர் எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். ஆமென். 

சுவாமீ கிருபையாயிரும்.

கிறீஸ்துவே கிருபையாயிரும். 

சுவாமீ கிருபையாயிரும். - கர்த்தர் கற்பித்த செபம்.

இப்பொழுதும் எப்பொழுதும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

எங்களுக்கு உபகாரம் செய்கிறவர்களுக்கெல்லாம் அனுக்கிரகம் செய்து நித்திய சீவியத்தைக் கட்டளையிட்டருளும் சுவாமீ. ஆமென்.