♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவா உம் தயவினிலே வாழ்ந்திட வந்தோம்
- பருவமழை பொழிகவென்று வேண்டியே நின்றோம்
- நீர் நிலைகள் பெருகவென்று வேண்டியே நின்றோம்
- பயிர்நிலைகள் செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
- உயிர்களெல்லாம் மகிழ்கவென்று வேண்டியே நின்றோம்
- நோய்நொடிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
- பசிப்பிணிகள் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
- வறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
- சிறுமையெல்லாம் ஒழிகவென்று வேண்டியே நின்றோம்
- செழுமையெல்லாம் சேர்கவென்று வேண்டியே நின்றோம்
- நீதிநெறி செழிக்கவென்று வேண்டியே நின்றோம்
- மனக் குறைகள் தீர்க்கவென்று வேண்டியே நின்றோம்
- மனித குலம் வாழ்கவென்று வேண்டியே நின்றோம்