எல்லாத் தாய்மார்களை விட அன்புள்ள தாயான திவ்விய நாதனே! அடியேன் படும் சரீர நோக்காடுகளைப் பொறுமையாய் அனுபவிக்கும் படிக்குச் செய்தருளும். என் ஆத்துமத்துக்கு நேரிடும் இக்கட்டுகளை மாற்றியருளும். சகல தீமைகளிலும் பெரிய தீமையாகிற நரக பாதாளத்தில் என்னை விழவொட்டாதேயும். தேவரீரால் நான் தள்ளப்படும் காரணமாகச் சாவான பாவத்தைக் கட்டிக் கொண்டு என் மேல் கடன் சுமத்திக் கொண்டேன். ஆயினும் தேவரீருடைய அளவிறந்த கிருபையையும், சேசு கிறீஸ்துநாதருடைய திரு மரணத்தையும், பரிசுத்த கன்னித் தாயின் வேண்டுதலையும் பார்த்து, என்னைக் கிருபாகடாட்சத்தோடு கைக்கொண்டு தேவரீரை என்றென்றைக்கும் தரிசித்து, ஸ்துதித்து வாழ்த்தத்தக்கதாகப் பரகதியில் சேர்த்தருள வேண்டுமென்று மிகவும் கெஞ்சி மன்றாடுகிறேன் சுவாமீ. ஆமென்.