சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேதகற்பனைகள் பத்து:
1. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.
2. சர்வேசுரனுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.
3. சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோகப் பாவஞ் செய்யாதிருப்பாயாக.
7. களவு செய்யாதிருப்பாயாக.
8. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10. பிறர் உடைமையை விரும்பாதிப்பாயாக.
இந்தப்பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்:
1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.
2. தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது. ஆமென்.