சேசுநாதரைக் குறித்து முப்பத்து மூன்று மணிச் செபம் செய்கிற வகையாவது
சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமீ, நீர், மனுஷருமாய் நன்றியில்லாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீ ருடைய சந்நிதியிலே இருந்து செபம் செய்யப் பாத்திரமாகாத வர்களாயிருந்தாலும், தேவரீருடைய அள வறுக்கப்படாத கிருபாகடாட்சத்தை நம்பிக்கொண்டு சேசுநாதருக்குத் தோத்திர மாக முப்பத்து மூன்று மணிச் செபம் செய்ய ஆவலாயிருக்கிறோம். இப்படிப்பட்ட செபத்தைப் பத்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய உதவியை கட்டளை செய்தருளுஞ் சுவாமீ.
சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசம் என்கிற புண்ணியம் அஸ்திவாரமாயிருக்கிறபடியினாலே முதலில் விசுவாச மந்திரம் சொல்லுகிறது.
மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதசுவாமியுடைய மூன்று பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று புண்ணியங்களைக் கேட்கிறது.
மெய்யான சர்வேசுரனாயிருக்கிற என் ஆண்டவரே, எங்களிடத்தில் தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். பர.
மெய்யான சர்வேசுரனாயிருக்கிற என் ஆண்டவரே, எங்களிடத்தில் தேவ நம்பிக்கை என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். பர.
மெய்யான மனுஷருமாயிருக்கிற எங்கள் ஆண்டவரே, எங்களிடத்திலே தேவ சிநேகம் என்கிற புண்ணியம் உண்டாகி அதிகரிக்கும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும். பர.திரி.
பரிசுத்த கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவுக்குக் கபிரியேல் என்கிற சம்மனசானவர் மங்களவார்த்தை சொன்ன மங்கள வார்த்தை செபம் சொல்லுகிறது.
1-வது மன்றாட்டு
சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமீ, தேவரீர் அருளிச்செய்த திவ்விய கற்பனைகளுக்கு விரோதமான குற்றங்களைச் செய்தோமே, அவைகளை எல்லாம் தேவரீருடைய மட்டில்லாத கிருபையினாலே பொறுத்துக்கொண்டு இனிமேல் அடியோர்கள் அடக்கத்தோடு நடக்கவும், தேவரீருடைய தோத்திரம் விக்கினமின்றி எங்கும் பரவவும், உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதியில் இளைப்பாற்றி அடைந்து மோட்சபாக்கியத்தைச் அடைந்து கொள்ளவும் கிருபை செய்தருளும் சுவாமீ. பத்து பர.ஒரு திரி.
பரலோகத்திற்கு இராக்கினியாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, பாவிகளாயிருக்கிற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் உமது தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமாரன் சேசுநாதர் திருப்பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகிறோம். அருள்.
2-வது மன்றாட்டு
சர்வத்திற்கும் வல்ல சர்வேசுரா சுவாமீ! நாங்கள் சுபாவமாய் மகா பலவீனருமாய்த் சோதனைகளால் இழுக்கப்பட்டவர்களுமாயிருக்கிறபடியினாலே உலகம், பசாசு, சரீரம் எனப்படுகிற ஞான சத்துருக்களை நாங்கள் செயித்துப் பாவ வழிபோகாமலும், ஐம்புலன்களுடைய அலைக்கழிப்புக்கு இணங்காமலும் ஒறுத்தல் உபவாசத்தால் உமது வேத வழிப்பட்டுச் அடக்கத்துடன் நடக்கக் கிருபை செய்தருளும் சுவாமி. பத்து பர. ஒரு திரி.
பூலோகத்திற்கு ஆண்டவளாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, பர்விகளாயிருக்கிற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் உமது தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமாரன் சேசுநாதர் திருப்பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகிறோம். அருள்.
3-வது மன்றாட்டு
சர்வத்திற்கும் வல்ல சர்வேசுரா சுவாமீ! நாங்கள் பிரதான புண்ணியங்களாகிய விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகத்தில் உயரவும், இஸ்பிரீத்துசாந்துவின் ஞான ஒளிகொண்டு பேரின்பத்தின் பாதையைப் பிடிக்கவும், உலகத்தில் உத்தியோகத் தொழிற்களைச் செய்கையில் எங்கள் மனது உம்மையும் உம்முடைய நித்திய இராச்சியத்தையும் மாத்திரம் சிந்தித்து நிற்கவும், எல்லாக் கிரியைகளையும் உமக்காகவே செய்யவும் கிருபை செய்தருளும் சுவாமீ. பத்து பர.ஒரு திரி.
விடியற்காலத்தின் நட்சத்திரமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, பாவிகளாயிருக்கிற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த முப்பத்து மூன்றுமணிச் செபத்தையும் உமது தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமாரன் சேசுநாதர் திருப் பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகிறோம். அருள்.
பிரார்த்திக்கக்கடவோம்
அவதரித்த தேவனுமாய்க் கிருபை நிறைந்த கர்த்தருமாய் மதுரமுள்ள இரட்சகருமாயிருக்கிற அன்புக்குரிய சேசுவே, தேவரீர் இவ்வுலகத்தில் வாசம் பண்ணின முப்பத்து முன்று வருஷகாலம் மனிதர்களுக்குத்திவ்விய மாதிரிகையாகச் செய்து வந்த புண்ணியங் களை அடியோர்கள் அநுசரிக்கவும், தேவரீர் எங்களை இரட்சிக் கத்தக்கதாக உம்முடைய திரு இரத்தமெல்லாஞ் சிந்தி அடைந்த கடின மரணத்தின் பலனாலே நாங்கள் மோட்சத்தின் பேரின்ப பாக்கியத்தைப் பெற்று உம்மை என்றென்றைக்கும் தரிசித்து நேசித்து துதிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமீ. ஆமென்.