♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே
சந்தோஷமாகப் பாடி உன் தாள் பணியவே
1. பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரணத் தாயே
மேலோனின் உள்ளந்தன்னில் நீ வீற்றிருந்தாயே
2. தூயோர்களாம் எல்லாரும் நீ தோன்றும் நாளினை
ஓயாமல் நோக்கிப் பார்த்தே தம்முள் மகிழ்ந்தாரே
3. வானங்கள் கீதம் பாட நல் மாந்தர் தேடிட
ஊனஞ்செய் பாம்பு ஓட நீ உற்பவித்தாயே
4. நாவுள்ள பேரெல்லோரும் உன் நாமம் போற்றுவார்
பாவுள்ள பேர்களோ உன் மேற் பாட்டிசைப்பரே
5. நல்தேவ பத்தரான மெய் நாவலர் சூழ
பற்றோடுன் தோத்ரஞ் சொல்வர் நற் பாப்புமார்களும்
6. ராசாதி ராச ரோடு மற்றெத் திறத்தோரும்
தேசாதி தேச மெங்கும் எத்திக்கும் பாடுமே