குழந்தை சேசுநாதருடைய பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும் - மற்றதும்.

சர்வலோகம். படைக்கப்படுமுன்னே இருந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

அளவில்லாத காலத்தையுடைய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

பிதாவாகிய சர்வேசுரனுக்கு உகந்த பிள்ளையாயிருக்கிற திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

மனிதருக்குப்பிரயோசனமாகப் பரலோகத்திலிருந்து இறங்கிவந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாகி உற்பவித்துப் பிறந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

மனிதரை இரட்சிக்க அடிமை வேஷமெடுத்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

உமது தாயார் உதரத்திலிருந்து எலிசபெத்தம்மாளை மினவி அவள் உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பரை இஸ்பிரீத்துசாந்துவினாலே நிரப்பி அர்ச்சித்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

உமது தாயார் உதரத்தில் ஒன்பது மாதம் அடைபட்டிருந்து பேறுகாலத்துக்குக் காத்துக்கொண்டிருந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

உமது பிறப்பைக் காணத்தக்கதாக உமது தாயாருடைய இருதயத்திலும் அவளுடைய பத்தாவுடைய இருதயத்திலும் மிகுந்த ஆசை கிளம்பச் செய்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

பிதாப்பிதாக்கள் தீர்க்கதரிசிகள் முதலான இஸ்ராயேல் சனங்களால் மிகவும் ஆசிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

முப்போதும் கன்னியாயிருந்தவளிடத்தினின்று பிறந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

சகல மனிதரையும் விட சவுந்தரியமுள்ள திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

நீர் பிறந்த உடனே உமது தாயார் கையினால் ஏந்திக் கந்தைத் துணியினால் பொதிந்து மாட்டுக்கொட்டிலிலே கிடத்தி அவளாலும் அவள் பத்தாவாலும் மகா தாழ்ச்சியோடு வணங்கப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

பிறந்தவுடனே சகல சம்மனசுகளால் சேவிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

இடையராலே உத்தம ஆராதனை ஊழியம் செய்யப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

சலோமோன் முதலான சகல சாஸ்திரிகளைவிட அதிக புத்தியுள்ள திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

மேலான நன்மைகளாலும் சுபாவ நன்மைகளாலும் நிறைவு பெற்ற திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

இராசாக்களுடைய இராசாவாகிய திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

சம்மனசுகளுக்கும் மனிதருக்கும் ஆண்டவரான திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

மனித சுபாவத்தை எடுத்ததினாலே எங்கள் தமையனாரான திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

கூடப்பிறந்தவர் போல மனிதரோடு சஞ்சரித்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

பிதாவாகிய சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்து பிறந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

மனிதரைத் தங்களுக்குள்ளே ஒன்றித்திருக்கச் செய்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

நல்ல மனதைக் கைக் கொள்ளத்தக்கதாக ஞான உதவியை செய்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

நல்ல மனதை வருவிக்கிற திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

நல்ல மனதை கைக்கொள்ளத்தக்கதாக ஞான உதவியைக் கொடுக்கிற திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

தரித்திரமுள்ள பிறப்பைக் கொண்டு ஆஸ்தியை நிந்தித்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

கஸ்தியுள்ள பிறப்பைக் கொண்டு சுகத்தைத் தாழ்த்தின திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

விருத்தசேதனத்தில் சிந்தின திருவிரதத்தினாலும் சேசுவென்கிற திருநாமத்தினாலும் உலக இரட்சணியத்தைக் காண்பித்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

நட்சத்திரத்தைக் கொண்டு மூன்று இராசாக்களுக்கு உமது பிறப்பை வெளிப்படுத்தி அவர்களால் வணங்கப்பட்டு, பொன் தூப மீறைகளால் காணிக்கை இடப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

கோயிலிலே காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டப் போது அர்ச். சிமெயோன் கையினால் ஏந்தப்பட்டுத் தீர்க்கதரிசினியாகிற அன்னம்மாளாலே உலகத்தை இரட்சிக்கிறவர் என்று யூதர்களுக்கு வெளிப்படுத்தின திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

ஏரோதின் நிஷ்டூரத்தில் அகப்படாதபடிக்கு எகிப்து இராச்சியத்திற்கு எழுந்தருளுகிறபோது கொல்லப்பட்ட மாசில்லாத குழந்தைகளுடைய இரத்தத்தால் பிரசித்தமாக்கப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

எகிப்து இராச்சியத்திலே பிரவேசித்தபோது அங்கேயுள்ள போய்ச் சிலைகள் எல்லாம் விழுந்து உடைந்துபோக, இரகசியமாய் முதல் அற்புதம் செய்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

அதில் ஏழு வருஷம் பரதேசியாயிருந்து முதல் வார்த்தை பேசி முதல் அடிவைத்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

எகிப்து இராச்சியத்தை விட்டு யூதேயா நாட்டுக்குப்போகிற தாழ்ச்சியுள்ள பிறப்பைக்கொண்டு ஆங்காரமுள்ள உலக. மகிமையைக் கீழ்ப்படுத்தின திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

பிரயாணத்தில் வெகு பிரயாசமும் இளைப்பும் அனுபவித்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

நசரேத் தென்கிற பட்டணத்திலே உமது தாயாருக்கும் அர்ச். சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து, சொற்படி கேட்டு, தரித்திரத் தோடும் பிரயாசத்தோடும் இருந்து ஞானத்திலும் பிரயாசத்திலும் மனிதர் நடக்கவேண்டிய நெறியை நடந்து காட்டிப் படிப்பித்துக் கொண்டுவந்த திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

எருசலேம் என்கிற பட்டணத்தில் மூன்று நாள் காணாது போய் மூன்றாம் நாள் மகா சந்தோஷத்தோடு கண்டுபிடிக்கப்பட்ட திவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை தயை செய்து இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற - மற்றதும். 

சேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

சேசுவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும். 

முதல்: இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும். 

துணை: ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

திவ்விய குழந்தையாகிற சேசுநாதரே! தேவரீர் நீசப்பாவி களாயிருக்கிற எங்கள் பாவங்களைப் பாராமல் நாங்கள் கேட்கிற மன்றாட்டுகளுக்குத் திருச்செவி கொடுத்து உமது பேரிலே நாங்கள் வைக்கத்தக்க பக்தியை எங்கள் இருதயத்திலே பிறப்பிக்கத்தக்கதாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.