தந்தையும் தாயும் மறந்திட்டாலும் மறந்திடாத தெய்வமே
நண்பரும் உறவும் பிரிந்திட்டாலும் பிரிந்திடாத இயேசுவே
உனது இரக்கம் இன்றியே உயிர்கள் வாழ்வது இல்லையே
கண்ணின் மணியாய் சிறகின் நிழலில்
அணைத்துக் காக்கும் ஆயனே
1. காலை மலர்ந்து மாலைக்குள் வாடி மடியும் மலரைப் போல்
எந்த உறவும் முடிந்திடும் உந்தன் உறவோ தொடர்ந்திடும்
கடலும் தீரும் காற்றும் ஓயும் கைவிடாத பேரன்பே
2. பாலை நிலமும் பூத்திடும் பாறையும் நீர் சொரிந்திடும்
உந்தன் கிருபை போதுமே எந்த நிலையும் மாறுமே
கல்லும் கனியும் இறப்பும் உயிர்க்கும்
வியக்க வைக்கும் அருளன்பே