975 புனித அந்தோனியார் ஆலயம், திருநயினார்குறிச்சி

      

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: திருநயினார்குறிச்சி, அம்மாண்டிவிளை அஞ்சல் 

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: முட்டம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: இயேசுவின் திருஇருதய ஆலயம், அம்மாண்டிவிளை

பங்குத்தந்தை அருட்பணி. ரவி காட்சன் கென்னடி

குடும்பங்கள்: 65

அன்பியங்கள்: 4

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி

செவ்வாய் மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், அசனவிருந்து 

திருவிழா: ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில்.

பேருந்து வழித்தடம்:

திங்கள்சந்தை 47, 46C,12F, 12K, 12M

நாகர்கோவில் 12F, 12K, 14C, 14B, 14F

இறங்கும் இடம்: திருநயினார்குறிச்சி.

Church location map: St. Antony's Church

https://maps.app.goo.gl/h56tveYw7xjpb4vN8

வரலாறு:

மண்பாண்ட தொழிலில் சிறந்து விளங்கிய திருநயினார்குறிச்சி மக்களுக்கு, புனித மறைச்சாட்சி தேவசகாயத்தின் கிறிஸ்துவ நம்பிக்கை, இவர்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு வித்திட்டிருக்கிறது. 1750ம் ஆண்டுகளில் கிறிஸ்துவை நம்பிய மக்கள் சிலர் கற்சிலுவை அமைத்து ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். 1810 ஆம் ஆண்டில் ஓலையால் வேயப்பட்ட ஆலயம் அமைத்து அதில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

1927 ஆண்டு புனித அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 1932ம் ஆண்டு ஓட்டு

கூரையுடன் கூடிய ஆலயம் உருவெடுத்தது. 

கொல்லம் மறைமாவட்டத்தோடு இருந்த காலகட்டத்தில் காரங்காடு பங்கின் கிளையாக செயல்பட்டது. அதன் பிறகு மாங்குழி பங்கின் கிளையாகவும் செயல்பட்டது. தொடக்கத்தில் வாரத்திற்கு ஒருமுறை திருப்பலி நடைபெற்றது. பின்னர் வாரத்திற்கு இரண்டு முறை திருப்பலி நடைபெற்றது. புனித அந்தோனியார் ஆலயம் என்பதால் செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருப்பலிக்கு ஏராளமானோர் அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்து வந்தனர். அற்புதங்கள், அதிசயங்கள் நிகழ்வதை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். 1940ம் ஆண்டு திருநயினார்குறிச்சி சந்திப்பில் ஒரு சிறு குருசடி உருவாக்கப்பட்டு, தினமும் மாலை வேளையில் ஜெபமாலை ஜெபிக்கப் பட்டது.

1985 ஆம் ஆண்டு ஆலய கோபுரம் மற்றும் பீடம் சரிசெய்யப்பட்டு, இவ்வாண்டு முதல் சரல் பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

1992 ஆம் ஆண்டு முதல் தனிப்பங்காக செயல்பட துவங்கியது. மீண்டும் சறுக்கல்களை சம்பாதித்தது. இடைக்காலத்தில் கிளைப் பங்காக செயல்பட்டு, 2011ம் ஆண்டு முதல் தனிப்பங்காக வளர்ச்சியடைய துவங்கியது.

 2014ம் ஆண்டு திருநயினார்குறிச்சி சந்திப்பில் குருசடி புதிதாய் கட்டியெழுப்பப்பட்டது. 2019ம் ஆண்டு ஜனவரி 26ல் புதிய ஆலய பணிக்கான

அடிக்கல் நாட்டப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி.‌ லியோன் S. கென்சன் அவர்களின் முயற்சி மற்றும் வழிகாட்டலில், திருநயினார்குறிச்சி இறைமக்கள், உள்ளூர், வெளியூர் மற்றும் பல ஆலய இறைமக்கள் வழங்கிய நன்கொடைகள் இவற்றைக் கொண்டு நெடிதுயர்ந்த அழகிய ஆலயம் கட்டப்பட்டு, 13.04.2024 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.

பல்சமய ஒன்றிப்பு உறவில் புத்துயிராக்கம்:

இணைந்து இருப்பது, இணைந்து இயங்குவது, இணைந்து வாழ்வது இறைவனுக்கு பிரியமானது. திருநயினார்குறிச்சியில் வாழ்கின்ற அனைத்து மதத்தினரும் இணைந்து வாழ்வது மிகச் சிறப்பு நிலையை இப்பங்கிற்கு உருவாக்கியுள்ளது. 

புனித அந்தோனியார் திருவிழாவில் சப்பர (தேர்) பவனியின் போது குருசடி சந்திப்பு பகுதியில் சப்பரம் நின்றதும், இந்து சமயத்தை சார்ந்த மக்கள் ஆரத்தி எடுப்பதும், தங்களது நம்பிக்கையின் வெளிப்பாடாக தேங்காய் உடைப்பதும், வழிபடுவதும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளது. மேலும் சப்பரத்திற்கு தோள் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. பெண்கள் இயக்கம்

4. கத்தோலிக்க சேவா சங்கம்

5. வழிபாட்டு குழு

6. பாலர் சபை

7. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

8. இளைஞர் இயக்கம்

9. பங்கு அருட்பணிப் பேரவை

10. மறைக்கல்வி

11. பாடகர் குழு

12. பீடச்சிறார் 

பங்கின் கெபி& பூங்கா:

புனித அந்தோனியார் பூங்கா

புனித அந்தோனியார் கெபி.

புதுமைகள் பல புரியும் கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. ரவி காட்சன் கென்னடி அவர்களின் வழிகாட்டலில் ஆலய நிர்வாகிகள்.

ஆலய வரலாறு: முன்னாள் பங்குதந்தை அருட்பணி. லியோன் கென்சன் அவர்கள்.