தூய அடைக்கல அன்னை ஆலயம்
இடம் : அடைக்கலாபுரம், மல்லசந்திரம், தேன்கனிக்கோட்டை, 635107
மாவட்டம் கிருஷ்ணகிரி
மறைமாவட்டம் : தருமபுரி
மறைவட்டம் : தேன்கனிக்கோட்டை
நிலை : பங்குதளம்
பங்குத்தந்தை: அருட்பணி. செபாஸ்டின், V.C
குடும்பங்கள்: 225
அன்பியங்கள்: 7
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு காலை 07:00 மணி மற்றும் 08:30 மணி திருப்பலி
திங்கள், புதன், வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி
செவ்வாய் மாலை 06:30 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
சனி மாலை 06:30 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி சிறப்புத் திருப்பலி
திருவிழா: ஈஸ்டர் பண்டிகையை அடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை.
மண்ணின் இறையழைத்தல்கள் :
Fathers:
1. Fr. Lucas
2. Fr. Mathiyas
3. Fr. Arokia Dass
4. Fr. Xavier Anthony Samy
5. Fr. Emmanuel
Brothers:
1. Bro. Albin Kumar
Sisters:
1. Sr. Gabriel Mary
2. Sr. Shyney Angel
3. Sr. Anthonyammal
4. Sr. Ante Vimala Mary
5. Sr. Ancy Jeniffer
6. Sr. Nirmala Mary
7. Sr. Jayarakkini
8. Sr. Regina Jose
9. Sr. Amala
10. Sr. Jayarakkini
11. Sr. Anupama Rani
12. Sr. Mathaleena
13. Sr. Wilma
வழித்தடம் : தேன்கனிக்கோட்டை- கெளமங்கலம் சாலை; தேன்கனிக்கோட்டையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது கலகோபசந்தரம். அங்கிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் உள்ளது அடைக்கலாபுரம்.
Location map: Adaikala Matha Church - Adaikalapuram
https://maps.app.goo.gl/FhvVtUNz1NvC17wC6
வரலாறு :
வின்சென்ட்டிக்கன் சபை 1904-ம் ஆண்டில் கேரளாவில் தொட்டக்கம் என்ற ஊரில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் உள்ள இளம்பள்ளி என்ற ஊரில் இதன் தலைமை இடமாக செயல்பட்டு வருகிறது. இந்த சபை மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் புனித சூசையப்பர் மாகாணத்தில் கீழுள்ளுள்ள, புனித சவேரியார் பிராந்தியம் உருவாக்கப்பட்டு, 1965இல் அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செல்வநாதர் அவர்களின் அழைப்பின் பேரில் அடைக்கலாபுரம் என்ற கத்தோலிக்க கிராமத்தில் தனது இறைச் செயல்களை ஆரம்பித்தனர்.
ஆரம்ப காலத்தில் மத்திகிரி மற்றும் தாசரப்பள்ளியில் உள்ள குருக்களின் மறைப்பணியால் அடைக்கலாபுரத்தில் கத்தோலிக்கம் வேரூன்றியது. பின்னர் 1966 ஆம் ஆண்டு டே பால் என்ற ஆரம்பப் பள்ளி இந்த கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் 20.06.1966 அன்று வின்சென்ட் சபை செயலாளர் அருட்பணி. ஜேக்கப் கல்லாசக்கல் மூலமாக தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 23.04.1968 அன்று அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு V. S. செல்வநாதர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.
அருட்பணி. ஜோசப் பப்பாக்கள் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த இந்த அடைக்கலாபுரம் புனித சவேரியார் பிராந்தியம் மென்மேலும் வளர்ந்து, வடக்கில் கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்கள் வரை பரவியது. பின்னர் வின்சென்டிய சபை செயல்பாட்டின் தொடர்ச்சியாக, சேலம் ஆயர் தேன்கனிக்கோட்டையில் ஆலயம் தொடங்க உதவினார். பல ஆண்டுகளாக பங்காலயமாக செயல்பட்டு வந்த இந்த ஆலயமானது, தற்போது தேன்கனிக்கோட்டையில் ஒரு தியான மையமாகவும், குரு பயிற்சிப் பள்ளியாகவும் செயல்பட்டு வருகின்றது.
துறவற இல்லங்கள்:
வின்சென்ட் சகோதரர்கள் இல்லம்
குளூனி கன்னியர்கள் இல்லம்
பள்ளிக்கூடங்கள்:
டே பால் உயர்நிலைப் பள்ளி
டே பால் துவக்கப் பள்ளி
பங்கின் கெபி:
தூய லூர்து மாதா கெபி
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. புனித வின்சென்ட் தே பவுல் சபை
2. மரியாயின் சேனை
3. இளையோர் இயக்கம்
அண்டி வருவோருக்கு அடைக்கலம் தருகிற அடைக்கலாபுரம் தூய அடைக்கல அன்னை ஆலயம் வாருங்கள்...! இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...!!
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின், VC அவர்கள்
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: திரு. Yesudass Joseph கிருஷ்ணகிரி.