922 புனித அமல அன்னை ஆலயம், சிதம்பராபுரம்

       


புனித அமல அன்னை ஆலயம்

இடம்: சிதம்பராபுரம், குருவிகுளம் வழி, தென்காசி -627754

மாவட்டம்: தென்காசி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: சங்கரன்கோவில்

நிலை: பங்குதளம்

கிளைப்பங்குகள்:

1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஜெருசலேம் தர்மநகர்

2. உலக மீட்பர் ஆலயம், ஜேசுநாதபுரம்

3. கிறிஸ்து அரசர் ஆலயம், செவல்குளம்

4. புனித அந்தோனியார் ஆலயம், வாகைக்குளம்

ஆலயம் இல்லாத கிளை கிராமங்கள்:

5. அழகனேரி

6. மலையான்குளம்

7. கருத்தானூர்

8. இலந்தைகுளம்

9. நாலுவாசன்கோட்டை

10. கோபாலகிருஷ்ணபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. S. அந்தோணி ராஜ்

குடும்பங்கள்: 100 (கிளைப்பங்குகள் சேர்த்து 250)

அன்பியங்கள்: 4 (கிளைப்பங்குகள் சேர்த்து 10)

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

திங்கள், செவ்வாய், புதன், வியாழன், சனி திருப்பலி காலை 06:00 மணி 

வெள்ளி திருப்பலி மாலை 07:00 மணி

திருப்பலிக்கு முன்பு மற்றும் பின்பும் ஒப்புரவு திருவருட் சாதனம் வழங்கப்படும்

சனிக்கிழமை காலை 06:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி

ஆங்கில மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:30 மணி ஜெபமாலை, அன்னையின் தேர்பவனி, திருப்பலி, மாதா பிரார்த்தனை, நற்கருணை ஆசீர் தொடர்ந்து இரவு உணவு

ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07:00 மணி திருப்பலி, திருமணி ஆராதனை

ஆங்கில மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு 09:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை இரவு ஜெபம் நடைபெறும்.

திருவிழா: மே மாதத்தில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. V. ஜேம்ஸ், SVD (செங்கோட்டை)

2. அருட்பணி. M. சார்லஸ், SJ (இறப்பு)

3. அருட்பணி. J. சகாய ஜாண், பாளை மறைமாவட்டம்

4. அருட்பணி. M. ஆரோக்கிய சாமி சேவியர், SJ (திருச்சி)

5. அருட்பணி. J. விசுவாச ஆரோக்கிய ராஜ், பாளை மறைமாவட்டம்

6. அருட்பணி. A. சாக்கோ வர்கீஸ், பாளை மறைமாவட்டம்

7. அருட்பணி. M. S. ஜேக்கப், SJ (சென்னை)

8. அருட்பணி. M. ஜாண்சன், ஆக்ரா மறைமாவட்டம்

9. அருட்பணி. P. ஜெகன், பாளை மறைமாவட்டம் (அமெரிக்கா)

10. அருட்பணி. M. யூஜின், MMI (தெற்கு சூடான்)

11. அருட்பணி. I. ஆரோக்கிய ராஜ், பாளை மறைமாவட்டம் 

12. அருட்பணி. X. அற்புத ராஜ், CM (ஜெர்மனி)

13. அருட்பணி. A. இம்மானுவேல் பிரான்சிஸ் ராஜா, பாளை மறைமாவட்டம் 

14. அருட்பணி. S. அருள் லூர்து எட்வின், பாளை மறைமாவட்டம் 

15. அருட்பணி. M. அந்தோணி செல்வம், SJ (ரோம்)

16. அருட்பணி. A. ஜாண் பிரிட்டோ, SFX (மங்களூர்)

17. அருட்பணி. P. ஆல்பர்ட், ஜான்சி மறைமாவட்டம்

18. அருட்சகோ. M. சவரிமுத்து, SJ (திருச்சி)  

கிளை கிராம மைந்தர்கள் 

19. அருட்சகோ. S. மைக்கிள், Cr சபை (ஜேசுநாதபுரம்) (செங்கல்பட்டு)

20. அருட்சகோ. S. லூர்து உபகாரம், Cr சபை (ஜேசுநாதபும்) (திருச்சி)

 அருட்சகோதரிகள்: 

1. Rev. Sr. வி. ரூபல்லா, வியாகுல அன்னை சபை

2. Rev. Sr. ம. எமரென்சியா ஸ்டெல்லா மேரி, ஞானபிரகாசியார் சபை

3. Rev. Sr. ம. ஆரோக்கிய மேரி (கிளாடிஸ்), ஏழை இயேசுவின் ஊழியர் சபை

4. Rev. Sr. அ. ரீட்டா, திருச்சிலுவை சபை

5. Rev. Sr. அ. ஆரோக்கிய மேரி, திருச்சிலுவை சபை

6. Rev. Sr. ம. பிரான்சிஸ் மேரி, திருச்சிலுவை சபை

7. Rev. Sr. சின்ன ராணி, திருச்சிலுவை சபை

8. Rev. Sr. கோ. பனிமயம், அமலோற்பவ மாதா சபை

9. Rev. Sr. ம. சசிகலா, அமலோற்பவ மாதா சபை

10. Rev. Sr. செ. ஜூலியட், அமலோற்பவ மாதா சபை

11. Rev. Sr. ச. புஷ்பம், புனித அன்னாள் சபை

12. Rev. Sr. ஆ. மணல் செல்வி, வியாகுல அன்னை சபை 

13) Rev. Sr. P. சகாய ராணி, வியாகுல அன்னை சபை

கிளை கிராம அருட்சகோதரிகள் 

14. Rev. Sr. ஏஞ்சல் ஜெயமேரி, அமலோற்பவ மாதா சபை (ஜெருசலேம் தர்மநகர்)

15. Rev. Sr. ஜெயசீலி, அமலோற்பவ மாதா சபை (செவல்குளம்) 

16). Rev. Sr. அந்தோணியம்மாள், அமலோற்பவ மாதா சபை (செவல்குளம்)

வழித்தடம்: திருநெல்வேலி -சங்கரன்கோவில். சங்கரன்கோவில் -கோவில்பட்டி சாலையில் 10கி.மீ தொலைவில் சிதம்பராபுரம் அமைந்துள்ளது.

Location map: https://maps.app.goo.gl/4ZHqyZD4as84WkF17

சிதம்பராபுரம் அறிமுகம்:

செந்நெல் விளைந்து திக்கெட்டும் சீர்பரப்பும் மாவட்டமாம் திருநெல்வேலியில் இருந்து பிரிந்த தென்காசி மாவட்டத்தில், திருநெல்வேலிக்கு நேர் வடக்கே 55 கி.மீ. தொலைவில் சங்கரநயினார் கோவில் என்ற நகரம் உண்டு. தமிழ் நாட்டிலேயே இந்நகர் மிளகாய்வற்றல், பருத்தி, பூக்கள் ஏற்றுமதிக்கு சிறந்த வாணிபக்கூடமாக விளங்குகிறது. சுல்தான் பிரியாணிக்கும் தனி மணம் உண்டு. முன்பு சென்னை வரை பிரியாணி சென்றதாக கூறுவது உண்டு. புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும்.

அந்நகருக்குக் கிழக்கே செல்லும் சாலையில் 9 கி.மீ. சென்று தெற்கே திரும்பி 2 கி.மீ. சென்றால், அமல அன்னை அருள்பாலிக்கும் திருக்கோவிலைச் சார்ந்து சிதம்பராபுரம் என்ற சிற்றூர் உள்ளது.  இவ்வூர் கல்வி, கலாச்சாரம், விவசாயம், வியாபாரம் இவற்றோடு மட்டுமின்றி உன்னதமான இறைப்பற்றிலும் சிறந்து விளங்குவதையும் கண்கூடாகக் காணலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலய வரலாற்றைப் படிப்போம் வாருங்கள்…

வரலாறு:

மூதாதையரின் வருகை:

18ம் நூற்றாண்டிலே சிதம்பராபுரம் மக்கள் கிறிஸ்துவைக் கண்டடைந்தனர்.

அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் வெள்ளாங்குழி என்ற கிராமம் உள்ளது. இவ்வூரில்தான் வெற்றிலைக் கொடி விவசாயம் செய்து நான்கு சகோதரர்கள் ஒற்றுமையுடனும், செல்வந்தர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நமது தமிழக மண்ணில் காலடி எடுத்து வைத்த இயேசுசபை அறிஞர்தான் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் (1680-1756). இவர் இலத்தீன், கிரேக்கம், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மானியம், ஹிப்ரூ, போர்த்துக்கீசியம், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் புலமை பெற்ற பன்மொழி அறிஞர்.

தமிழகத்திற்கு அவர் வந்தபோது தமிழின் மேன்மையும் தொன்மையும்அறிந்த பன்மொழிப் புலவர் அவ்வறிஞர் பெருமகனார், முதன்முதலில் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். தனது மறைபரப்புப் பணியோடு தமிழுக்கும் பெரும் சேவை ஆற்றியவர் என்பதை தமிழுலகம் நன்றியோடும் பெருமையோடும் நினைத்துப் பார்க்கிறது. வெளிநாட்டவராக இருந்தாலும், தனது கடின உழைப்பாலும், தமிழின் மேல் இருந்த பற்றாலும் மறைபரப்புப் பணியின் ஈடுபாட்டாலும் வீரமாமுனிவர் 'தேம்பாவணி' என்ற காப்பியத்தைப் படைத்திருக்கிறார். இவரின் திறமையைப் போற்றி மதுரைச் சங்கப்புலவர்கள் ‘செந்தமிழ்த் தேசிகர்”, 'வீரமாமுனிவர்' என பட்டங்கள் சூட்டினார்கள். அவர் நமது மண்ணின் சிறந்த மருத்துவமுறையான சித்த மருத்துவத்திலும் ஆழ்ந்த புலமைப் பெற்றிருந்தார். கி.பி.1711 இல் அத்தகைய இயேசு சபை அறிஞர் பெருமகான் மறைபரப்புப் பணிக்காக கால்பதித்த பல மாவட்டங்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மற்றும் தென்காசி.

"நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்ற இயேசுவின் கட்டளையை சிரமேற்கொண்டு வறியோர்க்கும் நல்வழிகாட்டிய உத்தமகுருவாக வீரமாமுனிவர் திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்) குருக்கள்பட்டியில் தங்கி மறைபரப்புப் பணி ஆற்றினார்.

அம்முனிவரின் கவின்மிகு பிரசங்கங்களையும், முன் மாதிரியையும் கவனித்த வந்த கணியான் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீட்பு அடைய கிறிஸ்துவை அறிய வேண்டுமென்று வீரமாமுனிவரிடம் ஞான உபதேசம் பயின்று, திருமுழுக்கு பெற்றார். முனிவரடிகள் இவருக்கு ஞானேந்திரம் என்று பெயரிட்டு போகுமிடமெல்லாம் தம்முடனே அழைத்துச்சென்று தக்கபயிற்சி கொடுத்து வெள்ளாங்குழிக்கும், அதைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளுக்கும் உபதேசியாராக நியமித்தார்.

ஞானேந்திரம் நல்ல உழைப்பாளி. 'தான் பெற்ற இன்பம் யாவரும் பெற வேண்டும்` என்று அயராது உழைத்தார். இவரது உழைப்பின் பயனே முதலில் குறிப்பிட்ட நான்கு சகோதரர்களில் இருவருக்கு ஞானபோதகம் கற்பிக்கப்பட்டு, அருள்பணி. வீரமாமுனிவரால் இருவருக்கும் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. அவர்களில் மூத்தவருக்கு ஞானேந்திரம் என்றும், இளவலுக்கு சவரிமுத்து என்றும் பெயரிடப்பட்டது.

இதை அறிந்த அவர்களது சுற்றத்தார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். ஆகவே மூத்தவரான ஞானேந்திரம் சங்கரன்கோவிலுக்குப் பக்கத்திலுள்ள சிதம்பராபுரத்திற்கு, கி.பி.1715 களில் செல்வாக்காக வாழ்ந்துவந்த தனது சகோதரர்களிடம் வந்தார். அங்கேயே பெண் எடுத்து தனது குடும்பத்தை இறைவனது அருளால் பலுக செய்தார். இளையவரான சவரிமுத்து  செங்கோட்டை அருகில் உள்ள தவணை என்ற ஊரிலும் குடியேறினார்.

இருவரும் ஞானஸ்தானம் பெற்றது 1715 வருடம் என்றும், 1878 சேர்ந்தமரம் முதல் பங்கு குருவாக வந்த அருட்பணி. இஞ்ஞாசிநாதர் சுவாமிகள் சுமார் 40 ஆண்டுகளாக பங்கு குருவாக பணிபுரிந்த காலத்தில், சிதம்பராபுரம் அவரது பங்கு விசாரணைக்குட்பட்ட கிராமமாக இருந்துள்ளது எனவும். இந்த காலகட்டத்தில் 1890 ஆம் ஆண்டில் ஓலைக் குடிசை ஆலயம் கட்டப்பட்டது என்றும். திரு கே.வி பிரான்சிஸ் சேவியர் 29.06.1953 இல் தான் எழுதிய 'சேர்ந்தமரம் புனித இராயப்ப சின்னப்பர் திரு ஸ்தல மான்மியம்' என்ற நூலில் (u 7,8,17 ) குறிப்பிடுகிறார்.

இதிலிருந்து 1715 களிலேயே சிதம்பராபுரம் மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என்பது தெரியவருகிறது. பின்னர் இலந்தை குளம் மற்றும் நாஞ்சில் நாட்டு பகுதிகளில் இருந்தும் மக்கள் திருமண உறவுகள் வழியாக சிதம்பராபுரத்தில் பெருகத் தொடங்கினர்.

சிதம்பராபுரம் பங்கு தோன்றுமுன்:

கி.பி. 1890 ஆம் ஆண்டு சிதம்பராபுரத்தில் தற்போது இருக்கும் ஆலயத்திற்குச் சற்று முன்னால் கூரைக்கோவில் ஒன்று இருந்துள்ளது. அப்போது கழுகுமலை-யைப் பங்காகக்கொண்டு, சுவாமி போஸ்க் என்ற பிரெஞ்சுக் குரு ஒருவர் இருந்துள்ளார். பேருந்து வசதி இல்லாத அன்றைய காலத்தில், சிதம்பராபுரத்திலுள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் 10 கி.மீ நடந்தே கழுகுமலை சென்று திருப்பலி கண்டு வந்துள்ளார்கள். அன்று வாழ்ந்த கிறித்தவர்களின் இறைப்பற்றையும், விசுவாசத்தையும் புகழ்ந்து அக்குருவும் இவ்வூருக்கு விசாரணைக்கு வந்து இவ்வூர் மக்களை பாராட்டிச் செல்வது வழக்கம்.

கி.பி. 1710 - 1715 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயேசு சபை தந்தை ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) காமநாயக்கன்பட்டியிலும், குருக்கள்பட்டியிலும் (தற்போதைய தென்காசி மாவட்டம்) பணியாற்றியிருக்கிறார். இந்த இரண்டு ஊர்களையும் சுற்றியுள்ள பல கிராம மக்கள் இவரிடம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறார்கள். சிதம்பராபுரம் மக்களின் முன்னோர்கள் சிலரும் வீரமாமுனிவரிடம் திருமுழுக்குப் பெற்றதாகத் தெரிகிறது, 'கழுகுமலைப் பங்கில் இவர்கள் பழங்கால கிறிஸ்தவர்கள்' எனவும், 1910 ல் கழுகுமலைப் பங்கில் இருந்த கிராமங்கள் 94 எனவும் 5066 கிறிஸ்தவர்கள் இருந்தனர் எனவும் அருட்பணி. ர. ஜார்ஜ் தனது 'கழுகுமலைப் பங்கின் நூறு ஆண்டு பயணம்' புத்தகத்தில் (ப 10,17,18,19) குறிப்பிடுகிறார்.

போஸ்க் அடிகளாருக்குப்பின் அருள்பணி. இஞ்ஞாசி சுவாமியார் கழுகுமலைக்குப் பங்குகுருவாக நியமனம் செய்யப்பட்டார். அவரும் சிதம்பராபுரத்திற்கு விசாரணைக்கு அடிக்கடி வந்து சென்றார். கூரைக் கோவிலிலேயே திருப்பலி நடந்தது. சிறிய சிலுவைப்பாதைப் படங்கள் நிறுவப்பட்டன. 1919இல் முதன்முறையாக ஆண்களுக்கென்று மோட்ச இராக்கினி மாதா சபையை ஏற்படுத்தினார்.

1921இல் அருட்பணி. லூயிஸ் கெல்லர் சே.ச. என்ற பிரெஞ்சுக்குரு கழுகுமலையில் பங்குக் குருவாக இருந்தபொழுது, சிதம்பராபுரம் வரும் இறைமக்கள் மிகவும் ஆர்வமாகவும், பக்தியாகவும் இருப்பதை தனது நாட்குறிப்பில் பாராட்டி எழுதியுள்ளார். அப்போது சேர்ந்தமரத்து முதலாளி என்று அழைக்கப்படும் திரு. பிரான்சிஸ் சேவியர் அவர்களது சகோதரர் சகோ. பீற்றர் சேசு சபையில் சேர்ந்தார். அவரிடம் அருட்பணி. கெல்லரும், சிதம்பராபுரம் முக்கிய தலைவர்களும் தமது ஊரில் நல்ல கற்கோயில் கட்ட உதவுமாறு வேண்டினர். அவர் தமது பங்குப் பாகமாகத் தமது வீட்டிலிருந்து ரொக்கமாக ரூ.3000 மற்றும் கம்பு மரங்களும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வுதவி மூலமும் இவ்வூர் மக்களின் உழைப்பின் மூலமும், அழகான ஆலயம் எழுப்பப்பட்டது. 1925 செப்டம்பர் 28ம் தேதி சிதம்பராபுரம் பழைய ஆலயம் மந்திரிக்கப்பட்டது. 

அவர் காலத்தில்தான் 1919-20ல் அரசு மானியமின்றி இங்கு ஆரம்பப்பள்ளியும் தொடங்கப்பட்டு திரு. விசுவாசம் என்பவர் முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

பங்கின் வளர்ச்சிகள் :

அருட்பணி.ஜோசப் பில்லிங். சே.ச., (1941 -1943) (பங்கின் முதல் குரு)

1930லிருந்து 1941 வரை அருட்பணி. ஜோசப் பில்லிங் சே.ச., அடிகளார் கழுகுமலையில் 6 வது பங்கு குருவாக இருந்தார். 1937ஆம் ஆண்டில் சிதம்பராபுரத்தை பங்காக உருவாக்க முன்முயற்சியாக, சிதம்பராபுரத்தில் கோவிலுக்கு வடபுறத்தில் உள்ள அறையில் தங்கி இப்பொழுது கன்னியர் வாழும் இல்லத்தை குருக்கள் இல்லமாகக் கட்டினார். சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று நற்செய்தியைப் போதித்தார். 'கழுகுமலைக்கு உதவி பங்குத்தந்தை வந்த நாள் முதல் சிதம்பராபுரத்தில் ஞாயிறு தவறாமல் திருப்பலி நடந்தது' என அருட்பணி. ர. ஜார்ஜ் தனது, 'கழுகுமலைப் பங்கின் நூறு ஆண்டு பயணம், புத்தகத்தில் (ப 46) குறிப்பிடுகிறார்.

சிதம்பராபுரத்திலும் மற்றக் கிராமங்களிலும் குறிப்பாகச் சங்கரன்கோவிலில், கோவிலுக்கென்று பெரியோர்களது உதவியால் நிலங்கள், நன்கொடையாகவும், கிரயமாகவும் பெற்றார். 

உதயமானது சிதம்பராபுரம் பங்கு:

1941ஆம் ஆண்டு, பிப்ரவரி 4ஆம் நாள், சிதம்பராபுரம் வரலாற்றின் முக்கியமான நாள். அப்பொழுது மதுரை மறைமாவட்ட ஆயர் ஜே.பி. லெயனார்டு, சே.ச. ஆண்டகை அவர்கள் மக்களின் ஆன்ம நலனை முன்னிட்டு, சிதம்பராபுரத்தை கழுகுமலைப் பங்கிலிருந்து பிரித்து தனிப்பங்காக, அதிகாரப்பூர்வமான பத்திரமளித்து அருட்பணி. ஜோசப் பில்லிங், சே.ச., அடிகளார் அவர்களையே முதல் பங்குக் குருவாக நியமித்தார்கள். 40 கிராமங்களை உள்ளடக்கிய பங்கை உருவாக்கி, முதல் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அவரின் நினைவு, இப்பங்கு மக்கள் உள்ளத்திலே நிலைத்துள்ளது.

அருட்பணி. பி.ஏ. பிண்டோ (1943 -1948)

1943ஆம் ஆண்டு மறைத்திரு. பி.ஏ. பிண்டோ அடிகளார் பங்குப் பொறுப்பு ஏற்றார். இவர் மங்களூரைச் சேர்ந்தவர். முன்னவர் விட்டுச்சென்ற பணியைச் சிறப்பாகத் தொடர்ந்தார். மக்களை கிறித்தவ நெறியில் வளர்த்தார். மீன் துள்ளியிலும், சங்கரன்கோவிலிலும் புனித சூசையப்பருக்கு ஆலயங்கள் எழுப்பினார். சங்கரன்கோவிலில் நிலம் வாங்கி அறிவாலயம் ஒன்று தொடங்கி வைத்தார். 1948இல் இப்பங்கிலிருந்து மாற்றலாகிச் சென்றார்.

பிரான்சு நாட்டில் லூர்து நகரிலுள்ள மசபியேல் குகையில் பெர்னதத்திற்கு 1854இல் அன்னை மரியாள் காட்சி கொடுத்ததன் 100 வது ஆண்டு நினைவாக, 1954இல் தற்போதுள்ள அகன்ற நீண்ட தேவாலயம் 102 அடி நீளம் 43 அடி அகலத்தில் சிலுவை வடிவில் அருட்பணி. எஸ். லூர்து உபகாரம் அவர்களின் வழிகாட்டலில், சிதம்பராபுரம் இறைமக்களின் ஒத்துழைப்பால் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் வழிகாட்டலில், பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று, ஆன்மீகப் பாதையில் சிறப்புற பயணித்து வருகிறது சிதம்பராபுரம் பங்கு இறைசமூகம்.

பங்கில் உள்ள துறவற சபை:

அமலவை அருட்சகோதரிகள் இல்லம் அமைத்து, இறைப்பணியாற்றி வருகின்றனர்.

பங்கின் நிறுவனங்கள்:

1. ஆர்.சி. நடுநிலைப் பள்ளி, சிதம்பராபுரம்

2. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, செவல்குளம்

3. குழந்தை இயேசு மருந்தகம், சிதம்பராபுரம்

பங்கில் உள்ள கெபி:

தூய லூர்து அன்னை கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. ஜெபக்குழு

4. பாலர் சபை

5. பீடச்சிறார்

6. பாடகர் குழு

7. அமல அன்னை இளையோர் இயக்கம்

8. நற்கருணை வீரர் சபை

9. வியாகுல மாதா சபை

10. பங்குப் பேரவை

11. நிதிக் குழு

12. வழிபாட்டுக் குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. ஜோசப் பில்லிங் (1941-43)

2. அருட்பணி. பி.ஏ. பிண்டோ (1943-48)

3. அருட்பணி. எஸ். லுார்து உபகாரம் (1948-57)

4. அருட்பணி. எஸ். ஜேசுதாசன் (1957-65)

5. அருட்பணி. எம். ஏ. தம்பு ராஜ் (1965-69)

6. அருட்பணி. டி. ஏ. மிக்கேல் (1969-71)

7. அருட்பணி. ஏர்னெஸ்ட் எம். கூலாஸ் (1971-72)

8. அருட்பணி. எஸ். ஜோக்கிம் (1972-78)

9. அருட்பணி. மரியமிக்கேல் (1978-81)

10. அருட்பணி. என். ஜேம்ஸ் நிக்கோலாஸ் (1981-85)

11. அருப்பணி. எஸ். அல்போன்ஸ் (1985-88)

12. அருட்பணி. என். சகாயதாசன் (1988-90)

13. அருட்பணி. எப். ஞானப்பிரகாசம் (1990-91)

14. அருட்பணி. எம். சூசைமாணிக்கம் (-1991 இறப்பு)

15. அருட்பணி. பி. அமல்ராஜ் (1991-98)

16. அருட்பணி.‌ எஸ். ரெக்ஸ் ஜஸ்டின் (1998-99)

17. அருட்பணி.‌ எஸ். ஜெயபாலன் (2000-01)

18. அருட்பணி. எல். அலாய்சியஸ் துரைராஜ் (2001-06)

19. அருட்பணி.‌ என். வியாகப்ப ராஜ் (2006-07)

20. அருட்பணி.‌ ஜோ. அமிர்தராஜ சுந்தர் (2007-09)

21. அருட்பணி.‌ எஸ். ஏ. அந்தோணி சாமி (2009-10)

22. அருட்பணி. யு. சலேத் மரியதாஸ், HGN (2010-12)

23. அருட்பணி. எ. ஆல்பர்ட், HGN (2012-14)

24. அருட்பணி.‌ பா. அந்தோணி தாஸ், HGN (2014-16) 

25. அருட்பணி. ராஜா கிறிஸ்துதாஸ், HGN (2016 இறப்பு)

26. அருட்பணி. பி. வனத்து ராஜ், HGN (2016-17)

27. அருட்பணி.‌ இரா. சத்தியநாதன், HGN (2017-18)

28. அருட்பணி.‌ அ. பீற்றர் (2018-21)

29. அருட்பணி. ச. அந்தோணி ராஜ் (2021---)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. அந்தோணி ராஜ் அவர்கள்.