894 புனித சவேரியார் ஆலயம், கோவிலூர்

         


புனித சவேரியார் ஆலயம்

இடம் : கோவிலூர், நல்லம்பள்ளி, தருமபுரி மாவட்டம், 636807

மாவட்டம் : தருமபுரி

மறைவட்டம் : தருமபுரி

மறைமாவட்டம் : தருமபுரி

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள்:

1. தூய இருதய அன்னை ஆலயம், கொட்டாம்பட்டி

2. புனித அந்தோனியார் ஆலயம், சித்தூர்

3. புனித இஞ்ஞாசியார் ஆலயம், நார்த்தம்பட்டி

பங்குத்தந்தை: அருள்பணி. J. ஆரோக்கியசாமி

உதவி பங்குத்தந்தை: அருள்பணி. லிபின் பாக்கியம்

குடும்பங்கள்: 295 (கிளைப்பங்குகள் சேர்த்து 450)

அன்பியங்கள்: 8

பங்கு ஆலய திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு காலை 06:30 மணி மற்றும் காலை 08:30 மணி

திங்கள் மாலை 06:00 மணி திருப்பலி- புனித சவேரியார் குளம்

செவ்வாய், புதன், வெள்ளி காலை 06:30 மணி

வியாழன், சனி மாலை‌ 05:45 மணி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05:45 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி.

கிளைப்பங்கு ஆலய திருப்பலி நேரங்கள் :

செவ்வாய் மாலை 05:30 மணி சித்தூர் ஆலயம்

புதன் மாலை 06:00 மணி கொட்டாம்பட்டி ஆலயம்

வெள்ளி மாலை 06:00 மணி நார்த்தம்பட்டி ஆலயம்

பங்குத் திருவிழா :

டிசம்பர் 3 - தூய சவேரியார் திருவிழா.

அக்டோபர் 1 - தூய குழந்தை தெரசம்மாள் திருவிழா.

பாஸ்கா முதல் வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு - பாஸ்கு திருவிழா

கிளைப் பங்கு திருவிழா:

மே 31 - தூய இருதய அன்னை திருவிழா, கொட்டாம்பட்டி

ஜூன் 13 - தூய அந்தோனியார் திருவிழா, சித்தூர்

ஜூலை 31 - தூய இஞ்ஞாசியார் திருவிழா, நார்த்தம்பட்டி

சிறப்பு ஸ்தலம்: சவேரியார் குளம்

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருள்பணியர்கள்:

1. Fr. M. சூசை, Dharmapuri Diocese 

2. Fr. தேவசகாய சுந்தரம், Dharmapuri Diocese 

3. Fr. வின்சென்ட் குமார், OSFS

4. Fr. பீட்டர் ராயப்பன், OSB

5. Fr. அந்தோணி சாமி, Dharmapuri Diocese 

6. Fr. வின்சென்ட், SdC

7.‌ Fr. அருள் ரொசாரியோ, Dharmapuri Diocese 

8. Fr. அந்தோணி ஜெயராஜ், CSC

மண்ணின் சகோதர்கள்:

1. Bro. ஆரோக்கியதாஸ், SJ

2. Bro. அந்தோணி சுனில், Montfort

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. Sr. கிரேட்ருட் மேரி

2. Sr. லூர்து மேரி, FSAG

3. Sr. M. நான்சி, SRA

4. Sr. எமில்டா கோலடின் குயினி, FSAG

5. Sr. அந்தோணி மேரி தீபா, FIHM

6. Sr. ரம்யா ஆரோக்கியம், Cluny

7. Sr. ஜோசபின், SRA

8. Sr. புஷ்பா, SRA

9. Sr. இம்மா

மண்ணின் இறையழைத்தல்கள் - இறைக்கல்வியில்:

1. Bro. ஜோ (3rd Theo.) - SdC

2. Bro. அருண் (2nd Phil.) - Dharmapuri Diocese

3. Bro. சந்தோஷ் (1st Year) - Dharmapuri Diocese

வழித்தடம் 😘 தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில், 9 கி.மீ தொலைவில் உள்ளது நல்லம்பள்ளி ஊராட்சி. அங்கிருந்து இடதுபுறம் 1.4 கி.மீ தொலைவில் உள்ளது கோவிலூர். இக்கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம்.

Map : https://maps.app.goo.gl/4T7z2ikBsgXGUXMf6

வரலாறு :

கோவிலூரின் பழைய பெயர் பெல்லப்ப கவுண்டனஹள்ளி அல்லது வெள்ளையன் பேட்டை என்பதாகும். கோவிலூர் ஏரியின் தென் கிழக்குப் பகுதியில், கோபாலம்பட்டிக்கு அருகில் வெள்ளையன் பேட்டை இருந்தது. 

ஆரம்ப காலத்தில் இயேசு சபையினரால் உருவாக்கப்பட்டது இந்த தலத்திருச்சபை. இது சிறிய ஊர் தான். இருப்பினும் 300 ஆண்டு தருமபுரி திருச்சபையின் தலைநகர் இதுதான். 1704 இல் இயேசு சபையாரின் உறைவிடமாக பெல்லப்ப கவுண்டனஹள்ளி தேர்வு செய்யப்பட்டது.

1830 ஆம் ஆண்டளவில் இங்கு தங்கி, அருள்தந்தை அபேதுபாவாவுக்கு மைசூர் பணித்தளத்தை சீரமைக்க உதவி செய்த, அருள்தந்தை மார்க் ஆரோக்கியநாதர், பெல்லப்ப கவுண்டனஹள்ளியில் உள்ள இன்றைய இடத்தை குருக்கள் தங்கும் இடமாக மாற்றினார். குருக்கள் தங்கியிருந்தாலும், ஆலயம் இருந்ததாலும், கோவிலூர் என்று பெயர் பெற்றது எனக்கூறப்படுகிறது. பின்னர் பாரிஸ் மறைபரப்பு சபையினரின் பாசமான பராமரிப்பில் கோவிலூர் வளர்த்தெடுக்கப்பட்டது. அருள்தந்தை அபேதுபா உள்பட ஏறக்குறைய, 28 MEP குருக்கள் கோவிலூரில் பணியாற்றியுள்ளனர். 

1847ல் மகிமைநாதர் என்று அழைக்கப்பட்ட அருள்தந்தை குயோன் (Pierre Gouyon) அவர்கள் பாஸ்கா நாடகத்தை ஆரம்பித்தார். இன்று வரை இது தொடர்ந்து நடந்து வரும் பெரிய திருவிழாவாகும்.

1856 முதல் 1885 ஆண்டுகள் வரை ஏறக்குறைய 29 ஆண்டுகள் கோவிலூரில் பணியாற்றியவர் அருள்தந்தை திரியோன் (Thirion Francis Joseph). இவருடைய காலத்தில் கோவிலூர் திருச்சபையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 1866 ஆண்டளவில் ஏற்பட்ட பஞ்சம். அதனால் பொம்மிடி பகுதியில் ஏற்பட்ட மறை வளர்ச்சி.

- 1864 இல் மாதா திருஇருதய கன்னியர்கள் மடம் உதயம்.

- 1867 இல் பெண்களுக்கான ஆரம்பப் பள்ளி

- 1871 இல் மாணவர்களுக்காக பள்ளி என கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன.

கோவிலூரில் பணியாற்றிய குருக்களில் இருவர் (Melchior de Marion Brésillac,

Joseph-Isidore Godelle) பின்னர் கோவை மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்றனர்.

கோவிலூரை போலவே கொட்டாம்பட்டியிலும் 1820 ஆம் ஆண்டு பல கத்தோலிக்க மக்கள் இங்கு இடம்பெயர்ந்து வந்தனர். 1830 இல் திருப்பத்தூர் -கோவிலூர் (வேறு இடம்) பகுதியில் இருந்து கிறிஸ்தவர்கள் அருகிலுள்ள மிட்டா -ரெட்டிஹள்ளி கிராமத்திற்கு அருகில் குடியேறினர். அங்கு பூலாம்பட்டி உருவானது. தற்போது பூலாம்பட்டி, கோவிலூரில் இருந்து பிரிந்து தனி பங்காயிற்று. 

கோவிலூர் பங்கில் பாதிக்கு மேலான கிறிஸ்தவர்களை கொண்ட குடியிருப்பு சௌகார்பேட்டை, சித்தூர் -சவுலூர் ஆகியனவாகும். 1890 முதல் 1900 ஆண்டு வரை கோலார் தங்க வயலுக்கு வேலைக்காக பெரும்பான்மையானவர்கள் இடம்பெயர்ந்ததால், இவ்வூர்கள் முற்றிலும் அழிந்து போனது.

ஆரம்பம் முதலே புனித சவேரியாரை பாதுகாவலராக கொண்டிருந்த கோவிலூர், 1978 முதல் புனித குழந்தை இயேசுவின் தெரசாவை இணை பாதுகாவலியாக ஏற்று, அப்புனிதையின் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

1897 ஆம் ஆண்டு அருள்தந்தை சுரேள் (Surrel) அடிகளாரால் ஆலயப் பணிகள் (இன்றைய ஆலயம்) தொடங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து கோவிலூரில் பணியாற்றிய அருள்தந்தை பிரயாஸ் (1902-1920) ஆலய கட்டுமானப் பணிகளை செய்து முடித்தார். அருள்தந்தை பிரயாஸ் ஒரு நல்ல ஓவியர். ஆலயத்துக்குள் அழகான விவிலிய படங்களை வரைந்தார். புதுவை -கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு மொரேல் அவர்களால் 11-9-1912 அன்று ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது. 

ஆனால் ஆலய கோபுரத்தை அருள்தந்தை பால் தாழதட் (1956-1963) 1962-இல் கட்டி முடித்து ஆலயத்துக்கு அழகு சேர்த்தார். 

1972 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் என்ற பெண்மணியால் துவங்கப்பட்ட நிர்மலா மறுவாழ்வு மையத்தை, 1974 முதல் அப்போஸ்தலர்களின் ராக்கினி கன்னியர்கள் (SRA) நிர்வகித்து வருகின்றனர்.

கோவிலூர் பள்ளிகள் 1998 இல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தோமையார் விடுதி 1999 ஆம் ஆண்டு மாணவர்கள் பிரிவு, மாணவியர் பிரிவு என இரண்டாகப் பிரித்து செயல்பட ஆரம்பித்தது. 

கோவிலூர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு,  நூற்றாண்டு விழா தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ், SDB அவர்கள் தலைமையில் 

12.09.2011 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சவேரியார் குளம்:

பக்தர்களின் ஆன்மீகத்தையும் பக்தியையும் வளர்க்கும் நோக்குடன், தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக, கிணற்றில் உள் பகுதியில் இருந்து வட்ட வடிவில் கிரானைட் கல்குளம் ஒன்று அமைக்கப்பட்டது. பழைய குளத்தின் ஆழத்தை குறைக்க ஏறக்குறைய 800 டிராக்டர் நுறும்பு மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருக்குளத்தில் புனித சவேரியார், புனித குழந்தை தெரசா கெபியும், சிலுவைப்பாதை ஸ்தலங்களும் அமைக்கப்பட்டு, திங்கட்கிழமைகளில் சவேரியார் குளத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

பங்கில் உள்ள கன்னியர்கள் சபை :

மாதா இருதய சபை (FIHM)

அப்போஸ்தலிக்க ராக்கினி மறைபரப்பு சபை (SRA)

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

புனித தோமையார் பெண்கள் தொடக்கப்பள்ளி

புனித தோமையார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

புனித அருளப்பர் ஆண்கள் தொடக்கப்பள்ளி

புனித அருளப்பர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி

விடுதிகள்:

அருளப்பர் மாணவர் விடுதி

தோமையார் மாணவியர் விடுதி

கோவிலூர் நிர்மலா தொண்டு நிறுவனம் (Kovilur Nirmala Charitable Society):

நிர்மலா தொழுநோய் மருத்துவமனை

நிர்மலா தொழுநோய் மறுவாழ்வு மையம்

நிர்மலா முதியோர் இல்லம்

நிர்மலா குழந்தைகள் தத்தெடுக்கும் மையம்.

பங்கில் உள்ள சபைகள் / இயக்கங்கள் :

1. புனித வின்சன் தே பவுல் சபை - ஆண்கள் / பெண்கள்

2. மரியாயின் சேனை

3. பங்குப் பேரவை

4. நிதிக் குழு

5. அன்பியங்கள்

6. பீடசிறுவர்கள் மன்றம்

7. தூய சவேரியார் இளைஞர் மன்றம்  ஆண்கள் / பெண்கள்

பங்கின் அன்பியங்கள்:

புனித சவேரியார் (40 குடும்பங்கள்)

புனித அன்னை தெரசா (50 குடும்பங்கள்)

குழந்தை இயேசு (30 குடும்பங்கள்)

புனித அந்தோனியார் (33 குடும்பங்கள்)

புனித தோமையார் (39 குடும்பங்கள்)

திருக்குடும்ப (40 குடும்பங்கள்)

புனித இஞ்ஞாரியார் (15 குடும்பங்கள்)

மாசற்ற திரு இருதய அன்னை (48 குடும்பங்கள்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்களின் பட்டியல் :

1. அருள்பணி. பிரான்சிஸ் தாஸ்ரோல் (1700-1702)

2. அருள்பணி. சந்தியாகு (1702-1703)

3. அருள்பணி. பெர்னார்டு கார்சியா (1703-1705)

4. அருள்பணி. முஸி (1705-1707)

5. அருள்பணி. அந்திராதி (1707-1708)

6. அருள்பணி. அந்தோணி பெரைரா (1708-1710)

7. அருள்பணி. பிரான்சிஸ் மெனல் (1710 -1747)

8. அருள்பணி. திமோத்தி சேவியர் (1747-1753)

9. அருள்பணி. அபேதுபா (1776)

10. அருள்பணி. தேவசகாயநாதர் (1824-1830)

11. அருள்பணி. ஞானாதிக்கம் (1831-1837)

12. அருள்பணி. சூசைநாதர் (1837-1845)

13. அருள்பணி. குயோன் மகிமைநாதர் (1845-1853)

14. அருள்பணி. மோரி (தருமநாதர்) (1853-1858)

15. அருள்பணி. திரியோன் (சூசைநாதர் சுவாமி) (1858-1884)

16. அருள்பணி. பிரகாசம் (1887-1891)

17. அருள்பணி. ஜெர்மானுஸ் (1891-1896)

18. அருள்பணி. சுர்ரேல் (1896-1902)

19. அருள்பணி. பிரயாஸ் (1902-1920)

20. அருள்பணி. சுவென்க் (1921-1930)

21. அருள்பணி. சொவிங்னெட் (1930-1944)

22. அருள்பணி. தலச்சீரா (1944-1946)

23. அருள்பணி. புலியார்டு (1946-1949)

24. அருள்பணி. சால்விக்னே (1949-1950)

25. அருள்பணி. பால் தாழதட் (1950-1952)

26. அருள்பணி. இக்னேசியஸ் களத்தில் (1952-1956)

27. அருள்பணி. பால் தாழதட் (1956-1963)

28. அருள்பணி. மத்தேயு கடவுள் (1964-1968)

29. அருள்பணி. T.C. ஜோசப் (1968-1970)

30. அருள்பணி. D.M. சவரிமுத்து (1970-1977)

31. அருள்பணி. A.X. இருதயம் (1977-1980)

32. அருள்பணி. S. தியோடர் செல்வராஜ் (1980-1984)

33. அருள்பணி. D. ஜெகநாதன் (1984-1986)

34. அருள்பணி. M. அந்தோணிசாமி (1986-1987)

35. அருள்பணி. M. தோமினிக் (1987-1989)

36. அருள்பணி. S. ஜான் ஜோசப் (1989-1992)

37. அருள்பணி. M இருதயராஜ் (1992-1994)

38. அருள்பணி. A. சூசைராஜ் (1994-2001)

39. அருள்பணி. M. தோமினிக் (2001-2005)

40. அருள்பணி. M. அந்தோணிசாமி (2005-2009)

41. அருள்பணி. C. மைக்கேல் ஆண்ட்ரூஸ் (2009-2014)

42. அருள்பணி. M. அந்தோணிசாமி (2014-2018)

43. அருள்பணி. S. ஏசுதாஸ் (2018-2023)

44. அருள்பணி. J. ஆரோக்கியசாமி (2023...)

புதுமைகள் நிறைந்த கோவிலூர் தூய சவேரியார் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. ஆரோக்கியசாமி அவர்களின் வழிகாட்டலில், உதவி பங்குத்தந்தை அருள்பணி. லிபின் பாக்கியம் அவர்கள்.

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. ஏசுதாஸ், கிருஷ்ணகிரி.