முதல் சனி சிந்தனைகள்

உலகெங்கிலும் பாவக்கடல் சூழ்ந்துள்ளது. எங்கும் நேர்மையற்றத்தனமே காணப்படுகிறது. அறச்சிந்தனை மருந்துக்கும் இல்லை. அறம் என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது. சுய நலன்கள் மட்டுமே எங்கும் ஆட்சி செய்வதைப்பார்க்க முடிகிறது.

கடவுள் பக்தியில் கூட சுய நலத்தை மட்டுமே இருக்கிறது “ நான் நல்லா இருக்கனும்; என் குடும்பம் நல்லா இருக்கனும்; எனக்கு அது வேண்டும். இது வேண்டும் என்று நாம் பெட்டிசன் பெரிய நாயகனாகவும், பெரிய நாயகியாகவும் வாழ்ந்து வருகிறோம்..

நாம் கொஞ்சமாவது கடவுளைப்பற்றியும் அவருடைய தேவைகளைப்பற்றியும் நினைக்க வேண்டும்.. ஏன் அவருக்குத் தேவைகள் இருக்காதா என்ன? கடவுளின் தேவையைப் பார்ப்போம்…

உலகத்தின் கேடுற்ற சூழலால் சேசு-மரி இருதயங்கள் மிகவும் நொந்து போய் உள்ளன.. ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கின்றன… நம் இதயங்கள் அருகில் வருடக்கணக்கில் காத்திருக்கின்றன…

“ என் மகனே ! என் மகளே ! பார் இந்த உலகம் இருக்கும் நிலையைப்பார்.. இப்படியே போனால் பிதாவின் கோபம் அதிகமாகி அவர் இந்த உலகத்தையே அழித்து விடுவார். நீயாவது எங்களை நேசி ! எங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் கொடு…பரிகாரம் செய்… ஜெப தவ பரிகாரம் செய்…உன்னையே நீ பலியாக்கு “

“ மக்களுக்காக ஒருவன் மட்டும் இறப்பது நலம் “ என்று அன்று சொன்னார்களே ! அன்று நான் இருந்தேன் மனித உடலோடு இருந்தேன். பாடுகள் பட்டேன். என்னையே பரித்தியாகம் செய்தேன்.. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இன்னல்களை அனுபவித்தேன் இரத்தம் சிந்தி, உன்னை மீட்டேன். என் தாயும் எனக்கு துணை நின்றார்கள்.. நான் உடலால் அனுபவித்ததை அவர்கள் உள்ளத்தால் அனுபவித்தார்கள்… பிறப்பிலிருந்தே அவர்களும் ஒரு பலிப்பொருள்தான்..

பரிகாரப்பலியும், பலிப்பொருளுமான நாங்கள் கேட்கிறோம்..எங்களுக்கு யார் ஆறுதல் தருவார்கள்.. எங்கள் கண்ணீரைத் துடைக்க யார் தயாராக இருக்கிறார்கள்… இந்த உலகத்தின் கேடுற்ற நிலையையும், ஆன்மாக்களின் பாவ நாற்றங்களையும் யார் பரிகரிப்பார்கள்… யார் அவர்களை மீட்பார்கள்.. யார் எங்களுக்கு உதவி செய்வார்கள்….எங்களோடு நிற்பார்கள் “

“ நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா “

இப்படி சேசுவின் இருதயம் நம்மைப்பார்த்து கேட்கும் நாள் முதல் வெள்ளி..

இப்படி மாதாவின் இருதயம் நம்மைப்பார்த்து கேட்கும் நாள் முதல் சனி..

சேசுவின் இருதயமும், மாதாவின் இருதயமும் ஒன்றுதானே ! இங்கே அடித்தால் அங்கே வலிக்கும். அங்கே ஈட்டியால் குத்தினால் இங்கே இரத்தம்..வரும்.. அன்று கல்வாரியில் அன்னையின் இருதயத்தை ஒரு வாள் ஊடுறுவியதே அதைப்போல..

“ உன் உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்று சிமியோன் சொன்ன தீர்க்க தரிசனம் அன்று நிறைவேறியது.. (ஆண்டவர் இயேசு மரித்த பின்பு அந்த குத்தப்பட்டதால் அந்த வேதனை முழுவதும் மாதாவிற்குத்தான்…)

இன்று இப்போது நம் இருதயம் அருகே.. மாதாவின் குரல் கேட்கிறது..

“ நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா “

இன்று நாம் அன்னைக்கு ஒரு 15 நிமிடங்கள் கொடுத்தால் கூட போதும்.. ஏதாவது ஒரு தேவ இரகசியங்களை ( சந்தோசம், துக்கம், மகிமை ) அன்னையோடு இருந்து சிந்தித்தால் போதும். ஒரே ஒரு ஜெபமாலை செய்தாலே போதும்… அதே போல் இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும், (வெயில், களைப்பு, உடல் நோவுகள், மன நோவுகள், அன்றாட பணியின் மத்தியில் வரும் இன்னல்கள் என்று எத்தனையோ அத்தனையும் ) மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்தால் போதும்…

கத்தோலிக்க கிறிஸ்தவ பக்தி ரொம்பவே எளிது.. சிம்பிள்.. ஆண்டவரும், மாதாவும் நம்மை மலையைத் தூக்க சொல்லவில்லை.. சிறு சிறு கற்களைத்தான் தூக்க சொல்கிறார்கள்… நம்மால் முடிந்ததை மட்டுமே கேட்கிறார்கள்… நம்மால் முடியாததை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்..

அதுவும் நம் கேடுற்ற நிலைக்கும், உலகத்தின் இழி நிலமைக்கும், ஆன்மாக்களின் நாற்றமடித்த நிலமையையும் மாற்றத்தான் கேட்கிறார்கள்…

செய்வோமா….

பரிகாரம்… பரிகாரம்… பரிகாரம்… ஜெபம் தவம் பரிகாரம்… தேவை… தேவை…

This is “ Most wanted " now. This request coming from Heaven… Are we Ready ????

ஜெபமாலை இராக்கினியாய் வந்து.. ஜெயம் தரும் மாமரி வாழியவே… ஜெபிப்போம்.. ஜெபிப்போம்… ஜெபமாலை…

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !