வாருங்கள் புனிதரிடம் வாருங்கள் கேட்கும் வரம் தருபவரைப் பாடுங்கள்


வாருங்கள் புனிதரிடம் வாருங்கள்

கேட்கும் வரம் தருபவரைப் பாடுங்கள்


1. நோய்நொடியில் துடிப்பவர்க்கு சுகமளிப்பவர் - தன்

தாய்மடியில் தவழ்வது போல் மகிழ்ச்சி தருபவர் ஆ

நாடிவரும் பக்தர் வாழ்வில் நன்மை செய்பவர்

கோடி மக்கள் கூடி வர ஆசி புரிபவர்

பாடுவோம் கூடுவோம் கொண்டாடுவோம்


2. அமைதியின்றித் தவிப்பவர்க்கு அமைதி தருபவர் - தன்

பாசத்தினால் அரவணைத்து அருளைப் பொழிபவர் ஆ

நம்பி வரும் பக்தர்களைக் கைவிடாமலே

தேற்றி அருள் நாளும் பெற்று வாழச் செய்பவர்

பாடுவோம் கூடுவோம் கொண்டாடுவோம்