சேசுநாதருடைய அடக்கம்

1. சேசுநாதர் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கு அர்த்தம் என்ன?

சேசுநாதர் மரித்தபின் அரிமத்தியா சூசை என்பவரும், நிக்கோதேமு என்பவரும் சேர்ந்து, அவருடைய திருச்சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி, கல்லறையில் வைத்தார்கள் என்று அர்த்தமாம் (அரு. 19:38,39).

2. கல்லறையில் அடக்கம் பண்ணின பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?

கல்லறையை மூடும்படி ஒரு பெருங்கல்லை அதன் வாசலில் புரட்டி வைத்து அடைத்தார்கள் (மாற். 15:46).

3. அப்போது யூதர்கள் செய்ததென்ன?

யூதர்கள் அக்கல்லின்மேல் முத்திரையிட்டு சேவகர்களை இரவும் பகலும் காவலாக அங்கே வைத்தார்கள் (மத். 27:66).

4. ஏன் யூதர்கள் அப்படிச் செய்தார்கள்?

சேசுநாதர் உயிரோடு இருக்கும்போது, தாம் மரித்த மூன்றாம் நாள் உயிருடன் எழுந்திருப்பதாக பல முறை சொல்லியிருந்தார். அவருடைய சீடர்கள் சிலவேளை அவருடைய சரீரத்தை இரகசியமாய்த் திருடிக் கொண்டு போகக்கூடுமென்று பயந்து, அதை ஒருவரும் எடுத்துக் கொண்டு போகாதபடி முத்திரையிட்டு, மூன்றாம் நாள் மட்டும் கல்லறையைக் காவல் காக்கப் பிலாத்திடம் உத்தரவு கேட்டு, இவ்வித காவல் செய்தார்கள் (மத்.27:63-64).