அன்பான கத்தோலிக்க மக்களே!

இன்று திருப்பலியில் பங்கேற்ற் மக்கள் தவிர மற்ற மக்கள் ஆசை திருப்பலியில் பங்கேற்றுப்பீர்கள்… கண்டிப்பாக அனைவருக்கும் திருப்பலி ஜெபங்கள் கிடைத்திருக்கும்.. அதே ஜெபங்கள் திருக்குடும்ப பக்திமாலையிலும் இருக்கிறது என்று ஒரு சகோதரர் குறிப்பிட்டிருந்தார்..

நேரடியாக திருப்பலியில் பங்கேற்க முடியாததற்கு சரியான காரணங்களால் இயலாத சூழ் நிலை வரும்போது ( இப்போதைய சூழ் நிலை போல)… இந்த பூசை ஜெபங்களை ஜெபித்து ஆண்டவருடைய கல்வாரி திருப்பாடுகளை தியானித்து ஆசை நன்மை வாங்கினால் நாம் திருப்பலியில் உண்மையிலேயே பங்கேற்றவர்களாகிறோம்… நம்மையும்,  நம் குடும்பத்தையும் ஒப்புக்கொடுப்பதன் மூலமாக நமக்குத் தேவையான ஆன்ம சரீர நன்மைகளைப் பெறுகிறோம்.. மேலும் உத்தரிக்கும் ஆன்மாக்கள் யாரும் நினையா ஆன்மாக்களையும் ஒப்புக்கொடுப்பதால் அவர்கள் உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்து மோட்சம் சேருகிறார்கள். மேலும் தனிப்பட்டத் தேவைகள், பொதுத்தேவைகள் அதிலும் குறிப்பான கொரோனோ வைரஸின் தாக்கத்திலுருந்து நம்மையும் உலகையும் காப்பாற்ற முடியும்.. அதனால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க முடியும்…

அந்த திருப்பலி ஜெபங்களை வாசிக்கும் போது திவ்ய திருப்பலி பூசை என்றால் என்ன? அதில் எப்படி பக்தியாக பங்கேற்க வேண்டும்.. நம்முடைய பராக்குகளை தவிர்த்து முழு ஈடுபாடோடு பங்கேற்க இந்த ஜெபங்கள் உதவுகின்றன. திருப்பலியில் பங்கேற்றவர்கள் கூட அந்த ஜெபங்களை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்… நமக்கு திருப்பலி குறித்து நிறைய விசயங்கள் தெறிய வரும்…

இந்த சூழ் நிலையில் திவ்ய நற்கருணை ஆண்டவரைப் பற்றியும் உந்நத தெய்வீகத் திருப்பலியைப் பற்றியும் அதிகமாக தியானிப்போம்.. எந்த முறை திருப்பலியில் பக்தியில்லாமலும், தகுதியில்லாமலும் பங்கேற்றோம் என்று எண்ணிப் பார்ப்போம்… சகல வரப்பிரசாதங்களும் குவிந்திருக்கும், சகல ஆசீர்வாதங்களும் நிறைந்திருக்கும், சகலத்தையும் செய்ய வல்ல திருப்பலியில் நாம் பக்தியற்று பங்கேற்ற குற்றங்களை நினைத்துப் பார்ப்போம்… இந்த பிரிவை நாம் ஒப்புக்கொடுப்போம்…

ஒரு தமிழ்ப்பாடலில் வருவது போல்.. “ பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணா !….. “ என்று காத்திருந்து நம் அவருக்காக நம் ஆண்டவருக்காக தவமிருந்து.. இந்த சூழ் நிலை சீக்கிரம் மாற ஜெபிப்போம்.. குடும்பமாக அமர்ந்து குடும்ப ஜெபமாலை ஜெபிப்போம்…

நன்றி : திருப்பலி ஜெபங்களை மிகுந்த சிரமப்பட்டு அதை PDF ஆக மாற்றி நேற்று இரவு அனைவருக்கும் அனுப்பி வைத்த கிரிஸ்டோபர் பிரதருக்கு மனமார்ந்த நன்றிகள்..

கீழே உள்ள உரையாடலைப் பாருங்கள்…

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் மற்றும் அவரைக்கொன்ற மன்னன் டிராஜனுக்கும் இடையே நடந்த உரையாடல்:

(அந்தியோக்கியாவில் மேற்றாணியராக இருந்த இஞ்ஞாசியாரை அழைப்பிக்கிறான் டிராஜன்)

டிராஜன் : தீய பிசாசைப்போல் என் கட்டளைக்குப் பணியாமல் மக்களை அழிவுக்கு இட்டுச்செல்பவன் நீதானா?

புனித இஞ்ஞாசியார் : அரசே ! என்னை யாரும் தீய பசாசு என்று அழைத்ததில்லை. கடவுளின் ஊழியர்கள் யாரும் எவ்வளவு தூரம் பசாசுகளிடமிருந்து அகன்றிருக்கிறார்கள் என்றால், அப்பசாசுக்கள் அவர்கள் முன்னிலையில் நிற்கக் கூடாமல் ஒலமிட்டுக்கொண்டு ஓடி ஒழிகின்றன.

 டிராஜன் : தியோபோரஸ் என்னும் இது யார்?

( அர்ச். இஞ்ஞாசியாரின் இன்னொரு பெயர் தியோபோரஸ் என்பது. கடவுளைக் கொண்டிருப்பவன் என்பது பொருள்)

புனித இஞ்ஞாசியார் : அது நானே. நான் மட்டுமல்ல, சேசு கிறிஸ்துவை உள்ளத்தில் கொண்டிருக்கும் யாரும் தியோபோரஸ்தான்.

 டிராஜன் : அப்போ, எங்கள் உள்ளத்தில் நாங்கள் தெய்வங்களைக் கொண்டிருக்கவில்லை என்று  நினைக்கிறாயோ? அவர்கள் எங்களுக்காக சண்டையிடுகிறார்களோ !

புனித இஞ்ஞாசியார் : தெய்வங்களா ! அவைகள் பசாசுக்களே, பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த கடவுள் ஒருவர்தான். அவருடைய ஏக சுதன் இயேசு கிறிஸ்துவையே, அவருடைய இராஜ்ஜியத்தையே நான் தேடுகிறேன்.

டிராஜன் : பிலாத்து சிலுவையில் அறைந்தானே அந்த சேசுவையா ?

புனித இஞ்ஞாசியார் : பாவத்தையும், அதனை இயற்றியவனையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறைந்தார் என்று சொல்ல வேண்டும்.

டிராஜன் : அப்போ நீ கிறிஸ்துவை உனக்குள் கொண்டிருக்கிறாயா ?

புனித இஞ்ஞாசியார் : ஆம் அதில் சந்தேகமே இல்லை.

டிராஜன் : ஹா ! கிறிஸ்துவைக் கொண்டிருப்பதாக பெருமைப்படும் இஞ்ஞாசி விலங்கிடப்பட்டு உரோமைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விலங்குகளுக்கு போடப்படுவானாக”

(நீண்ட கடற்பயணம் செய்தார் இஞ்ஞாசியார். உரோமையிலுள்ள கிறிஸ்தவர்கள் தமக்கு விடுதலை பெற்றுத் தர முயற்சித்து தம் வேத சாட்சிய வாய்ப்பைக் கெடுத்து விடக்கூடாது என்று அவர்களுக்கு முன் கூட்டியே செய்தி அனுப்பினார். அவர் மீது இரண்டு பசித்த சிங்கங்களை ஏவி விட்டார்கள். அப்போது அவர்,

“  நான் ஆண்டவரின் கோதுமை. அவருடைய புனித மாவாக ஆகும்படி சிங்கங்களின் பற்களால் நான் அறைக்கப்பட வேண்டும்” என்று கூறி சேசுவின் திருநாமத்தை உச்சரித்தபடியே சிங்கங்களால் கடித்து விழுங்கப்பட்டார். அவரிடம் மிஞ்சிய எலும்புகளை விசுவாசிகள் சேகரித்து அந்தியோக்கியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் வேதசாட்சி அடைந்த ஆண்டு சுமாராக கி,பி.108. இவர் புனித அருளப்பரின் (யோவான்) சீடர்.

வேதசாட்சிகளுக்கே உரிய வீரமிக்க விசுவாசவாழ்வு நமக்கும் தேவை. நமக்கு உணவாக வந்த தெய்வத்தை மகிமைப்படுத்த சிங்கங்களுக்கு உணவாகிய பரிசுத்த சிங்கமே ! எங்கள் புனித இஞ்ஞாசியாரே ! புனித தியோபோரஸே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

ஆண்டவரே… இரக்கமாயிரும்… ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.. இரக்கமாயிரும்…