முத்திப்பேறுபெற்ற ஆலன் ரோச் அவர்களின் ஜெபமாலை அனுபவங்கள்..

மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் -6 :   நாம் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்…

கி.பி. 1460 –ல் முத். ஆலன் ரோச் ஒரு நாள் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஜெபமாலை பற்றி அவரை பிரசிங்கக் தூண்டும்படி நமதாண்டவர் நற்கருணையில் இருந்து கொண்டே அவரிடம் பேசினார், 

“ இவ்வளவு சீக்கிரத்தில் நீ என்னை சிலுவையில் அறைவதேன் “ என்ற குரல் கேட்டு முத்.ஆலன் ரோச் திடுக்குற்றார்.

“ ஆண்டவரே என்ன சொல்லுகிறீர் ? “ என்று கேட்டார் ஆலன்.

“ முன்பு ஒரு தடவை உன் பாவங்களால் என்னை சிலுவையில் அறைந்தாய். உன் பாவங்களால் என் பிதா மனம் நோவதை விட மீண்டும் நான் சிலுவையில் அறையப்படவே விரும்புவேன். ஆனால் இப்போது நீ மறுபடியும் என்னை சிலுவையில் அறைகின்றாய். ஏனென்றால் நீ என் அன்னையின் ஜெபமாலையை பிரசிங்கிக்க உன்னிடம் போதிய அறிவும், கல்வியும் உள்ளன. ஆயினும் நீ அதைச் செய்யவில்லை. நீ அதை மட்டும் செய்வாயானால். அநேக ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டி அவர்களை பாவத்தில் விழாமல் சரியான பாதையில் நடக்கச் செய்ய முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யாததால் அவர்கள் பாவத்திற்கு  நீயே பொறுப்பாளியாகிறாய் “

முத். ஆலன் இடைவிடாமல் ஜெபமாலையை போதிக்க தீர்மானம் செய்ய வைத்தது சேசு சுவாமியின் இப்பயங்கர குற்றச்சாட்டே…

மேலும் தேவதாயும் அவருடன் பேசி, அவர் ஜெபமாலை பர்றி அவரை பிரசிங்கிக்கத் தூண்டினார்கள். தேவ அன்னை அவரைப்பார்த்து,

“ உன் வாலிபப் பருவத்தில் நீ ஒரு பெரிய பாவியாக இருந்தாய். ஆனால் நீ மனம் திரும்பும் வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து நான் உனக்குப் பெற்றுத் தந்தேன். உன்னை மீட்க எல்லா வகையான துன்பங்களையும் அனுபவிக்க நான் விரும்பியிருப்பேன் - அப்படி முடிந்திருக்குமானால், ஏனென்றால் மனம் திரும்பிய பாவிகள் என் மகிமையாயிருக்கிறார்கள். நீ என் ஜெபமாலையை எல்ல இடங்களிலும் எடுத்துச் செல்ல தகுதியாகும்படியும் அதே துன்பங்களை நான் பட்டிருப்பேன் “ என்றார்கள்..

“ பாவிகளையும், பதிதர்களையும் மனம் திருப்பவும், பாவத்தை அழிக்கவும் ஏதுவாக ஜெபமாலையை எடுத்துச் சொல் “ என்று நமதாண்டவரும், தேவ அன்னையும் புனித சுவாமி நாதருக்கு பல முறை தோன்றி கூறியதாக முத். ஆலன் உரைக்கின்றார்..

தப்பரைகளை ஒழிக்கவும், பாவிகளை மனம் திருப்பவும் ஜெபமாலையை இப்போது இருக்கும் வடிவத்தில் அன்னையிடமிருந்து நேரடியாக கி.பி.1214-ல் பெற்ற ஒப்பற்ற ஜெபமாலைப் புனிதரான புனித சாமி நாதர் ( புனித டோமினிக்) அடிக்கடி காட்சியில் தோன்றி முத். ஆலன் ரோச்சிற்கு தன் அனுபவங்களை விளக்கிக்கூறியிருக்கிறார்…

அர்ச். சாமி நாதர், முத். ஆலன் ரோச் போன்றவர்களின் முன்மாதிரிகையைப் பின் பற்றி குருக்கள் ஜெபமாலையைப் பிரசிங்கித்து வந்த காலங்களில் பக்தியும், பக்தியில் ஊக்கமும் கிறிஸ்தவ உலகில் செழித்து வளர்ந்தன. இதே போல் ஜெபமாலை மீது பற்றுதல் கொண்டிருந்த துறவற சபைகளிலும் பக்தி செழிப்புற்று வளர்ந்தது. இதை மக்கள் கைவிட்ட நாளிலிருந்து எல்லா வகையான பாவமும், ஒழுங்கீனமும் எங்கும் பரவி வருகின்றன..

நன்றி : நூல்- ஜெபமாலையின் இரகசியம், ஆசிரியர் – புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்

ஜெபமாலைக்கு இவ்வளவு மகிமையையும், வல்லமையையும் தூய தமத்திருத்துவம் கொடுத்தும் இன்னமும் தினமும் ஒரு 53 மணி ஜெபமாலைகள் கூட ஜெபிக்காத கத்தோலிக்கர்கள் எத்தனை பேர்..எத்தனை குடும்பங்களில் குடும்ப ஜெபமாலைகள் சொல்லப்படுகின்றன.

தமத்திருத்துவம் விரும்பும், நாம் நேசிக்கும் மரியன்னை ஆசைப்படும் ஜெபமாலையை நாம் கொடுக்காவிட்டால்.. நாம் மரியன்னையின் பக்தர்கள் அல்ல…

பெயருக்கு மாதா பக்தி என்பது ஏட்டுச் சுரைக்காய் போன்றது.. அது எப்படி கறிக்கு உதவாதோ… அதே போல் ஜெபமாலை சொல்லாத மரியன்னை பக்தி நம் வாழ்க்கைக்கு உதவாது…

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !