உத்தரிக்கும் ஸ்தலம் -11 :

புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்

“ அவர் மோட்சத்தில் இருக்கிறார் “

கார்மேல் மாராச்சினோவின் பாத்ரே விட்டோர்டா கனோஸா என்பவர் 1958, ஜனவரி 29 அன்று அகால மரணமடைந்தார். அவர் ஏன் இப்படி தீடீரென்று மரணமடைந்தார் என்று கார்மெலா கேட்டாள். “ சேசு உன் சகோதரனுக்கு என்ன செய்தார் என்று உனக்குத் தெறியுமா? அவர் தோட்டத்திற்கு சென்றார். அங்கே பல மலர்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று மற்றவற்றுள் அழகாக இருந்தது. ஆகவே அவர் குனிந்து அதைப் பறித்துக்கொண்டார் “ என்றார் பியோ. என் சகோதரன் இரட்சிக்கப்பட்டாரா? “ என்று அவள் கேட்டபோது, “ ஆம் ஆனால் நாம் அவருக்காக ஜெபிக்க வேண்டும் ( அதாவது, அவர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிறார்) “ என்றார் பியோ. ஜூலை 29-ம் தேதி அவள் அதே கேள்வியை கேட்டபோது, 

“ என் மகளே, குருக்களாகிய எங்களுக்கு கடவுளின் முன் அதிகப் பொறுப்பு இருக்கிறது “ என்றார் பியோ. மீண்டும் அவள் டிசம்பர் 29 அன்று தன் சகோதரர் எங்கே இருக்கிறார் என்று என்று கேட்க பாத்ரே பியோ அவளிடம், “ அவர் மோட்சத்தில் இருக்கிறார் “ என்றார்.

தந்தை டோமினிக்கின் தாய்

ஒரு நாள் பாத்ரே டோமினிக் {பியோவின் செயலாளர்) தந்தை பியோவிடம், “ தந்தாய் நாளை என் அம்மாவுக்காக பூசை வைக்கப் போகிறேன். நாம் நம் பூசைக் கருத்துக்களை மாற்றிக்கொள்ளலாமா? நீங்கள் என் அம்மாவுக்காகப் பூசை வையுங்கள். நான் உங்கள் கருத்துக்களுக்காக பூசை வைக்கிறேன் “ என்று கேட்டார். பாத்ரே பியோவும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். உன்மையில் பூசையின்போது பாத்ரே பியோ தம் அன்னையைக் காண்பாரா என்பதை அறியவே பாத்ரே டோமினிக் இப்படிச் செய்தார்.

மறு நாள் இரு குருக்களும் பூசை நிறைவேற்றிய பின், பியோ தம் அறையின் வாசலில் நின்று மற்றொரு குருவோடு பேசிக்கொண்டிருந்தை டொமினிக் கண்டார். இந்த சந்திப்பு பற்றி டொமினிக் தன் தந்தைக்கு இப்படி எழுதுகிறார்:

“ அவர் மகிழ்சியோடு புண்ணகைத்தபடி என்னைப்பார்த்தார். என்னை நெருங்கி வந்து, என் காதருகே கிசுகிசுப்பாக, “ மாம்மா இன் பாரதீஸோ “ (அவர்கள் மோட்சத்தில் இருக்கிறார்கள்!) என்றார். அதன் பின் நான் மீண்டும் அம்மா மோட்சத்தில் இருக்கிறார்களா என்று கேட்டபோது, “ எனக்குத் தெறிந்தவரை, அங்கேதான் இருக்கிறார்கள்” என்றார். நான் மீண்டும் அவர்கள் மோட்சத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டபோது, அவர் இன்னும் அகலமாக புண்ணகைத்து, உறுதியான குரலில், “ ஆம் ! “ என்றார். நான் அவரது கரத்தை முத்தமிட்டு, அவருக்கு நன்றி கூறினேன்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144

நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள, மரியாதைக்குரிய அம்மா பாத்திமா மேரி, கோவை 9994649553;

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !