முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே.
பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.
முதல்: சர்வேசுரா, எனக்கு உதவியாக வாரும்.
பதில்: கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவரியும்.
முதல்: பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்து‡ வுக்கும் மகிமை உண்டாவதாக.
பதில்: ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. அல்லேலூயா. ஆமென்.
(செப்துவாஜெசிமா ஞாயிறிலிருந்து உயிர்ப்பு ஞாயிறு வரை அல்லேலூயாவுக்குப் பதிலாக: நித்திய மகிமைக்கு இராஜாவான ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது என்று சொல்லவும்.)
கீதம்
வரப்ரசாதத்தின் கர்த்தாவே! என் இனிய இரட்சகரே!
மாசற்ற கன்னிகையிடமிருந்து அழியக் கூடிய எங்கள் மனுவுருவெடுத்த உமது திருமாம்சம் தெய்வீகமானது என்று நினைத்தருளும்.
ஓ மரியாயே! வரப்ரசாதங்கள் அனைத்திற்கும் மாதாவே! எம் இனத்தார்க்கு இரக்கத்தின் தாயாரே! பசாசின் வல்லமையிலிருந்து இப்பொழுது எங்களைப் பாதுகாத்தருளும். எங்கள் மரண நேரத்தில் எங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்.
ஓ ஆண்டவரே! எல்லா மகிமையும் உமக்கே உண்டாவதாக! பரிசுத்த கன்னிகையின் சுதனாய் அவதரித்த தேவரீர் சகலராலும் ஆராதிக்கப் படுவீராக. மேலும் பிதாவோடும், தேற்றுகிறவரோடும் தேவரீர் சதாகாலமும் ஒரே ஸ்துதி புகழ்ச்சியைப் பெற்றுக் கொள்வீராக. ஆமென்.