ஆபிரகாம் லிங்கன் அனைத்து அமெரிக்க அதிபர்களுக்கும் மிகவும் பிரியமானவர்

ஆபிரகாம் லிங்கன் அனைத்து அமெரிக்க அதிபர்களுக்கும் மிகவும் பிரியமானவர். அவரை பற்றி படித்தால் அதிகமாக அவரை பிடித்து விடும்.  அவர் அடிமைகளை விடுவித்தார். அமெரிக்காவின் அர்த்தத்தையே  மறுவரையறை செய்தார். இவை அனைத்தையும் அவர் ஞானத்துடனும், இரக்கத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் செய்தார்.அவர் கடவுளுக்கு நேரம் கொடுக்க தவறியதே இல்லையாம். மிகவும் பிஸியான அதிபர் யார் என்றால் ஆபிரகாம் லிங்கன் தான். அவர் தவறாமல் பைபிளைப் படித்ததாகக் கூறப்படுகிறது. அதன் போதனைகள் குறித்த அவரது எண்ணங்கள் எளிமையானவை, வலிமையானவை.உலகிற்கு அழகான அநேக வார்த்தைகள் கொடுத்து உள்ளார். ஒரு மிக பெரிய பணக்காரர் அவரை சந்திக்க அப்பாய்ன்மெண்ட் கேட்டிருந்தாராம். ஆனால் அவரால் சரியான நேரத்தில்  கொடுக்க முடியவில்லையாம். ஒரு நாள் அந்த பணக்காரருக்கு அதிபர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாம். அதில் அதிகாலை 5மணிக்கு நீங்கள் அதிபரை சந்திக்கலாம் என்று தெரிவிக்க பட்டதாம். அவருக்கு ஒரே ஆச்சர்யம் ஒரு அதிபர் 5மணிக்கு சந்திப்பாரா என்று !? 

4.45 கெல்லாம் அந்த பணக்காரர் அதிபர் சந்திக்கும் இடத்திற்கு சென்று வெளி அறையில் காத்து இருந்தாராம். அங்கு அதிபர் யாரோ ஒருவருடன் பேசும் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்ததாம். நமக்கு முன்பாகவே ஒருவருக்கு அப்பாய்ன்மெண்ட் கொடுத்து உள்ளார் போல. எப்பொழுது தான் தூங்குவாரோ!?  என்று யோசித்து கொண்டே இருந்து வேளையில்  நேரம் சரியாக 5 மணி. "உள்ளே வாருங்கள்" என்ற சத்தம். இவர் உள்ளே செல்ல தயங்கி கொண்டிருக்க மறுபடியும் "உள்ளே வாருங்கள்" என்று  2 ஆவதாக சத்தம். உள்ளே சென்று அறை முழுவதும் பார்வையிட்டாராம். இதை கண்ட லிங்கன் என்ன தேடுகுறீர்கள்!? என்று கேட்டார். அதற்கு இல்லை ஒரு நபருடன் பேசி கொண்டு இருந்தீர்கள் அவர் வெளியே வராமல் எப்படி உள்ளே செல்வது என்று யோசித்தேன் மேலும் அவர்  எந்த வழியாக சென்றார்.!?  உள்ளே கதவு எதும் உள்ளதா என பார்த்தேன் என்று பதிலளித்தார்.  லிங்கன் கூறினாராம்,  இல்லை இல்லை நான் எழுந்தவுடன் மனிதர்களிடம் பேசும் முன் கடவுளிடம் பேசுவது வழக்கம். உங்களுக்கு 5 மணிக்கு அப்பா ய்ன்மெண்ட்  வேறு கொடுத்து இருந்தேன். 

எனவே 4 மணியில் இருந்து 5மணிவரை கடவுளிடம் பேசி கொண்டிருந்தேன் என்று கூறினாராம்.