43 புனித பெர்னதெத் ஆலயம், மங்கலகுன்று


புனித பெர்னதெத் அன்னை ஆலயம்.

🍇இடம் : #மங்கலகுன்று.

🍊மாவட்டம் : கன்னியாகுமரி
🍊மறை மாவட்டம் : கோட்டார்.

🍓நிலை : பங்குத்தளம்
🍓கிளை : தூய சகாய அன்னை ஆலயம், சகாயகிரி.

🍒குடும்பங்கள் : 675
🍒அன்பியங்கள் : 13

🌸ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

💐பங்குத்தந்தை : அருட்பணி வின்சென்ட் M பிரான்சிஸ்.

🎉திருவிழா : மே மாதம் முதல் வாரத்திலிருந்து பத்து நாட்கள்.

🛑மண்ணின் மைந்தர்கள் :
💐1. Fr பென்னட் ஜோசப் ராஜ்
💐2. Fr ஸ்பென்சர்

🛑மங்கலக்குன்று வரலாறு :

🍇மங்கலக்குன்று என்னும் இவ்வூர் மங்கலகிரி என்னும் பெயரால் அழைக்கப் பட்டு வந்தது. இந்தப் பகுதியில் ஆலயம் கட்டப்பட்ட பின் மங்கலக்குன்று என மாற்றப்பட்டது.

🌸மங்கலக்குன்று பணித்தளத்தை வடிவமைத்த பெருமை அன்றைய மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்பணி மத்தியாஸ் அவர்களையேச் சாரும். ஆலயம் அமைப்பதற்கு இந்த இடத்தைத் தேர்வு செய்து ஆலஞ்சி கிளைப்பங்கின் ஒரு பகுதியையும், பூட்டேற்றி கிளைப்பங்கின் ஒரு பகுதியையும் இணைத்து மங்கலக்குன்று பணித்தளத்தை வடிவமைத்து 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாளில் காலை 08.00 மணிக்கு இம்மண்ணில் முதல் திருப்பலியை கிறிஸ்து பிறப்பு திருப்பலியாக நிறைவேற்றினார்கள். பின்னர் மண்சுவரும், ஓலைக்கூரையும் கொண்ட சிற்றாலயத்தை நிறுவினார்.

🍓பின்னர் மிடாலம் பங்கின் கிளைப்பங்காக ஆனதுடன், குளச்சல் மறை வட்டத்தில் சேர்க்கப் பட்டது. அந்நாட்களில் அருட்பணி எப்ரேம் கோமஸ் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்து நற்செய்தி அறிவிப்புப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தினார்.

🍊அருட்பணி மத்தியாஸ் அவர்கள் வடிவமைத்த மண்சுவரும் ஓலைக்கூரையுமாக இருந்த ஆலயமானது, அதன் முதலாம் ஆண்டு நிறைவு திருப்பலியன்று, புனித பெர்னதெத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட 18 -ஆம் நாள் 25-12-1933 அன்று அப்போதைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்களின் ஆணைப்படி புனித பெர்னதெத்துக்கு அர்ப்பணிக்கப் பட்டது. இதனால் 08-12-1933 அன்று புனிதையென அறிவிக்கப்பட்ட பெர்னதெத்துக்கு உலகிலேயே முதன்முதலாக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் என்ற சிறப்பை இவ்வாலயம் பெற்றது. பழைய ஆலயம் மாற்றப்பட்டு ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டு 1937 -இல் மேதகு ஆயர் லாரன்ஸ் பெரைரா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

💐22-10-1937 அன்று மங்கலக்குன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. மிடாலக்காடு, கானாவூர் இதன் கிளைப்பங்குகள் ஆயின. அருட்தந்தை தர்மநாதர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.

🌺அருட்பணி தனிஸ்லாஸ் பணிக்காலத்தில் 27-05-1946 -இல் பொட்டக்குழி, மாங்கன்றுவிளை -யும் பூட்டேற்றி கிளைப்பங்கிலிருந்து பிரித்தெடுத்து மங்கலக்குன்று பங்குடன் இணைக்கப் பட்டது.

🍓அருட்பணி செல்வராஜ் அவர்கள் பணிக்காலத்தில் ஓடுவேய்ந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பணியை குருகுல முதல்வர் அருட்பணி சூசை மரியான் அவர்கள் 12-02-1980 அன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்று 16-01-1983 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

🍓இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்த அருட்பணி A. செல்வராஜ் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்குச் சென்று புனித பெர்னதெத்தின் அழியா உடலைக் கண்டும், ஏராளமான பெர்னதெத்தின் புகைப்படங்களைப் பெற்றும் வந்து, அதனை மக்களுக்கு வழங்கி பெர்னதெத் தங்களது வாழ்வுக்கு முன்மாதிரியாக இருக்கும்படிச் செய்தார்.

🍒பல ஆண்டுகளாக கிளைப்பங்காக இருந்த மிடாலக்காடு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. பின்னர் கானாவூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

🍒 அருட்தந்தை ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில் சகாயகிரி -யில் ஒரு கிளைச்சபை தொடங்கப்பட்டது. 08-12-1968 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்கள் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1988 -இல் அருட்பணி சூசை அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார். அதுவரை ஓலைக்குடிசையில் ஆலயம் செயல்பட்டு வந்தது.

🌸அருட்பணி தொபியாஸ் அவர்களின் பணிக்காலத்தில் மங்கலக்குன்றில் 28-05-1978 அன்று பங்கு அருட் பணிப்பேரவை தொடங்கப்பட்டது.

🌸பங்கின் தொடக்க காலத்திலேயே ஒரு கெபி கட்டப்பட்டிருந்தது. மழை வெயிலால் பாதிக்கப்பட்ட இந்த கெபி ஓடு போடப்பட்டு சீர் செய்யப்பட்டது.

🍇பின்னர் அருட்தந்தை சாலமோன் அவர்களின் பணிக்காலத்தில் பங்கு மக்களின் தாராள நன்கொடையில் மிகப்பொலிவுடன் கூடிய குருசடி கட்டப்பட்டு 14-09-2005 அன்று மறை மாவட்ட ஆயர் பதிலாள் பேரருட்பணி சூசை அவர்களால் திருநிலைப் படுத்தப் பட்டது.

💐லூர்து அன்னை பெர்னதெத்துக்கு காட்சியளிக்கும், காட்சியானது தத்ரூபமாக அமைக்கப் பட்டிருப்பது இக்குருசடிக்கு மென்மேலும் சிறப்பைத் தருகின்றது.

🌺மங்கலக்குன்று பங்கிற்கு காய்க்கவிளாகம், மாங்கன்றுவிளை (மேற்கு), கீழப் பொட்டக்குழி ஆகிய மூன்று அன்பியங்களிலும் தலா ஒரு குருசடி அமைந்துள்ளது.

🌺பாண்டிச்சேரி மறை மாவட்டத்தைச் சேர்ந்த, கொன்சாகா கன்னியர் சபை அருட்சகோதரிகளை 1969-ஆம் ஆண்டில் அப்போதைய ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்கள் அழைப்பு விடுத்து, அதன்படி கன்னியர் இல்லம் கட்டப்பட்டு 13-06-1969 அன்று திறக்கப் பட்டது.

💥இவ்வாறாக சிறப்புற்று விளங்கிய ஆலயத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்டும் எண்ணம் 2006-ஆம் ஆண்டிலேயே எழுந்தது..

💥புதிய ஆலயம் கட்ட அருட்பணி சகாய ஜஸ்டஸ் அவர்கள் பணிக்காலத்தில் 2008 ல் நடந்த பங்குப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🍇அருட்பணி ஜோசப் ரொமால்டு அவர்கள் பணிக்காலத்தில் 28-12-2012 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அகர்தலா மறை மாவட்ட ஆயர் மேதகு லூமன் மொன்றாரோ அவர்கள் முன்னிலையில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

🍇பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் ரொமால்டு அவர்களின் வழிகாட்டுதலில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 15-05-2015 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

🛑பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

1. Fr S. தர்மநாதர்
2. Fr Dஇயேசுதாசன்
3. Fr M. தனிஸ்லாஸ்
4. Fr M. மரியகிரகரி
5. Fr D. செபஸ்தியான்
6. Fr A. E. இரெத்தினசாமி
7. Fr அல்போன்ஸ் மரியா O.C.D
8. Fr L. சேவியர் ராஜமணி
9. Fr M. மரியகிரகரி
10. Fr P. ஜோசபாத் மரியா
11. Fr I. தனிஸ்லாஸ்
12. Fr P. ஜோசபாத் மரியா
13. Fr T. இயேசுதாசன்
14. Fr S. ஜோசப்
15. Fr M. சூசை மிக்கேல்
16. Fr A. தொபியாஸ்
17. Fr A. செல்வராஜ்
18. Fr M. சூசை
19. Fr M. தேவசகாயம்
20. Fr V. சூசை மரியான்
21. Fr S. மரியதாசன்
22. Fr S. சாலமோன்
23. Fr. W சகாய ஜஸ்டஸ்
24. Fr G. ஜோசப் ரொமால்ட்
25. Fr. வின்சென்ட் M பிரான்சிஸ் (தற்போது...)