கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 24 /25 ***


“ இதோ ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா “

                லூக்காஸ் 2 : 10 – 11

மீட்பின் செய்தி, மீட்பரின் பிறப்பின் செய்தி ஆடுகள் மேய்க்கும் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. மீட்பர் இயேசு பிறப்பிலும் எளிமை. அவர் பிறப்பு நிழழ்ந்தது மாட்டுக்கொட்டகையில். முன்பே சொன்னது போல் வாவில்லா ஜீவன்களுக்கு மத்தியில், பாவமில்லா ஜீவன்களுக்கு மத்தியில். கடவுள் முடிவு செய்துவிட்டார் என் மகன் பிறப்பு நிகழும்போது பாவிகளுக்கு அங்கு இடமில்லை. அந்த இடத்தில் மனிதர்கள் யாரும் இருக்கக்கூடாது. பாருங்கள் ஜென்ம பாவம் இல்லாமல் உற்பவித்த அவள் அன்னை மரியாளும், கடவுளுக்கு கீழ்படிந்து நீதிமானாக வாழ்ந்த சூசையப்பரையும் தவிர எந்த மனிதருக்கும் அங்கு இடமில்லை. அதே நேரத்தில் வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடுகளுக்கு அங்கு இடம் கொடுக்கபடுகிறது. ஆறறிவு படைத்த மனிதர்கள் அங்கு புறக்கனிக்கப்படுகிறார்கள். ஐந்தறிவு ஜீவன் மீட்பர் இயேசு பிறப்பை காணும் பாக்கியம் கொடுக்கப்படுகிறது.

இதோ இங்கு பாருங்கள் மீட்பர் பிறப்பின் செய்தி யாருக்கு அறிவிக்கப்படுகிறது. அரசனுக்கு அறிவிக்கப்படவில்லை. பணம் படைத்த பெரிய பணக்காரர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. பரிசேயர்கள், சதுசேயர்கள் ஏன் தலைமைக்குருக்களுக்கு கூட அறிவிக்கபடவில்லை. மாறாக இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பணம் படைத்தவர்கள் அல்ல. அன்றாடம் ஆடுமாடுகளை மேய்த்து வரும் பணத்தில் பசி அருந்தும் சாதாரண ஏழைகள். ஆனால் அவர்கள் கபடற்றவர்கள், சூதுவாது தெறியாதவர்கள். அவர்களுக்கு மனிதர்களை பற்றி நிறைய தெறியாதவர்கள் ஆனால் ஆடுமாடுகளைப்பற்றி நிறைய தெறிந்தவர்கள். இன்னொன்று பொய் சொல்லத்தெறியாதவர்கள். பார்த்ததை பார்த்த மாதிரியே சொல்வார்கள். கூட்டி குறைத்து இல்லாததை இருப்பதுபோலும், இருப்பதை இல்லாதபோலும் சொல்லத்தெறியாதவர்கள்.

இதிலிருந்து கடவுளுக்கு எது பிடிக்கும்? யாரைப்பிடிக்கும் என்பது தெளிவாக புலனாகிறது. எந்த செயற்கைதனமும் உள்ள இயல்பானவர்கள் அவருக்கு பிடிக்கிறது, எளிமையானவர்கள் அவருக்கு பிடிக்கிறது. கபடற்றவர்கள் அவருக்கு பிடிக்கிறது. வேசம் போடுபவர்கள் அவருக்கு பிடிக்காது. நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் அவருக்கு பிடிக்காது. ஏனென்றால் அவர் கண்களுக்குத்தான் எந்த முகமுடியோ, வேசமோ தெறிவதில்லையே நேரிடையாக உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் அவருக்கு தெறியும். அவருடைய பார்வை மனிதர்களின் மேலோட்டமான பார்வை அல்ல. உள்ளத்தை, எண்ணத்தை ஸ்கேன் செய்யும் ஊடுறுவும் பார்வையாயிற்றே..

என் நண்பன் சொல்லிய இந்து மதத்தில் வரும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு முறை குருகுல மாணவர்களுக்கு அவர்கள் ஆசிரியர் ஆளுக்கு ஒரு வாழைப்பழம் கொடுத்தார். வாழைபழத்தை கொடுத்துவிட்டு ஒரு நிபந்தனையும் விதித்தார். அந்த வாழப்பழத்தை யாருக்கும் தெறியாமல் உண்ண வேண்டும். அவர்கள் உண்ணுவதை யாரும் பார்க்கக்கூடாது. யாரும் என்றால் யாருமே பார்க்கக்கூடாது. மறு நாள் வகுப்பறை ஆரம்பமானது. மாணவர்களை பார்த்தார் யார் கையிலும் வாழைப்பழம் தெறிவவில்லை. எப்படி சாப்பிட்டீர்கள் என்று கேட்க ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு பதில்.. “ சார் நான் வீட்டுல யாருமே இல்லாதபோது கதவை பூட்டிக்கொண்டு சாப்பிட்டேன் “ “ சார் எல்லாரும் தூங்கியபின்பு நான் மட்டும் விழித்திருந்து சாப்பிட்டேன்” “ நான் பாத்ரூமில் போல் சாப்பிட்டேன் “ என்று பதில் வந்துகொண்டிருந்தது. 

இன்னொரு குரலும் சேர்ந்து வந்தது “ சார் ஒருத்தன் வாழைப்பழத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருக்கிறான் “ என்றது. அவனை ஆசிரியர் அழைத்தார். ஏன் நீ மட்டும் சாப்பிடவில்லை. உன்னைச் சுற்றி யாராவது இருந்து கொண்டே இருந்தார்களா என்ன ? “ என்று கேட்க. அவன் சொன்ன பதில் வெகுளித்தனமாகவும் அதே நேரத்தில் உண்மையானதுமாக இருந்தது.

“ சார் நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். அறைக்குள் சென்று கதவைக்கூட பூட்டிவிட்டேன். எல்லாரிடமும் என்னால் மறைக்க முடிந்தது. எங்கும் இருக்கும் கடவுளிடம் மட்டும் என்னால் மறைக்கமுடியவில்லை. நான் வாழைப்பழம் சாப்பிடுவதை கடவுள் பார்த்துக்கொண்டே இருப்பாரே ! அதனால்தான் சார் என்னால் சாப்பிட முடியவில்லை.” என்றான். ஆசிரியர் “ எதிர்பார்த்திருந்த பதில் அவனிடமிருந்து வந்ததை எண்ணி மகிழ்ந்தார்..

அதேபோல் “ யாருக்கும் தெறியாமல் பாவம் செய்யலாம் ஆனால் ஆண்டவருக்கு தெறியாமல் பாவம் செய்ய என்ன ? பாவம் செய்ய நினைக்க கூட முடியாது”

ஜெபம் :எல்லாம் அறிந்த எல்லாரையும் அறிந்த இறைவா ! உன் பிறப்பு செய்தியை எளிமையான அந்த இடையர்களுக்கு அறிவித்தீர். எங்கள் உள்ளமும் அவர்களை போல கபடற்றதாக மாற வேண்டும். அடுத்தவர்களை எப்படி கெடுக்கலாம், அவர்கள் நன்றாக வாழக்கூடாதே, அவன் மட்டும், அவள் மட்டும் நல்லா இருக்கானே, இருக்காளே என்பது போன்ற தரங்கெட்ட உமக்கு அருவருப்பான சிந்தனைகளையும், செயல்களையும் எங்களிடமிருந்து அகற்றியருளும்.

இன்று இரவு உன் பிறப்பு விழாவை கொண்டாட இருக்கிறோம். நல்ல பாவசங்கீர்த்தணம் செய்து எங்களை நாங்கள் தூய்மை படுத்த இருக்கிறோம். உம்முடைய பிறப்புக்கு முன் நாங்கள் புதுப்பிறப்பு அடைய இருக்கிறோம். இதற்கு முன் வாழ்ந்தவன், வாழ்ந்தவள் வேறு இயேசு பிறப்பு நாளிலிருந்து வாழப்போறவன், வாழப்போறவள் வேறு என்று அவர் முன் உறுதி எடுப்போம்.

உலகத்தில் பாவம் என்ற இருள் அகற்ற ஒளியாகிய பிறந்த இயேசுவை உள்ளத்தில் உள்ள பாவம் என்ற இருளை அகற்றி ஒளியான அவரை உண்மையான ஏற்க அவரிடம் வேண்டுவோம் -ஆமென்