105 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், உவரி


அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

இடம் : உவரி

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : சாத்தான்குளம்

பங்கு : உவரி ( புனித அந்திரேயாஆலயம்)
பங்கின் மொத்த ஆலயங்கள் : 4

திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் : இவோன் அம்புரோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி தோம்னிக் அருள் வளன்
இணை பங்குத்தந்தை : அருட்பணி பவுல் ஹிபாகர்

திருவிழா

கொடியேற்றம் -
ஆகஸ்ட் 30
மாலை ஆராதனை -
செப்டம்பர் 07
திருவிழா கூட்டு திருப்பலி-
செப்டம்பர் 08

திருப்பலி :

மாதத்தின் மூன்றாம் சனி மாலை 06.00 மணி

ஜெபமாலை :

தினமும் மாலை 07:00 மணி

வரலாறு:

உவரியின் மேற்கு எல்லையில் மக்களுக்கு ஆரோக்கியம் வழங்கும் முகமாக அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம் நிமிர்ந்து நிற்கிறது. 1980 ம் ஆண்டு இப்பகுதி மக்கள் சிறியதாக ஒரு கெபி அமைக்க அடிக்கல் நாட்டி 1981 ஆம் ஆண்டு நிறைவு செய்து தினமும் ஜெப வழிபாடு செய்து வந்தார்கள். ஆண்டுகள் நகர நகர மக்களும் பெருந்திரளாக கெபிக்கு வந்து அன்னையை தரிசித்து சென்றதால் சுமார் பதினோரு ஆண்டுகள் கழித்து மக்களின் தேவைக்கேற்ப ஒரு தியான மண்டபம் இப்பகுதி மக்களால் கேபி முகப்பில் உருவாக்கப்பட்டது. 1993 ம் ஆண்டு அருட்தந்தை ஜெரோசின் அ கற்றார் சுவாமிகளால் அந்த மண்டபமானது அர்ச்சிக்கப்பட்டது. காலப்போக்கில் கோவில் சிதைவடைந்த நிலையில் இருந்ததால் 1999ம் ஆண்டு இப்பகுதி மக்கள் அன்னைக்கு புதிய ஆலயம் அமைப்பது என முடிவு செய்து அதன் பொறுப்பை கவனிக்க பங்குத்தந்தை தலைமையில் ஒரு புதிய செயற்குழுவை தேர்வு செய்தார்கள். 20-6-1999 ம் ஆண்டு இவ்வாலயத்திற்கு அருட்தந்தை இருதயராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

செயற்குழு தங்களின் முழு உழைப்பாலும் மக்களின் பண மற்றும் பொருளுதவியாலும் அன்னைக்கு அழகான ஒரு புதிய ஆலயத்தை 11 மாதங்களில் கட்டி முடித்தார்கள். 11- 05-2000-ம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் இந்த ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு, ஆலயத்தில் முதன்முதலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அன்னையின் ஆலயத்தில் முன் முகப்பில் ஒரு மண்டபம் உருவாக்க வேண்டும் என்ற இம்மக்களின் விருப்பத்தை அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை பிராங்ளின் பெர்னாண்டோ அவர்கள் நிறைவேற்றினார்கள். ஆலயத்தின் முகப்பில் பெரியதொரு மண்டபத்தை அமைத்து 30-08-2007 ம் ஆண்டு அருட்தந்தை பிராங்ளின் பெர்னாண்டோ அவர்களே அர்ச்சித்து புனிதப்படுத்தினார். தற்பொழுது திருவிழாவில் அனைத்து நிகழ்வுகளும் இந்த மண்டத்தில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.