புனித பிரான்சிஸ் அசிசியார் சில தகவல்கள்

இயற்கையை அதிகம் பார்த்து வியந்து அதில் இறைவனின் அழகையும் அவர் மனிதன் மீது கொண்டிருக்கும் பேரன்பை பார்த்து வியந்து அவரை அதிகம் அன்பு செய்த புனித பிரான்சிஸ் அசிசியார் சில தகவல்கள்

இவர் மிகப் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு குழந்தை

தந்தை ஜவுளிக்கடை நடத்தி வந்தார் ஏராளமான சொத்து இருந்ததால் தமது முதல் குழந்தை பிறப்பதற்காக தங்க கட்டில் தயார்படுத்தி வைத்தார்

குழந்தை பிரசவம் நேரம் வந்தபோது தாய் அந்த கட்டிலில் படுக்க வைக்கப்பட்டார்

குழந்தை பிறக்கவில்லை தாயின் வேதனைதான் அதிகரித்தது

அந்த புனிதரின் தாய் கூறினார் என்னை குதிரை லாயத்தில் படுக்க வையுங்கள்(ஏறக்குறை மாட்டு தொழுவம்) என்றார்(கிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைத்துக் கொள்ளுங்கள்)

அப்படியே செய்தனர் குழந்தை சுகமாக பிறந்தது இது அக்குழந்தை கடவுளின் புனிதர் என்பதை உறுதி செய்கிறது

வளர்தவர் உலகாதயத்தோடு மிகப் பெரும் போர் வீரராக மாறும் மனநிலை கொண்டிருந்தார்

ஒருநாள் இவர் ஜவுளிக்கடையில் இருந்த போது பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை கேட்டு வந்தார்

நம் புனிதரோ கடையில்(மிகப் பெரிய கடை) ஓர் அற்றத்தில் நின்றார்

கல்லாப் பெட்டியை நெருங்கும் முன் பிச்சைக்காரர் வெளியேறிவிட்டார்

புனிதரோ காசை எடுத்துக் கொண்டு ஓடோடி சென்று அவரை தேடி பிடித்து அவருக்கு வழங்கினார்(பிச்சையிடும் முறையை இவரிடம்தான் கற்க வேண்டும்)

கடையின் வேலையாட்கள் இதை அவரது தந்தையிடம் கூறி உமது பணத்தை இவர் அழித்துவிடுவார் என்றனர் தந்தை இவரை கல்லாப் பெட்டியில் இனி இருக்க வேண்டாம் என்றார்

ஒரு முறை ஆலயம் சென்றார் அப்போது பிரான்சிஸ் நமது ஆலயத்தை சரி செய் எற்ற குரல் கேட்டது

பழுதுபட்டிருந்த ஆலயத்தை சரி செய்தார்

மீண்டும் அக்குரல் அவர் ஆலயம் சென்றபோது கேட்டது

இப்போது சிந்தித்தார் தான் துறவியாக முடிவு செய்தார்

தந்தை தடுத்தார் எனது சொத்தின் ஒரே வாரிசு இவன்தான் என மறுத்தார்

வழக்கு ஸ்தல ஆயரிடம் வந்ததை அந்த ஆயரோ ஒரு தரித்திரர் ஒரு ஆடைக்கு மறு ஆடை என்பது குறைவு

ஆயர் விசாரணை செய்து துறவு மேற்கொள்வது அவனது விருப்பம் நீங்கள் தடுக்க உரிமை இல்லை என்றார்

தந்தையோ அப்படியானால் அவன் உடுத்தியிருக்கும் ஆடை என்னுடையது அதையும் தந்துவிட்டு செல்ல வேண்டும் என்றார்

புனிதர் சம்மதித்தார் அந்த ஆடையை தந்தையிடம் கொடுத்தார்

உடுத்த மறு ஆடை வேண்டுமல்லவா ஆயரிடம் துண்டு துணி கேட்டார்

ஆயரோ தரித்திரர் அல்லவா தனது ஒரே போர்வையை இரண்டாக கிழித்து ஒரு துண்டை கொடுத்தார்

புனிதர் அதை வாங்கி உடுத்திக் கொண்டு தந்தையின் ஆடையை அவருக்கு திருப்பி கொடுத்தார்

கடுமையான கோட்பாடுகளுடன் சபை தொடங்கினர்(இப்போது அது தளர்தப்பட்டு விட்டது ஆனால் அதை அதை பின்பற்றும் சபை ஒன்று sspx தலைமையின் கீழ் உள்ளது)

கடைசிவரை ஒரே அங்கி வைத்திருந்தார் அது பல பொத்தல்களை கொண்டிருந்தது

பலமுறை அதை தைத்திருந்தனர் இன்றும் அசிசியில் அது உள்ளது

துஷ்ட அருபிகள் மனிதனுள் நுழைவது இவரது கண்ணுக்கு தெரியும்

ஆண்டவரை அதிகம் அன்பு செய்து அதனால் பகிரங்க ஐந்து காய வரத்தை தன்னில் பெற்ற முதல் புனிதர்

அடிக்கடி இரத்தம் வடிந்து வேதனை அனுபவிப்பார்

நான் நற்கருணை ஆண்டவரை கரங்களில் தொட தகுதியில்லை என கூறி டீக்கன் பட்டத்திற்கு மேல் குருப்பட்டம் பெற மறுத்துவிட்டார்(கரங்களில் நற்கருணை வாங்குவோரே சிந்தியுங்கள்)

இன்னொரு முறை பாடுபட்ட சிலுவை முன் ஜெபம் செய்யும் போது(அதிக துன்பம் புனிதர் அடைந்த பின்) ஆண்டவரே இன்னும் உமது வேதனை குறையவில்லையா என கேட்டார்

சிலுவையில் தொங்கிய ஆண்டவர் தமது வலது கரத்தை கீழே இறக்கி முதுகில் தட்டிக் கொடுத்தார்

இவர் ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் தந்கத் தேரில் வந்து அவருள் குடிபுகுவார்

நம் புனிதரோ செராபிக் செயின்ட்(செராபிக் சம்மனசுக்களுக்கு இணையானவர்)

அவரது பாடல்கள் கடவுளால் அதிகம் விரும்பப்பட்டவை

ஐ.நா.சபை ஜெபம் இவர் இயற்றியதுதான் தற்போதும் அது நடைமுறையில் உள்ளது

துன்பத்தையும் தரித்திரத்தையும் அதிகம் கடவுளுக்காக நேசித்தவர்(இங்கு கவனிக்க வேண்டியது உங்களது செயல் ஒவ்வொன்றும் கடவுளுக்காக அன்னை மாமரிக்காக என உள்ளதா நினைவு கூருங்கள்)

அவரது பசிலிக்காவில் உள்ள சுரூபத்தில் மட்டும் இரு புறாக்கள் உயிருடன் அமர்ந்திருக்கும் ஒன்று இரை தேட போனால் வேறொன்று அங்கு வந்து அமரும் இன்றும் அது நிகழ்கிறது

வேறு இடங்களில் அவரது சுரூபங்களில் புறா உருவம் செய்து வைக்கப்படும்

குடில் கட்டும் நடைமுறை சிலுவைப்பாதை செய்வித்தல் இரண்டும் அவர் அறிமுகம் செய்த உயரிய ஆன்மீக நடைமுறைகளில் அடங்கும்

குடில் கட்டும் போது இவரை நினைவு கூருங்கள்

உங்களது ஆன்மீகக் குடிலை பாவசங்கீர்த்தனத்தால் அழகாக்குங்கள்

போர்சிங்குலாவில் உள்ள அவரது ஆலயம்(சம்மனசுக்களின் இராக்கினி ஆலயம்) செல்வோர் ஆகஸ்ட் 1 பிற்பகல் முதல் ஆகஸ்ட் 2 மாலைவரை சந்தித்து பாவசங்கீர்த்தனம் செய்து வேண்டுவோர் முழு பாவமன்னிப்பு வரம் பெறுவர்

இது தற்போது அனைத்து ஆலயங்களுக்கும் மேற்கூறிய நேரத்தில் சந்தித்து பரிபூரண பலன் பெற திருச்சபை அனுமதி தந்துள்ளது

புனித பிரான்சிஸ் அசிசியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்