புனித பிரான்சிஸ் சவேரியார் புனிதரைப் பற்றி சில தகவல்கள்!

கோட்டாரில் ஆயுள் முடிந்து இறந்த இந்து சிறுவனை உயிர்பித்து தான் ஆன்மாக்களை பிடிப்பவர் பிணம் தின்னி மனிதரல்ல என மன்னரின் சேவகர் முன் நிருபணம் செய்து போதக உரிமையை பெற்றார்

கோட்டார் கல்லறையில் முதலில் அடக்கம் செய்யப்பட்டது அந்த சிறுவனே

தினமும் 22 மணி நேரம் ஜெபம் செய்வார்

ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கும் ஈரிட பிரசன்னம் பெற்ற புனிதர்

சாந்தோமில் இருந்த போது புனிதர் அலகை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தியானம் செய்த போது அலகை அவரை தாக்கியது உடனே பங்கு குருவின் இல்லம் சென்றுவிட்டார் பங்கு குரு அங்கே போக வேண்டாம் என எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அனைத்திலும் தனக்கு உதவியாக இருந்த சீஷப்பிள்ளை அந்தோனியா பிள்ளையை பாம்பு கடித்து இறந்த போது தனது வாயை கடிவாயில் வைத்து இரத்தத்தை உறிஞ்சி துப்பி பின்னர் உயிர்த்தெழ செய்தார்

ஒரு நாள் ஏறக்குறைய 3000 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் அன்றைய தினம் அவரது வலக்கரம் வீங்கிவிட்டது அந்தோனியாபிள்ளை கையை தாங்கிக் கொள் நான் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என கூறியபோது அவர் கரத்தை தாங்கிக் கொண்டார் அந்த கரம் உரோமை பசிலிகாவில் அழியாமல் இருக்கிறது

ஆலந்தலை பகுதில் கடற்கரையில் புனிதர் தோண்டிய கிணறு நன்னீர் ஊற்றாக அமைந்தது தற்போதும் அப்படியே உள்ளது

அந்தோனியா பிள்ளை புறா கறி சமைத்து அது ருசியாக இருந்தது என பாராட்டி நாளையும் புறாக்கறி வை என்றார் அன்றைய ஆத்தும சோதனையில் அது போசனப்பிரியம் என கண்டுணர்ந்து சமைத்த கறியில் கை நிறைய உப்பை அள்ளிப் போட்டார் இது அந்தோனியா பிள்ளைக்கு தெரியாது சாமி கறி நன்றாக இருக்கிறதா என கேட்டார் நம் புனிதர் இன்றுதான் கறி வெகு சுவையாக உள்ளது என்றார் அந்தோனியாபிள்ளை உண்டபோதுதான் தெரிந்து கொண்டு சாமி இதை எப்படி உண்டீர்கள் என வினவினார்

புனித இஞ்ஞாசியார் கொடுத்தனுப்பிய சிலுவையால் பல புதுமைகள் செய்திருந்தார் ஒருநாள் அந்த சிலுவை கடலில் விழுந்துவிட ஒரு நண்டு எடுத்து கரையில் சேர்த்தது அதை புனிதர் ஆசிர்வதித்தார் அந்த ஆசிர்வாதம் நண்டு மீது சிலுவை அடையாளமாக விழுந்தது அதுவே சிலுவை நண்டு இன்று அந்த இனம் வலையில் சிக்கினால் திரும்ப கடலில் விட்டுவிடுவர்

புனிதர் மந்திரித்த பொருட்களை வைத்த இடமெல்லாம் அலகை விலகி ஓடியது

புனிதர் ஒரு தடவை திருவிதாங்கூர் மகாராஜாவை பார்க்க சென்ற போது மன்னனின் மகள் புனிதரின் அழகில் மயங்கி இச்சித்துவிட்டாள் புனிதர் அவளிடம் ஒரு குங்கும சிமிழ் கேட்டார் அவள் வெள்ளிச்சிமிழை கொடுத்தாள் அதை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது தொடையில் ஒரு துண்டு தசையை வெட்டி அதனுள் வைத்து அவளுக்கு பரிசாக கொடுத்து மூன்று நாட்கள் கழித்து திறந்து பார் என்றார் அவள் அப்படியே பார்த்த போது துர் நாற்றம் வீசியது புனிதரை மீண்டும் சந்திக்கும் போது அவள் கேட்டாள் ஏன் இப்படி செய்தீர் என அவரோ இச்சிப்பது பாவம் என்பதை உணர்த்தவே அப்படி செய்தேன் என்றார்

புனிதரின் தாடி 1931 வரை வளர்ந்து கொண்டிருந்தது அதை அறிவியல் ஆய்வுக்கு உரோமை சம்மதித்ததால் தோல் முழுமையும் எடுக்கப்பட்டு ஆம் இயற்கையாகவே வளர்கிறது இரத்த ஓட்டம் உள்ளது என்றனர் அதன்பின் தோல் இல்லாததால் முடி வளரவில்லை

அவரது உடலின் பாகங்கள் சிறிது சிறிதாக வெட்டி அருளிக்கமாக பல நாடுகளுக்கு கொடுத்ததால் தற்போது கோவாவில் உள்ள அவரது சரீரம் அருளிக்க நிலைக்கு மாறிவிட்டது

ஏறக்குறைய 460 ஆண்டுகள் கடந்தபின்னும் அது சுகந்தமாய் உள்ளது

அவரது சரீரம் இந்திரா அம்மையார் காலத்தில் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது

புனிதரின் புகழ் ஓங்குக அவரின் பரிந்து பேசுதலை என்றென்றும் உரிமையாக்குவோம்