82. (42) திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?
சேசுநாதர்சுவாமிதான்.
1. எப்படி சேசுநாதர் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறார்?
தலையானது சரீரத்துக்குப் பிரதான உறுப்பாயிருந்து அதை ஆண்டு நடத்திவருவதுபோல் சேசுநாதர் தம்மால் ஸ்தாபிக் கப்பட்ட திருச்சபையில் காணப்படாத விதமாயிருந்து,இஸ்பிரீத்து சாந்துவின் மூலமாய் அதைக் காப்பாற்றி ஆண்டு நடத்தி வருகிறார். மேலும், திருச்சபையின் அங்கத்தினர் எல்லோரையும் தம்மில் ஐக்கியப்படுத்துகிறார்.
2. சேசுநாதர் திருச்சபைக்கு எப்பேர்ப்பட்ட தலைவர்?
நமதாண்டவர் மோட்சத்துக்கு எழுந்தருளியிருக்கிற படியால், இப்போது உலகத்தில் மனிதருடன் வாசம்பண்ணி சீவியாததைப்பற்றி அவர் திருச்சபைக்குக் காணப்படாத தலைவர் என்று சொல்ல வேண்டும்.