வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை செய்து வந்த செபம்

நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட திருவுளமான என் இயேசுவே! மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே! உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.

வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.
 
தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன். எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.

திருக்கன்னி மரியாயின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே! உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும். நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.
 
சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!

ஆமென்.

அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம் - நைசின். கி.பி. 325 - கி.பி. 381

தமிழ்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய்ச் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.

இலத்தீன்.

Credo in Deum Patrem omnipotentem, Creatorem caeli et terrae, et in Iesum Christum, Filium Eius unicum, Dominum nostrum, qui conceptus est de Spiritu Sancto, natus ex Maria Virgine, passus sub Pontio Pilato, crucifixus, mortuus, et sepultus, descendit ad inferos, tertia die resurrexit a mortuis, ascendit ad caelos, sedet ad dexteram Dei Patris omnipotentis, inde venturus est iudicare vivos et mortuos. Credo in Spiritum Sanctum, sanctam Ecclesiam catholicam, sanctorum communionem, remissionem peccatorum, carnis resurrectionem, vitam aeternam. Amen.

கிரேக்கம்.

Πιστεύω εἰς θεòν πατέρα, παντοκράτορα, ποιητὴν οὐρανοῦ καὶ γῆς. Καὶ (εἰς) Ἰησοῦν Χριστòν, υἱὸν αὐτοῦ τòν μονογενῆ, τòν κύριον ἡμῶν, τòν συλληφθέντα ἐκ πνεύματος ἁγίου, γεννηθέντα ἐκ Μαρίας τῆς παρθένου, παθόντα ἐπὶ Ποντίου Πιλάτου, σταυρωθέντα, θανόντα, καὶ ταφέντα, κατελθόντα εἰς τὰ κατώτατα, τῇ τρίτῃ ἡμέρᾳ ἀναστάντα ἀπò τῶν νεκρῶν, ἀνελθόντα εἰς τοὺς οὐρανούς, καθεζόμενον ἐν δεξιᾷ θεοῦ πατρὸς παντοδυνάμου, ἐκεῖθεν ἐρχόμενον κρῖναι ζῶντας καὶ νεκρούς. Πιστεύω εἰς τò πνεῦμα τò ἅγιον, ἁγίαν καθολικὴν ἐκκλησίαν, ἁγίων κοινωνίαν, ἄφεσιν ἁμαρτιῶν, σαρκὸς ἀνάστασιν, ζωὴν αἰώνιον.
Ἀμήν.

ஆங்கிலம்

I believe in God, the Father almighty, creator of heaven and earth. I believe in Jesus Christ, God's only Son, our Lord, who was conceived by the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, died, and was buried; he descended to the dead. On the third day he rose again; he ascended into heaven, he is seated at the right hand of the Father, and he will come to judge the living and the dead. I believe in the Holy Spirit, the holy catholic Church, the communion of saints, the forgiveness of sins, the resurrection of the body, and the life everlasting. Amen.

பாவிகளின் அடைக்கல ஜெபம்.

பரலோக பூலோக இராக்கினியே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ நான் நாலாபக்கமும் துன்பப்பட்டு, அண்ட ஓர் ஆதரவின்றி, மோட்ச நெறியை விட்டு பாவச் சேற்றில் அமிழ்ந்து நிற்கிறேன். சூது கொண்ட பசாசு ஒருபக்கம் என்னை தொந்தரை செய்கிறது. பெரிய பூலோகம் தன் மாயையால் என்னை அலைக்கழிக்கிறது. விஷமேறிய உடலோ என்னை எந்நேரமும் சஞ்சலப்படுத்துகிறது. நான் உமது திருமகனுக்கு என் பாவத்தால் விரோதியானதால் என் இருதயத்தில் பயங்கரமுண்டாயிற்று. இப்படிப்பட்ட வேலையில் நான் எங்கே ஆதரவடைவேன்?

என் பாவக்கொடுமையின் காற்றால்  இழுக்கப்பட்ட  தூசு போலானேன். அரவின் வாய்த் தேரை போலானேன். ஆலைவாய்க் கரும்பு போலானேன். அன்னையில்லாப் பிள்ளை போலானேன். புலியின் கைபட்ட பாலகன் ஆனேன். நான் பாதாளத்தில் ஒளிந்தாலும் அங்கேயும் ஆண்டவர் என் குற்றத்தைக் காண்கிறாரே, பூமியில் எந்த மூலையில் போனாலும் என் பாவம் என்னைத் தொடர்வதால் எனக்குத் திகிலும் கிலேசமும் இன்றி வேறு என்ன உண்டு? இறைவனுடைய நீதிக்குப் பயப்படுகிறேன். நீர் இறைவனுடைய தாயும் மனுக்குலத்திற்கு அரசியுமானதால் உமது அடைக்கலத்தில் ஓடி வந்தேன்.

என் பாவத்துக்காக அழுது வியாகுலப்பட்ட தாயே! என் பேரில் இரங்கி நான் படும் துயரை மாற்றி எனக்காக உம்முடைய திருமகனை மன்றாடும். எனக்கு பூமியும் அதன் செல்வ சுகங்களும் வேண்டாம். மகிமையும் மாட்சிமையும் வேண்டாம். சரீர இன்ப சுகமும், புகை போல் மறையும் பேர் கீர்த்தியும் வேண்டாம். என் ஆண்டவரும், அவர் இராச்சிய பாரமும் எனக்கு அகப்பட்டாலே போதும். அப்பாக்கியத்தை நினைத்து நினைத்து அனலில் விழுந்த புழுப்போல் துடிக்கிறேன். அம்பு தைத்த மான் போல் அலறுகிறேன். காட்டில் இராக்காலத்தில் அகப்பட்ட பிள்ளையைப் போல் திகைத்து நிற்கிறேன்.

நீர் சகல புண்ணியங்களைக் கொண்ட ஆண்டவளுமாய் இரக்கம் நிறைந்த என் தாயுமாகையால் அக்கினி பற்றி வேகும் வீட்டில் அகப்பட்ட பிள்ளைக்கு கை கொடுப்பார் போல் நீர் எனக்கு இத்தருணத்தில் கை கொடும். கடலில் நீந்தி அமிழ்ந்தித் திரிபவர்க்கு கப்பற்காரர் உதவுமாப்போல், நீர் எனக்கு இந்த ஆபத்தான வேளையில் உதவ வாரும். சீக்கிரமாக வாரும். தயையோடும் இரக்கத்தோடும் வாரும். நான் இறைவனுக்கு ஏற்காத பாதகனென்றாலும், நான் உம்மை நோக்கி நீட்டிய கை பதறுவதைப் பாரும். நீர் பாவிகளுக்குத் தஞ்சமென்று எல்லாரும் சொல்லுகிறார்களே; உம்மை அண்டி ஆதரவடையாமல் போனவர்கள் இல்லையே.

ஆகையால் பாவிகளின் பாவியாகிய என் மேல் இரக்கம் வைத்து என்னையும் ஆதரிக்கச் சீக்கிரமாய் வாரும் . தாமதம் பண்ணாதேயும். வேதம் சொல்லுவதெல்லாம் முழுமனதோடு விசுவசிக்கிறேன். என் நம்பிக்கை எல்லாம் ஆண்டவருக்குப் பின் உமது பேரில் வைக்கிறேன். உமது திருநாட்களை எல்லாம் உத்தம பிரகாரம் அனுசரிக்கிறேன். அற்பப் பாவத்தை முதலாய் கட்டிக் கொள்ள மனதில்லை. எந்நேரமும் உமது திருமகனுமாய் எனது அன்புள்ள இரட்சகருமாய் இருக்கிற இயேசுநாதருக்குப் பிரியப்படுவேனோ என்கிற பயமேயன்றி எனக்கு வேறே பயமில்லை. சுதந்திரத்தாயே! உமது தஞ்சமென்று ஓடி வந்த என்னை தைரியமுள்ளவ(னா)ளாக்கி உலக காரியங்களில் எனக்குப் பெரிய கசப்புண்டாக்கி உல்லாசமான ஆனந்த ஞானக் கடலில் மூழ்க அனுக்கிரகம் பண்ணியருளும்.

ஆமென்.

மோட்ச இராக்கினி பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மோட்ச அலங்காரியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நித்திய காலமாய்ச் சர்வத்துக்கும் ஆண்டவளாகத் தேவ சித்தத்தால் நியமிக்கப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக பூலோக இராக்கினியாக மாசில்லாமல் உற்பவித்த புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆதிமுதல் நிகரற்ற பரிசுத்தத் தனமாய்ப் பிறந்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எப்போதும் மாசில்லாதவளாய் விளங்கிய சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விடியற்கால நட்சத்திரமாக உலகத்தில் உதித்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பெண்ணால் அழிந்த உலகைப் பெண்ணாலே மீட்கக் கருதின தேவபிதாவினால் இரட்சகருக்கு மாதாவாக நியமிக்கப்பட்ட சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரம நாயகியாகிய மரியென்னும் தயை நிறைந்த நாமதேயம் சூட்டப்பட்ட சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வயதில் வளர மென்மேலும் சகல புண்ணியங்களாலும் அதிகரித்து விளங்கின சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனிதரெல்லார்க்கும் புண்ணிய மாதிரிகையாகவும் ஞான தீபமாகவும் ஒளிர்ந்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அருள் நிறைந்த மரியே வாழ்க என்று தேவதூதனால் மங்களம் சொல்லப்பட்ட சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நிகரற்ற அற்புதமாய் இஸ்பிரித்து சாந்துவின் வரப்பிரசாதத்தினாலே கன்னிமையோடு கர்ப்பந்தரித்து அவதரித்த இரட்சகரைப் பெற்ற சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவகுமாரனாகிய கர்த்தாவைப் பெறும் முன்னும், பெற்ற போதும், பெற்ற பின்னும், கன்னி மகிமை கெடாத சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்படியே சர்வேசுரனுடைய புனித மாதாவாகிய சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ பிதாவின் குமாரத்தியுமாய், சுதனின் தாயாருமாய், பரிசுத்த ஆவியின் நேச பத்தினியுமாய் இருக்கிற சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய உத்தம சாயலுமாய்த் தேவாலயமுமாய் விளங்கிய சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் இரட்சணியத்தின் நிமித்தம் இயேசு நாதருடைய திருப்பாடுகளுக்குப் பங்காளியான சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர் உயிர்த்த போதும் மோட்சத்திற்கு எழுந்தருளின போதும் அளவிறந்த ஆனந்தம் அனுபவித்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுவாமி மோட்சத்துக்கு ஆரோகணமான பின்பு திருச்சபைக்கு ஆறுதலும் ஆதரவுமாக இவ்வுலகத்தில் நின்று போன சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூவுலகில் சஞ்சரித்த அளவும் நினைவினாலும் ஆசையினாலும் பரலோகத்தில் தங்கின சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ சித்தத்தினால் உமக்குக் குறிக்கப்பட்ட சீவிய காலமளவும் இப்பரதேச துன்பங்களை அத்தியந்த தைரியம், பக்தி, பொறுமை முதலிய சற்குணங்களோடு அனுபவித்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இவ்வுலகில் இருந்த நாளளவும் அதிகமதிகமாய் எல்லா வரங்களிலும் அதிசயித்து நிகரற்ற புண்ணிய சம்பாவனை அடைந்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது திரு மரண சமயத்தில் தூர தேசங்களில் இருந்த அப்போஸ்தலர்களை முதலாய் அற்புதமாக வரும்படி செய்தருளிய சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இப்பிரபஞ்சம் விடுவதற்கு முன் தாயின் அன்போடே சீஷர்களை ஆசீர்வதித்துத் தேற்றிய சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அச்சமயத்தில் தரிசனையான சம்மனசுக்களால் பேரின்ப சந்தோஷமடைந்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ சிநேக மிகுதியால் ஆத்துமம் பிரிந்து பரலோகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சொல்லில் அடங்காத ஆனந்தத்துடன் உம்முடைய திருக்குமாரன் சமூகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்மனசுக்களும் அப்போஸ்தலர்களும் திருச்சங்கீதங்களைத் தொனிக்க மிகுந்த பக்தி வணக்கத்தோடே சீஷர்களால் திருமேனி அடக்கம் செய்யப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மூன்று நாள் பரியந்தம் உமது திருக்கல்லறையில் கேட்கப்பட்ட சம்மனசுக்களுடைய இன்பமுள்ள சங்கீதங்களால் ஸ்துதிக்கப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்துப் பேரின்ப இராச்சியத்துக்கு எழுந்தருளின மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த மகிமை ஒட்டலோகமாய்ப் பரலோகத்தில் சேர்ந்த மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்பொழுது சம்மனசுக்களின் சேனைகளால் சொல்லில் அடங்காத இன்ப சங்கீதங்களைக் கொண்டு  ஸ்தித்துக் கொண்டாடப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய திருக்குமாரனால் நிகரற்ற சுத்த நேசத்துடனே அரவணைக்கப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப் பிதாக்கள் முதலிய சகல மோட்சவாசிகளினாலும் வணங்கிக் கொண்டாடப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகத்துக்கும் இராக்கினியாய்த் தேவ பிதாவினால் மகிமைக் கிரீடம் சூட்டப்பட்ட மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய திருக்குமாரனின் அண்டையில் மகிமைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது திருப்பாதத்தால் சந்திரனை மிதிக்கும் மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அழகினால் பூரண சந்திரனை வென்று மகிமை ஆடையாகச் சூரியனை அணிந்த மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பன்னிரண்டு நட்சத்திரங்களை முடியாகத் தரித்திருக்கும் மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சத்துருக்களுக்குப் பயங்கரம் வருவிக்கும் அணிவகுப்பான பணிவிடைக்காரருள்ள வல்லபமுடைத்தான மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகத்திலும் அளவிறந்த வல்லமை பெற்றிருக்கிற மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நரகசர்ப்பமாகிய பசாசின் தலையை நசுக்கிப் பேய்களை எல்லாம் நடுங்கச் செய்து துரத்தும் மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ இஷ்டப் பிரசாத பொக்கிஷங்களை உமது வசமாகக் கொண்டிருக்கிற மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிருபை தயாபம் நிறைந்த இராக்கினியாகிய மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எண்ணிறந்த நன்மை அற்புதங்களால் உமது வல்லமையை விளங்கச் செய்தருளின மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பல முறை இராச்சியங்களையும், பட்டணங்களையும், குடும்பங்களையும் ஆபத்தினின்று இரட்சித்து நிலை நிறுத்திய மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சொல்லில் அடங்காத வேறு புதுமை உபகார சகாயங்களால் உமது தயாளத்தைக் காட்டியருளிய மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எண்ணில் அடங்காத பேர்களை பேரின்ப இராச்சியத்தில் சேர்ப்பித்த மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமாகிய மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிற உமது நேச பிள்ளைகளை மறவாத மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது பேரில் மெய்யான பக்தியுள்ளவர்களை ஒரு போதும் கைவிடா மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சீவிய நாளிலும் மரண நேரத்திலும் எங்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் தேற்றரவுமாகிய மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல புனிதர்களையும் விட புண்ணியத்தினாலும் மகிமையினாலும் விளங்குகிற மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகத்திலும் ஸ்துதி வணக்கக் கொண்டாட்டம் பெற்றிருக்கிற மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

படைப்புண்ட சகல வஸ்துக்களாலும் ஸ்துதிக்கவும் மன்றாடவும் வணங்கவும்படுவதற்குப் பாத்திரமான மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்கு மாதிரிகையும் இராக்கினியுமாகிய மோட்ச அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்மனசுக்களுக்கும் மற்ற சகல புனிதர்களுக்கும் இராக்கினியான மோட்ச அலங்காரியே,

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக

சர்வத்துக்கும் அதிபதி கர்த்தாவாகிய நித்திய சர்வேசுரா! அவதரித்த உம்முடைய திருக்குமாரனுக்கு மாதாவான புனித கன்னி மரியம்மாளை எங்களுக்குத் தாயாராகவும் இராக்கினியாகவும் தந்தருளினீரே! உம்முடைய கிருபை வரப்பிரசாதத்தால் மோட்ச அலங்காரியான இந்தப் பரமநாயகியின் உத்தம புண்ணியங்களை அடியோர்கள் இப் பரதேசத்தில் சஞ்சரிக்கிற வரைக்கும் முத்திரையாய் அனுசரித்து உமது பேரின்ப தரிசனையில் அவருடைய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளியாகும்படிக்கு எங்கள் மன்றாட்டுக்களையும், எங்கள் அன்புள்ள மாதா எங்களுக்காகச் செய்யும் மன்றாட்டுக்களையும் கேட்டு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!

ஆமென்.


அடைக்கல மாதா நவநாள் ஜெபம்.

1. அடைக்கல மாதாவே! நீர் உண்மைக் கடவுளை அறிந்து ஆராதித்து உயர்வடைந்தீரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள், உண்மைக் கடவுளான பிதா, சுதன், பரிசுத்த ஆவியை நன்கு அறிந்து அவரை மட்டும் ஆர்வத்துடன் ஆராதித்து அவருக்கு உகந்த மக்களாய் வாழ்ந்து வருவதற்கு உதவி புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.

2. உலக மீட்பரை அரிய முறையில் ஈன்றெடுத்து உலகுக்கு அளித்த அடைக்கலத் தாயே, இயேசு மீட்பரால் இந்த உலகம், குறிப்பாக எங்கள் தாய் நாடும் பெற்றுள்ள 1 பெற்று வருகின்ற அளவற்ற நன்மைகளுக்காக நாங்கள் நாள்தோறும் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். எமது சிறிய நன்றியறிதலை நீர் ஏற்று பரமன் திருவடியில் வைக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.

3. அமல உற்பவத்தாயே நீர் எக்காலமும் இறைவன் அருளால் நிறைந்திருந்து முக்காலமும் கன்னியாக நிலைத்திருந்து புண்ணிய நறுமணம் கமழும் தாயாக விளங்கினீரே, உமது குழந்தைகளாகிய நாங்கள் பாவத்தில் பிறந்து பாவச் சோதனைகளால் அல்லலுற்று வருகின்றோம் என்பதை தாழ்மையுடன் உணர்கிறோம். எங்கள் கணக்கற்ற பாவங்களை உமது திருமகன் இயேசுதாராள மனதுடன் மன்னிக்குமாறு எமக்காக வேண்டிக் கொள்ளும் படி உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.

4 வரங்களை வாரி வழங்கும் அன்னையே , அன்று திருமண வீட்டில் இரசம் இல்லை என்ற குறையை உமது திருமகனிடம் எடுத்துக் கூறி நிறைவு செய்தீரே. அந்த தாயுளத்தோடு இன்று எமது இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்கும் குற்றங் குறைகளை தீர்த்து விடவும் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்றுத் தரவும் விரைந்து வரும் படி உம்மை மன்றாடுகிறோம்
9 அருள். பிதா.

5. தாழ்மை நிறைந்த தாயே , உம்மை ஆண்டவரின் அடிமை என அறிவித்து , அவருடைய வார்த்தையின்படி எல்லாம் ஆக வேண்டுமென விரும்பினீரே, நாங்கள் எமது சொந்த உரிமை பேசும் பழக்கத்தை கைவிட்டு ஆண்டவரின் திருச்சித்தத்தை நன்கு அறிந்து அதை முழுவதும் நிறைவேற்றும் கடமையை உணர உதவி செய்யும்படி உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.

6. சிலுவையடியில் நின்ற வீரம் செறிந்த தாயே , துன்ப துயரம் வந்த போது நாங்கள் இயேசுவின் ஊழியத்தில் தளர்ந்துவிடாமல் பொறுமையும் தாராள மனதும் கொண்டவர்களாய் வாழ வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.

7. அணைக்கும் அடைக்கலத்தாயே , 18ஆம் நூற்றாண்டில் மெய்மறைக்கு ஏற்பட்ட இடையூறுகளைத் தடுத்து என் முன்னோருக்கு அடைக்கலம் தந்தருளினீரே, இக்காலத்திலும் எமது கத்தோலிக்க வாழ்விற்கு ஏற்படும் இன்னல்களை நாங்கள் வெல்லவும் , பிற மதத்தினவருக்கு நாங்கள் குன்றில் மேலிட்ட விளக்கென ஒளி தந்து விளங்கவும் உதவி செய்யுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.

8. தவறிய குழந்தையைத் தூக்குவதற்கு விரித்த கைகளுடன் விரைந்து வரும் அன்னையே , பாவிகளாகிய நாங்கள் எவ்வளவுதான் தாழ்ந்து ஊதாரிகலாகிவிட்டாலும் எம்மை அன்போடு வரவேற்று அரவணைக்கும் அன்னை நீர் உண்டு என்னும் உண்மையை எமது உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.

9. விண்ணுலக வீட்டின் வாயில் எனப்படும் தாயே ! எம்மை இந்தக் கண்ணீர் கணவாயில் காத்தது போல , இறுதி நேரத்தில் ஏற்படும் சோதனைகளில் இருந்தும் எம்மைக்காத்து விண்ணுலக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.

செபிப்போமாக.

எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமான ஆண்டவரே, உமது அடைக்கலத்தின் வெளி அடையாளமாக மரியன்னையை அமைத்தீரே. அந்த மாபெரும் நன்மைக்கு நன்றி கூறி, அந்த  அன்னையின் அடைக்கலத்தில் அகமகிழ்ந்து வாழ நாங்கள் தாழ்மையோடும் நம்பிக்கையோடும் செய்த இந்த மன்றாட்டுக்களை தயவாய் ஏற்றருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எங்கள் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.

சின்னக் குறிப்பிடம்.

முதல் பிரிவு : ஏக சர்வேசுரன் பேரில்

1. அனைத்திற்கும் ஆண்டவர் யார்?
சர்வேசுரன்

2. எத்தனை சர்வேசுரன்?
ஒரே சர்வேசுரன். (எல்லாவற்றையும் படைத்து காப்பாற்றும் எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த சர்வேசுரனாகும்)

3. அவர் தேவ சுபாவத்தில் ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையில் எப்படி இருக்கிறார்?
திரித்துவமாயிருக்கிறார்.

4. திரித்துவமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?
ஆள் வகையிலே மூவராயிருக்கிறாரென்று அர்த்தமாகும்.

5. இந்த மூன்றாட்களுக்கும் பெயரென்ன?
பிதா, சுதன், பரிசுத்த ஆவி

6. பிதா சர்வேசுரனா ?
சர்வேசுரன்

7. சுதன் சர்வேசுரனா ?
சர்வேசுரன்

8. பரிசுத்த ஆவி சர்வேசுரனா ?
சர்வேசுரன்

9. மூவரும் மூன்று சர்வேசுரனா?
இல்லை - ஒரே சர்வேசுரன்

10. எப்படி ஒரே சர்வேசுரன்?
இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம் ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11. இவர்களுக்குள்ளே வல்லபம், மகிமை, முதலான குணங்களில் வித்தியாசமுண்டோ?
இல்லை - மூவரும் எல்லாவற்றிலும் சரி சமானமாயிருக்கிறார்கள்.

12 இப்படி ஏகமும் திரித்துவமுமாகிய சர்வேசுரனுக்கு பிரதான குணங்கள் எத்தனை?
ஆறு

13 ஆறுஞ் சொல்லு.
1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்
2. துவக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்
3. சரீரமில்லாமல் இருக்கிறார்
4. அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிறார்
5. எங்கும் வியாபித்திருக்கிறார்
6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்

2-ம் பிரிவு : உலக சிருஷ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும்

14. சர்வேசுரன் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணமாயிருக்கிறதெப்படி?
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்து காப்பாற்றுகிறதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்.

15. சர்வேசுரன் படைத்தவைகளில் பிரதான வஸ்துக்கள் என்ன? முக்கியமானவை எவை?
சரீரமில்லாத சம்மனசுகளும், ஆத்துமமும் சரீரமும் உள்ள மனிதர்களும் தான்.

16. சம்மனசுகள் எல்லாரும் தாங்கள் மேன்மையான நிலையில் நிலை கொண்டார்களோ?
இல்லை - சிலர் ஆங்காரத்தினாலே மோட்சத்தை இழந்து நரக தண்டனைக்கு உள்ளானார்கள்.

17. இப்படி கெட்டுப்போன சம்மனசுகளின் பெயரென்ன?
பிசாசுக்கள்.

18. சர்வேசுரன் மனிதர்களை எதற்காகப் படைத்தார்?
தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்.

19. அவர் எந்த நிலையில் ஆதித் தாய் ஆதித்தகப்பனை உண்டாக்கினார்?
பரிசுத்தமும் பாக்கியமுமான நிலையில் உண்டாக்கினார்.

20. அவர்கள் அதை இழந்தது எப்படி?
பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியைத் தின்றதினாலே இழந்தார்கள்.

21. அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியாருக்கும் வந்த தேடென்ன?
பசாசுக்கு அடிமையாகி சாவு, நரகம், முதலிய தண்டனைகளுக்கு ஆளானார்கள்.

3-ம் பிரிவு : மனிதனுடைய இரட்சிப்பு

22. நம்மை இரட்சிப்பதற்காக மனிதானாய் பிறந்தது யார்?
தூய தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன் தான்.

23. அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாய் பிறந்தார்.

24. யாரிடத்தில் நின்று பிறந்தார்?
என்றும் கன்னிகையான அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயிடத்தில் நின்று பிறந்தார்.

25. அவர் பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?
இயேசு என்று பெயரிட்டார்கள்.

26. இயேசு என்ற பெயருக்கு அர்த்தமென்ன?
நம்மை இரட்சிக்கிறவர்.

27. ஆகையால் இயேசுக் கிறிஸ்துநாதர் யார்?
நம்மை இரட்சிப்பதற்காக மனிதராய்ப் பிறந்த சுதனாகிய சர்வேசுரன்.

28. இயேசு நாதர் இவ்வுலகத்திலே எத்தனை வருடகாலம் இருந்தார்?
முப்பத்து மூன்று வருடகாலம் இருந்தார்.

29. இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டுவந்தார்?
எல்லா புண்ணியங்களையும், அற்புதங்களையும் செய்து தம்முடைய திவ்விய வேதத்தைப் போதித்து, அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

30. இயேசுநாதருக்கு எத்தனை சுபாவம் உண்டு?
தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.

31. எந்த சுபாவத்தில் பாடுபட்டார்?
மனித சுபாவத்தில் பாடுபட்டார்.

32. யாருக்காகப் பாடுபட்டார்?
நமக்காகப் பாடுபட்டார்.

33. எப்படி பாடுபட்டார்?
போஞ்சுப்பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு கடினமான மரணத்தையடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

34. அப்போது அவருடைய திரு ஆத்துமம் எங்கே போனது?
பாதாளங்களில் இறங்கி அங்கேயிருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது.

35. இயேசுநாதர் கல்லறையை விட்டு உயிர்த்து எழுந்தருளினாரோ?
ஆம். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருனார்.

36. உயிர்த்த பிற்பாடு பூலோகத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?
நாற்பது நாள் தங்கியிருந்தார்

37. அந்த நாற்பது நாளும் என்ன செய்துகொண்டிருந்தார்?
அனேக தடவை தம்முடைய சீடர்களுக்குத் தம்மைக் காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் திடப்படுத்திக் கொண்டு வந்தார்.

38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்.

39. இப்போது இயேசுநாதர் எங்கே இருக்கிறார்?
எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனிதனும் என்ற நிலையில் பரலேகத்திலும், திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.

4-ம் பிரிவு: பரிசுத்த ஆவியின் ஆகமனமும் திருச்சபையும்

40. இயேசுநாதர் பரலேகத்துக்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன செய்தார்?
தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக பரிசுத்த ஆவியை அனுப்பினார்.

41. பரிசுத்த ஆவியை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?
உலகத்தின் எத்திசையிலும் போதித்து திருச்சபையை பரப்பச் செய்தார்கள்

42. திருச்சபைக்கு தலைவராயிருக்கிறவர் யார்?
இயேசுநாதர் தான்

43. அவர் தமக்குப் பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை ஏற்படுத்தினார்?
புனித இராயப்பரை ஏற்படுத்தினார்

44. புனித இராயப்பருக்குப் பின் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறவர் யார்?
பரிசுத்த பாப்பானவர்

45. மற்ற அப்போஸ்தலர்களுக்குப் பதிலாயிருக்கிறவர்கள் யார்?
ஆயர்கள்.

46. இயேசுநாதர் எத்தனை திருச்சபையை ஏற்படுத்தினார்?
கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஏற்படுத்தினார்

47. திருச்சபையின் சொற்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டோ?
இல்லை.

48. இல்லை என்பதற்கு சான்று என்ன?
திருச்சபையின் சொற்படி கேளாதவன் அஞ்ஞானியைப்போல்; உனக்கு ஆகக்கடவன் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.

5-ம் பிரிவு: மனிதனுடைய இறப்பு

49. பாவத்தினிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற கேடு என்ன?
சாவு

50. சாவுக்குப் பின் என்ன நடக்கும்
தனித்தீர்வை.

51. தனித்தீர்வைக்குப் பின் சாவான பாவமுள்ள ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?
நரகத்துக்குப் போகிறார்கள்

52. தங்கள் பாவங்களுக்கு முழுவதும் உத்தரியாத புண்ணிய ஆத்துமாக்கள் ஏங்கே போகிறார்கள்?
உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு போகிறார்கள்

53. உத்தரிக்கிற ஸ்தலத்திலே எப்படியிருக்கிறார்கள்?
தங்கள் பாவங்களுக்குத் தக்க வேதனைப்பட்டு உத்தரிக்கிறார்கள். முழுவதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

54. தனித்தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?
பொதுத் தீர்வை உண்டு

55. பொதுத்தீர்வை எப்போது நடக்கும்?
உலக முடிவிலே நடக்கும்

56. உலகம் எப்படி முடியும்?
உலகமெல்லாம் நெருப்பினாலே வேக, மனிதர்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்

57. பிறகு என்ன நடக்கும்?
இயேசு நாதர் மனிதர் எல்லாரையும் ஆத்தும சரீரத்தோடுகூட எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு நடுத்தீர்க்க வருவார்.

58. எப்படி நடுத்தீர்ப்பார்?
அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறியப்பண்ணி பாவிகளைச் சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசீர்வதித்து மோட்சத்துக்கு கூட்டிச் கொண்டுபோவார்.

59. பாவிகள் நரகத்திலே படுகிற தண்டனை என்ன?
சர்வேசுரனை ஒருபோதும் காணாமல் எக்காலமும் பசாசுக்களோடே நெருப்பிலே வெந்து எல்லா தண்டனைகளையும் அனுபவிக்கிறார்கள்.

60. நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?
சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதைக்கும் எல்லா பேரின்பப் பாக்கியங்களையும் அனுபவிக்கிறார்கள்.

6-ம் பிரிவு : கட்டளைகளும், பாவமும், புண்ணியமும்

61. மோட்சத்தை அடைவதற்கு செய்யவேண்டியதென்ன?
மேற் சொன்ன வேத சத்தியங்களை விசுவசித்து சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்துப் பாவத்தை தள்ளி, புண்ணியத்தை செய்யவும் வேண்டியது.

62. சர்வேசுரனுடைய கற்கனைகள் எத்தனை?
பத்து.

63. பத்தும் சொல்லு.
சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து!
1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்hயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;
1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2. தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

64. திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
ஆறு.

65. ஆறுஞ்சொல்லு.
1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுபூசை காண்கிறது
2. வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கா காலத்தில் பாவசங்கீர்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறது.
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கனமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது
6 .நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

66. பாவம் ஆகிறதென்ன?
தேவ கட்டளைகளை மீறுகிறது பாவம்.

67. எத்தனை வகைப் பாவங்கள் உண்டு?
ஜென்மப் பாவம், கர்மப் பாவம் ஆகிய இரண்டுவகைப் பாவங்கள் உண்டு

68. ஜென்பப் பாவம் ஆகிறதென்ன?
ஆதித்தாய் ஆதித் தகப்பனால் உண்டாகி நம்மோடு கூடப்பிறக்கிற பாவம்.

69. கர்மப் பாவம் ஆகிறதென்ன?
அவரவர் புத்தி விபரம் அறிந்த பிற்பாடு மனம் பொருந்தி செய்கின்ற பாவம்.

70. கர்மப் பாவம் எத்தனை வகையுண்டு?
சாவான பாவம், அற்பப் பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.

71.சாவான பாவம் ஆவதென்ன?
வேத இஷ்டப்பிரசாதத்ததைப் போக்கடித்து நம்மை நரகத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகிற பாவம்.

72. அற்பப் பாவம் ஆவதென்ன?
நம்மில் தேவ சிநேகத்தைக் குறைத்து சாவான பாவத்திற்கு வழியுமாகி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பாத்திரவான்கள் ஆக்குகின்ற பாவம்.

73. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு.

74. ஏழுஞ் சொல்லு.
1. அகங்காரம்,
2. கோபம்,
3. மோகம்,
4. லோபித்தனம்,
5. போசனப்பிரியம்,
6. காய்மகாரம்,
7. சோம்பல்

75. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?
விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகியவைகளாகும்.

76. தலையான பாவங்களுக்கு எதிரிடையான புண்ணியங்கள் எவை?
1. தாழ்ச்சி,
2. பொறுமை,
3. கற்பு,
4. உதாரம்,
5. மட்டசனம்
6. பிறர் சிநேகம்,
7. சுறுசுறுப்பு

7-ம் பிரிவு: தேவ வரப்பிரசாதமும், செபமும், தேவ திரவிய அனுமானங்களும்:

77. பாவத்தை விலக்கி மோட்சத்தை அடைவதற்கு நம்முடைய சொந்த பலன் போதுமா?
போதாது. நமக்கு தேவ வரப்பிரசாதத்தின் உதவி வேண்டியது

78. தேவ வரப்பிரசாதம் எத்தனை வகை உண்டு?
தேவ இஷ்டப்பிரசாதம், உதவி வரப்பிரசாதம் ஆகிய இரண்டு வகை உண்டு.

79. தேவ வரப்பிரசாதங்களை அடைவதெப்படி?
செபத்தினாலும், தேவ திரவிய அனுமானங்களாலும் அடையலாம்.

80. அடிக்கடி செபம் செய்ய வேண்டுமா?
வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார்.

81. தேவ திரவிய அனுமானங்கள் எத்தனை?
ஏழு.

82. ஏழுஞ் சொல்லு.
1. ஞானஸ்நானம்
2. உறுதிப் பூசுதல்
3. நற்கருணை
4. பச்சாத்தாபம் (பாவ சங்கீர்த்தனம்)
5. மெய்விவாகம்
6. குருத்துவம்
7. அவஸ்தைப் பூசுதல்

83. ஞானஸ்நானம் ஆவதென்ன?
சென்மப் பாவத்தையும் கர்மப் பாவத்தையும் போக்கி, நம்மை சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற தேவதிரவிய அனுமானம்.

84. உறுதிப் பூசுதல் ஆவதென்ன?
நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக பரிசுத்த ஆவியையும் அவருடைய வரப்பிரசாதங்களையும் நமக்குக் கொடுக்கிற தேவதிரவிய அனுமானம்.

85. நற்கருணை ஆவதென்ன?
கோதுமை அப்பத்தின் குணங்களிலும், திராட்சை பழஇரசத்தின் குணங்களிலும் இயேசுநாதருடைய திருச்சரீரமும், திரு இரத்தமும், திரு ஆத்துமமும் தேவசுபாவமும் அடங்கியிருக்கிற தேவதிரவிய அனுமானம்.

86. பத்சாத்தாபம் ஆவதென்ன?
ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு செய்த பாவங்களையெல்லாம் போக்குகிற தேவதிரவிய அனுமானம்.

87. அவஸ்தைப் பூசுதல் ஆவதென்ன?
வியாதிக்காரரிடத்தில் மிகுதியாகிய பாவங்களுக்கு பரிகாரமாகவும் அவர்களுடைய ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் ஆறுதலாகவும், உண்டாக்கப்பட்ட தேவதிரவிய அனுமானம்.

88. குருத்துவம் ஆவதென்ன?
திவ்விய பூசை செய்யவும், தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும், சுதந்திரம் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

89. மெய் விவாகம் ஆவதென்ன?
சமுசாரி, ஆகிறவர்களுக்கு தேவ ஆசீர்வாதத்தையும், அவர்கள் தர்ம வழியாய் நடக்கவும், தங்கள் பிள்ளைகளைத் தக்க பிரகாரமாக நடப்பிக்கவும் வேண்டிய தேவ சகாயத்தையும் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.

ஞானஸ்நான விபரம்:
1வது: திருச்சபை ஞானஸ்நானம் கொடுக்கிற கருத்தோட நானும் கொடுக்கிறேனென்று மனதில் நினைத்துக் கொள்கிறது.
2வது: பிள்ளைக்கு இடவேண்டிய பெயரை உச்சரித்து அதன் தலையில் தண்ணீர் வார்க்கிறபோது தான்தானே சொல்ல வேண்டியது: பிதாவுடையவும், சுதனுடையவும், பரிசுத்த ஆவியுடையவும் நாமத்தினாலே, நான் உன்னைக் கழுவுகிறேன்.

90. அவஸ்தை சமயத்தில் யாராகிலும் ஞானஸ்நானம் கொடுக்கலாமா?
அப்படிப்பட்ட சமயத்தில் யாராகிலும் கொடுக்க வேண்டியதுதான்.

91. உறுதிப் பூசுதலால் நாம் பெறும் பரிசுத்த ஆவியின் வரப்பிரசாதங்கள் எத்தனை?
ஏழு.

92. ஏழுஞ் சொல்லு.
1.ஞானம், 2.புத்தி, 3.அறிவு, 4.விமரிசை, 5.திடம், 6.பக்தி, 7.தெய்வபயம்

திவ்விய நற்கருணையின் விபரம்:

93. திவ்விய நற்கருணையிலே எழுந்தருளியிருக்கிறவர் யார்?
இயேசுநாதர்

94. அதிலே எப்படி எழுந்தருளியிருக்கிறார்?
தம்முடைய திருச்சரீரத்தோடும், இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறார்.

95. ஆகையால் நற்கருணை வாங்குறபோது என்ன வாங்குகிறோம்?
நம்முடைய திவ்விய கர்த்தராகிய இயேசுநாதருடைய திருச் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தேவ சுபாவத்தையும்தானே வாங்குகிறோம்.

96. அதிலே அப்பம் கொஞ்சமாவது உண்டோ?
அப்பத்தின் உருவம், ருசி, நிறம் முதலான குணங்கள் இருந்தாலும், அப்பம் இல்லை.

97. அப்பம் என்னமாய் மாறிற்று?
இயேசுநாதருடைய திருச் சரீரமாக மாறிற்று.

98. தேவ நற்கருணை வாங்குவதற்கு எத்தனை வகை ஆயத்தம் வேண்டியது?
ஆத்தும ஆயத்தம், சரீர ஆயத்தம் ஆகிய இரண்டு வகை ஆயத்தம் வேண்டியது.

99. ஆத்தும ஆயத்தம் ஆவதென்ன?
ஆத்துமம் சாவான பாவமில்லாமல் பரிசுத்தமாய் இருக்க வேண்டியது.

100. சரீர ஆயத்தம் ஆவதென்ன?
திவ்விய நன்மை வாங்குவதற்கு முன் ஒருமணி நேரம் கடினமான பதார்த்தம் ஒன்றும் சாப்பிடாமலும், தண்ணீரைத் தவிர வேறு எந்த பானங்களையும் அருந்தாமலும் உபவாசமிருக்கவேண்டியது. (பாயும் படுக்கையுமில்லா நோயாளிகள் கூட போதையில்லா பானங்களையும், நீரான அல்லது கடினமாக உண்மை மருந்துகளையும் திவ்விய நன்மை வாங்குமுன் எவ்வித காலவரையில்லாமல் உட்கொள்ளளாம்).

101. திவ்விய பூசை ஒப்புக்கொடுப்பதற்கான பிரதான கருத்துக்கள் எவை?
1.தேவ ஆராதனை, 2.நன்றியறிந்த தோத்திரம், 3. பாவப் பரிகாரம், ஆகிய இவைகளாம்.

102. பாவசங்கீர்த்தனம் பண்ண எத்தனை காரியம் செய்யவேண்டும்?
ஐந்து.

103. அந்த ஐந்து காரியமும் சொல்லு.
1-வது தான் செய்த பாவங்களை நினைத்துப்பார்க்கிறது.
2-வது தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவது.
3-வது இனிமேல் ஒருபொழுதும் ஒரு பாவத்தையும் செய்வதில்லையென்று உறுதியான மனதோடே பிரதிக்கினை பண்ணுகிறது.
4-வது தன் பாவங்களை ஒன்றும் ஒளியாமல் குருவுடனே சொல்லுகிறது.
5-வது குரு கட்டளையிட்ட அபராதத்தை தீர்க்கிறது

அவஸ்தை பூசுதலின் விபரம்:

104. அவஸ்தைப் பூசுதல் பெற வேண்டியது யார்?
கடின வியாதிக்காரர் பெறவேண்டும். ஆனால் மரண நேரம் மட்டும் காத்திருக்கலாகாது.

மெய் விவாகக்தின் விபரம்:

105. மெய் விவாகத்துக்கு பிரதான விக்கினங்கள் எவை?
நெருங்கிய இரத்த உறவு, இரண்டாங்கால் மட்டும் கலியாண சம்பந்தம், ஞான உறவு, குறைந்த வயது, இதர மதம் இவைகளாகும்

106. திருச்சபை உத்தரவில்லாமல் தாலிகட்டி கலியாணம் செய்தால் மெய்விவாகம் ஆகுமா?
இல்லை. இப்பேர்பட்ட கலியாணம் வெறும் தாறுமாறு ஆகுமே ஒழிய மெய்விவாகம் ஆகாது.

Imprimatur:
Most Rev. Arockiasamy
Bishop of Kottar
Nagarcoil
30.05.1972

பிழை தீர்க்கிற மந்திரம்.

சர்வ தயாபர சேசுவே!
பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

மண்ணால் மனுசனை உண்டாக்கி
திவ்விய கருணையால் வல்லவனாக்கி
அவன் கையாற் பாடுபடத் திருவுளமான
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

துஷ்டயூதர் கையிற் சிறைப்பட்டு
திருக்கண்டத்தில் கரத்திற் கயிறிட்டு
செம்மறி போலப் பலிக்கேகப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

அந்நீத குருச்சபையிலமைந்து
பொய்ச் சாட்சிகளுக்குப் பணிந்து
தேவ பழிகாரணாகக் கூறப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திருக் கண்ணத்தில் அறையுண்டு
திரு விழிகள் மறைக்கப்பட்டு
இரா முழுவதும் கோறணி வாதைகள் அனுபவித்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

பிலாத்திட்ட துஸ்ட தீர்வையாற் கற்றுணில் கட்டுண்டு
நிஸ்டுரமாக ஐயாயிரத்துக்கு அதிகமாக அடிபட்டு
சர்வாங்கமும் இரத்தவாறாக்கப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திருச்சிரசில் முள்முடி தரித்து
பீற்றற் சகலாத்தை மேலிற் போர்த்து
பரிகாச ராசனாக நிந்திக்கப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

பாரதுரச் சிலுவை தோளிற் சுமந்து
கபால மலைமட்டும் தொய்வோடே நடந்து
பெலவீனமாகத் தரையிலே விழுந்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திருத் துகிலைக் கடுரமாயுரிந்து
சர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து
சபை முன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

சிலுவை மரத்தின் மீதே சயனித்து
திருப்பாத கரங்களில் ஆணிகளால் அறைந்து
இரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

சிலுவையிலேறிச் சுகிர்தம் மொழிந்து
வாதிக்கிற சத்துராதிகளுக்குப் பாவம் பொறுத்து
அனைவருக்கும் தயவு காண்பித்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

சகல வாதைகளையுந் தீர அனுபவித்து
பாவிகள் இடேற்றம் முகிய முகித்து
சீவ பலியாகப் பிராணனைக் கொடுத்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

திரு முக மலர்வு மடிந்து
திரு விழிகள் மறைந்து
திருத் தலை கவிழ்ந்து மரணித்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

எனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே
என் பாவம் உத்தரிக்க உமது உதிரம் சிந்தினீரே
எனது ஆத்துமத்துக்காக உமது ஆத்துமத்தைக் கொடுத்த
என் தயாபர சேசுவே!
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்!

இந்த நன்றிகளை யெல்லாம் அடியேன் பாராமல்
எனக்காகப் பாடுபட்டதையும் எண்ணாமல்
மகா துட்ட துரோகத்தைச் செய்தேனே
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

இதோ என்னிருதயஞ் சகலமும் உதிர்ந்து
விதனத்தாற் பொடிப் பொடியாகப் பிளந்து
கண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

என் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய கிருபையையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

உம்முடைய சர்வாங்க காயங்களையும் திரு உதிரத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்!

சர்வ தயாபர இயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும் - 3 முறை
(மூன்று பரலோக மந்திரம் சொல்லி முடிக்கவும்)

வாழ்க்கைத் துணைக்காக செபம்.

ஓ என் இயேசுவே, என் அன்பு சிநேகிதரே! எனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து, எனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன்.

எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய, உங்களின் அருளையும் ஆசிரையும் என்மேல் பொழிந்தருளும். எனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை துணையை எனக்கு அனுப்பியருளும்.

என் அன்பு சினேகிதரே, என் வாழ்க்கை துணையாய் வருபவர் தங்களின் திரு இருதயத்தின் மேல் பற்றும் பக்தியும் உள்ளவராக இருக்க மன்றாடுகிறேன்.

ஆமென்.

வாகன ஓட்டுநரின் செபம்.

அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும்.

இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும்.

எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும்.

ஆமென்.

நல்ல பயணத்தின் அன்னையே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.

நன்மை உட்கொண்டபின் ஜெபம்.

(அர்ச். இஞ்ஞாசியார் செய்த ஜெபம்)

கிறிஸ்துவினுடைய ஆத்துமமானதே, என்னை அர்ச்சிஷ்டவனாக செய்தருளும். கிறிஸ்துவினுடைய திருசரீரமே என்னை இரட்சித்துக்கொள்ளும். கிறிஸ்துவினுடைய திரு இரத்தமே எனக்கு திருப்தி உண்டாக பண்ணியருளும். கிறிஸ்துவினுடைய விலாவினின்று ஓடி விழுந்த திருத் தண்ணீரே, என்னைக் கழுவியருளும். கிறிஸ்துவினுடைய திருப்பாடுகளே, எனக்கு தேற்றரவுண்டாக பண்ணியருளும். ஓ நல்ல சேசுவே, நான் கேட்கிறதை தந்தருளும்.

உம்முடைய திருக்காயங்களுக்குள்ளே என்னை வைத்து மறைத்துக் கொள்ளும். என்னை உம்மை விட்டு பிரிய விடாதேயும். துஷ்ட சத்துருக்களிடமிருந்து என்னை இரட்சித்துக்கொள்ளும்.

என் மரண தருவாயில் நீர் என்னை அழைத்து உம்முடைய சந்நிதியில் உட்பட்ட சகல அர்ச்சியஷ்டவர்களோடு கூட நான் உம்மை ஊழியுள்ள காலம் தோத்திரம் பண்ணும்படி அடியேன் உம்முடைய சந்நிதியில் வரக் கற்பித்தருளும்.

ஆமென்.


உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறீஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறீஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்சியசிஷ்ட மரியாயே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும் .

சர்வேசுரனுடைய அர்சியசிஷ்ட மாதாவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்சியசிஷ்ட கன்னிகையே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட ஸ்நாபக அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட சூசையப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களும் தீர்கதரிசிகளுமாகிய சகல அர்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட இராயப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட சின்னப்பரே,  மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட முடியப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட லவுரேஞ்சியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட கிரகோரியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட அமிர்தநாதரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட அகுஸ்தீனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட எரோணிமுவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

மேற்றிராணிமார்களும், ஸ்துதியர்களுமாகிய அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

வேத வித்யாபாரகரான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

குருக்களும், ஆசிரியர்களுமான அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

சந்நியாசிகளும் தபோதனர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அர்சியசிஷ்ட மரிய மதலேனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட கத்தரீனாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்சியசிஷ்ட பார்பரம்மாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளும், விதவைகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

தயாபரராயிருந்து அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பொல்லாப்புகளிலே நின்று,  அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உமது கோபத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உமது நீதி அகோரத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பசாசின் வல்லமையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

கடூர வியாகுலத்திலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

கொடிய ஆக்கினையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

அக்கினிச் சுவாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

துயரமான அழுகையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு மனுஷாவதாரத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

எங்கள் மரணத்தை ஜெயித்தழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அதிசயமான ஆரோகனத்தைப்  பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேற்றரவு பண்ணுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் ஆகமனத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற நாளிலே, அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவியாயிருந்த மக்தலேன் அம்மாளுக்கு பாவமன்னிப்புத் தந்தவரும், நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்தின் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும் கைக்கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

இரட்சனியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் சகோதரர், பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயவு செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமுமுள்ள இடத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் துயரைச் சந்தோஷமாக மாற்றியருளத் தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்களுடைய ஆசை நிறைவேறத் தயைபுரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் உம்மைப் புகழ்ந்து, ஸ்துதி பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உம்முடைய அர்ச்சியசிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிருபையின் ஊறனியே தேவரீரை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறி புருவையாகிய சேசுவே, அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும் சுவாமி.

சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே கிருபையாயிரும்.
சுவாமி கிருபையாயிரும்.

1 பரலோக மந்திரம்.

நரக வாசலில் நின்று, அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும் .
சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக, அப்படியே ஆகக்கடவது.

சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபயசத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

ஆமென்.

மரித்த விசுவாசிகளுக்காக பிரார்த்திக்கக் கடவோம்.

சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா, மரித்த உமது அடியோர்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுகளை அங்கீகரித்து அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். சதாகாலமும் சீவியரான சர்வேசுரா, இந்த மன்றாட்டைத் தயவோடே கேட்டருளும் சுவாமி.

நித்திய பிதாவே! பெற்றோர் பந்துக்கள், சிநேகிதர், உபகாரிகள் முதலியவர்களைத் தக்க விதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை செய்யக் கற்பித்தருளினீரே. ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபகாரம் எங்களுக்குச் செய்தவர்களும், எங்கள் பந்துக்கள், சிநேகிதர் முதலானவர்களும், வேதனை நீங்கி, நித்திய காலம் உம்மைச் சந்தோஷமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுவோமாக. நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி. முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.

சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா! முக்திப்பேறு பெற்ற கன்னித்தாயான மரியாயுடைய ஆத்துமமும் சரீரமும் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்து அருளினீரே! அந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

ஆமென்.

சகல ஆத்துமங்களுக்கு ஜெபம்:

(சங்கீதம் 129)

ஆண்டவரே அளவில்லா வேதனையில் உம்மை நோக்கி கூவிஅழைக்கின்றேன்.

ஆண்டவரே என் கூக்குரலுக்கு செவிசாய்த்தருளும். என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.

ஆண்டவரே! யான் செய்த பாவங்களை நினைவுகூர்வீராகில் உமக்கு முன் யார் நிற்க முடியும்?

வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கின்றிர்.

ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன், அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.

என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது, இரவின் காவலர் உதயத்தை எதிர் நோக்குவதைவிட, அதிக ஆர்வமுடன் எதிர்நோக்குகிறது.

காவலர் உதயத்தை எதிர்பார்ப்பதற்கு மேலாக, இஸ்ராயலர் ஆண்டவரை எதிர் பார்ப்பார்களாக,

ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது, அவருடைய மீட்பத் துனை பொங்கி வழிகின்றது.

இஸ்ராயேலரை அவர் மீட்பார், அவர்கள் செய்த பாவங்களை் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக்கொள்வார்.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி. முடிவில்லாத பிரகாசம் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.

செபிப்போமாக:

சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா! மரித்த உமது அடியோகளுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாடுக்களை அங்கரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்பிக் காத்திருக்கிற பாவப் பொறுத்தலை கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்ளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி. முடிவில்லாத பிரகாசம் அவர்களுக்கு பிரகாசிக்கக் கடவது.

அவர்கள் சமாதானத்தில் இளைப்பாறக் கடவார்களாக.

ஆமென்.

உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாமல் மோட்சம் செல்ல உதவக்கூடிய பரிகார ஒப்புக்கொடுத்தல் ஜெபம்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மைகளைச் சுத்திகரிப்பதற்காக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும் சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும், என் சீவிய காலம் முழுவதும் நான் செய்யத்தவறிய நன்மைகளுக்கு ஈடாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

ஆமென்.

குறிப்பு: இந்தச் செபத்தைப் பக்தியுடன் சொல்லிவந்த ஒரு சகோதரி, அதனிமித்தம் தான் உத்தரிக்கிற ஸ்தலம் போகாமல் மோட்சம் சென்றதாக தன் உடன் சகோதரிக்கு காட்சியில் தோன்றி சொல்லியுள்ளதாக ஒரு வரலாறு உள்ளது.

அவஸ்தையாயிருக்கிற ஆத்துமங்களுக்காக செய்யத்தகும் சுகிர்த ஜெபம்.

கருணாம்பர சேசுவே, ஆத்துமங்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய திவ்ய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட மரண அவஸ்தையையும், தேவரீருடைய மாசில்லாத திருத்தாயானவள் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து, இன்று தானே பூமியெங்கும் அவஸ்தையாய்க் கிடந்து சாகப்போகிற பாவிகளைத் தேவரீருடைய திரு இரத்தத்தினாலே சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட சேசு நாதருடைய திவ்விய இருதயமே! இன்று மரிக்கிறவர்களின் பேரில் இரக்கமாயிரும்.

ஆமென்.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக மாதாவிடம் காணிக்கைச் செபம்.

மிகவும் பரிசுத்த கன்னிமரியாயே! உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்க மிகுந்த தேற்றரவு மாதாவே! அடியேன் இதோ உமது திருப்பாதத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்தித்து ஒப்புக்கொடுக்கும் காணிக்கை என்னவென்றால், என் அநுதினக் கிரியையினாலே நான் அடையக்கூடிய பூரண பேறுபலன்களையும், என் மரணத்துக்குப் பின் எனக்காக ஒப்புக்கொடுக்கும் செபதப பலன்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்களின் நன்மைக்காகத் தேவரீர் சித்தம்போல் அவைகளைப் பிரயோகிக்கக் கிருபைபுரிந்தருளும். தற்காலத்திலும், பிற்கால நித்தியத்திலும் எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களையெல்லாம் சுயநல நாட்டமின்றி தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே முழுவதும் ஒப்படைத்துவிடுகிறேன்.

உமது திருக்குமாரனாகிய ஆண்டவர் தமது கிருபை இரக்கத்துக்கு அல்லது நீதிக்கேற்றபடி உமது திருக்கரங்களின் வழியாய் அடியேனுக்கு நியமித்தனுப்பும் நன்மை துன்பங்களையெல்லாம் மனப்பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக்கொள்கிறேன்.

ஆமென்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்.

திவ்விய சேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே, சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். சுவாமி, தேவரீர் அன்று சிலுவை பீடத்தில் பலியாகும் போது பச்சாதாபக் கள்ளனுக்கு கிருபை புரிந்துதுபோல்,  இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து  அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையி்ன் பாக்கியத்தில் சேர்த்தருளும். அங்கே சகல அர்ச்சியசிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதா சர்வகாலமும்  தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக.
ஆமென்.

உன்னதத்தில் வீற்றிருக்கிற எங்கள் பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்விய சேசுக்கிறீஸ்துவின் விலைமதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சுவாமி! பரிசுத்தரே, சர்வ வல்லப பரிசுத்தரே, அட்சயரான பரிசுத்தரே சுவாமி! எங்கள் மேல் இரக்கமாயிரும். பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும். மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும்.

ஆமென்.

(நாள் 1-க்கு 300 நாள் பலன்)

உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் நவநாள் செபம்.

சர்வ வல்லபரான தேவனாகிய ஆண்டவரே, உமது திவ்விய சுதனாகிய சேசுநாதர் தமது மகா பரிசுத்த வியாகுல மாதாவின் பிரசன்னத்தில் தமது திருவிலாவினின்று ஏராளமாகச் சிந்தின விலைமதியாத திருஇரத்தத்தைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களையும், விசேஷமாக, இந்தத் திவ்விய இராக்கினியிடம் அனைவரிலும் அதிக பக்தியுள்ளதாக இருந்திருக்கிற ஆத்துமம் தேவரீருடைய மகிமைக்குள் சீக்கிரமாகப் பிரவேசித்து, அங்கே பரிசுத்த கன்னிகையில் உம்மையும், உம்மில் அவர்களையும் எக்காலங்களுக்கும் வாழ்த்திப் போற்றி ஸ்துதித்துக் கொண்டிருக்கும்படியாக அந்த ஆத்துமத்தையும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கும்படியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.

1 பர, 1 அருள், 1 திரி.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி, முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.

உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் நவநாட்களில் ஒவ்வொரு நாளும் சொல்லும் செபம்.

ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும். என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

என் சிருஷ்டிகரும், சகல விசுவாசிகளினுடையவும் இரட்சகருமாகிய சர்வேசுரா, உமது ஊழியர்களும், அடிமைகளுமானவர்களின் ஆத்துமங்களின் சகல பாவங்களையும் மன்னித்தருளும். இவ்வாறு, எங்கள் பக்தியுள்ள மன்றாட்டுக்களின் வழியாக, அவர்கள் எப்போதும் ஆசித்து வந்திருக்கிற மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்களாக. ஜீவியரும். சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே.

ஆமென்.

பனிமய மாதா ஜெபமாலை வியாகுலக் காரணிக்கம்.

குறிப்பு. பின்வரும் ஐந்து காரணிக்கத்துக்குத் (தேவரகசியங்கள்) தனித்துச் சொன்னால் 5 வருஷப் பலன், மற்றவர்களோடு சொன்னால் 10 வருஷப் பலன். பாவசங்கீர்த்தனம் பண்ணி நற்கருணை பெற்றும், சற்பிரசாதத்திற்கு முன் எழுந்தேற்றமில்லாமலும் சொன்னால் பரிபூரணப் பலன். ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபமாலையோடு சொன்னால் வேறுபலன்கள் உண்டு.

1. முதல் வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் எங்களுக்காகப் பாடுபடத் துவங்கி, பூங்காவனத்திலே அனாதி பிதாவை நோக்கி வேண்டுதல் செய்திருக்கும்போது சர்வாங்கமும் உதிரமாக வேர்த்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்கள் செய்கிற சகல நற்கிரியைகளையும் சர்வேசுரனுக்கு வேண்டுதலோடே துவக்கவும், முடிக்கவும் எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

2. இரண்டாவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் கற்றூணிலே கட்டுண்டு அடிப்பட்டதினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து எங்கள் பாவத்துக்கு வருகிய ஆக்கினையை, சர்வேசுரன் விலக்கத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

3. மூன்றாவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் பரிகாச ராசனாக முள்முடி தரித்ததினால் மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, உலகத்தார் எங்களுக்காகப் பண்ணுகிற பரிகாச நிந்தனைகளை நாங்கள் நல்ல மனதோடு பொறுத்துக்கொள்ள
எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

4. நான்காவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் பாரமான சிலுவையைச் சுமந்து கபால மலைக்குப் போகிறதைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, எங்கள் பாவத்தினுடைய பாரமும் கஸ்தியும் குறையத்தக்கதாக எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

5. ஐந்தாவது வியாகுலக் காரணிக்கம்.

வியாகுலம் நிறைந்த மாதாவே! உம்முடைய திருக்குமாரன் சிலுவையிலே அறையுண்டு மரித்ததைக் கண்டு மகா விதனப்பட்டீரே! அந்த வியாகுலத்தைப் பார்த்து, நாங்களும் அவருடைய நேசத்துக்காக எங்கள் பிராணனைக் கொடுக்கத் தயவோடிருக்கும்படி எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொள்ளும்.

பரலோகத்திலிருக்கின்ற...
அருள் நிறைந்த மரியே...(10)
பிதாவுக்கும்...
ஓ என் இயேசுவே...
ஆமென்!

பனிமய மாதாவிடம் வல்லமையுள்ள மன்றாட்டு.

அருள் மழை பொழியும் பனிமயத் தாயே! துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே! இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை கரம்பிடித்து வழி நடத்தும் தாயே!

எல்லாவற்றிற்கும் மேலாக இறை இயேசுவையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்கு துணை செய்வீராக!  ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையே! எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கின்ற நீர் சக்தி மிக்கவளாய் இருக்கின்றீர் அம்மா! நாங்கள் கேட்பதை தட்டாமல் தருகின்ற அன்புத் தாயே! துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும்.

தீராத வியாதி வருத்தங்களிலிருந்து விடுவித்தருளும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ்வதற்கு அறியாது வருந்தும் எங்களுக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், தொழிலையும் ஆசீர்வதித்து பாதுகாத்தருளும் தாயே!

ஆமென்.

பனிமயத்தாயிடம் விசுவாச அறிக்கை.

ஓ! இடைவிடா பனிமயத்தாயே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசுக்கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம்.

சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ பனிமயத்தாயே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட தஸ்நேவிஸ் மாதாவுக்கு செபம்.

பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே! சர்வலோகத்துக்கும் ஆண்டவளே! உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும் உமது திருப்பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவமாதாவே! நீர் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும். மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய், நாங்கள் சாகிற தருவாயில் மோட்சம் போகாதபடி தடுக்கும் பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி, நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத் துணையாயிரும். இதினிமித்தமாய் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே!

ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள்பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

அருள்நிறைந்த... (3 முறை)

பனிமய மாதா நவநாள் ஜெபம்.

சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.
(3 முறை).

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு காடு கடல்களைக் கடந்து ஓடி வந்தோம், துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!.

ஆமென்.

சகாய மாதாவுக்கு சத்தியப்பிரமாணம்.

அர்ச்சிஷ்ட மரியாயே, மகா சக்தியுள்ள கன்னிகையே, இரக்கத்தின் அன்னையே, விண்ணக அரசியே, பாவிகளுக்கு அடைக்கலமே உம்முடைய மாசற்ற திரு இருதயத்திற்கு எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம்.

எங்கள் வாழ்வையும், நாங்கள் நேசிக்கும் அனைத்தையும், எங்கள் உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் எங்கள் வீட்டையும், நாட்டையும் எங்கள் குடும்பங்களையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.

எங்களையும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உமக்கு உகந்ததாக்கவும், உமது உன்னதமான தாயன்பில் அவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.  இந்த உடன்படிக்கை நீடித்திருக்க எங்கள் ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் போது செய்துகொண்ட உறுதி மொழிகளை நாங்கள் இன்று நினைத்து புதுப்பித்துக் கொள்கிறோம்.

எங்கள் திருத்தந்தை மற்றும் பேராயர்களின் சீறிய வழி நடத்துதலின் படி உண்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழவும்,எங்களது பரிசுத்தமான விசுவாசத்தை உண்மையாகவும் தைரியமாகவும் எப்பொழுதும் அறிக்கையிடவும் உறுதி கூறுகிறோம்.

கடவுளின் கட்டளைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் குறிப்பாக கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாக அனுசரிக்கவும் உறுதி கூறுகிறோம்.

கத்தோலிக்க மதக் கோட்பாடுகளின் படி மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் , எங்கள் வாழ்வில் அங்கமாக கலந்து விட்ட பரிசுத்த திவ்விய நற்கருணையை மகிமைப்படுத்தவும் உறுதி கூறுகிறோம்.

ஓ மகிமை நிறைந்த அன்னையே, மாந்தர்களின் அன்னையே, உம்முடைய இறைத் திட்டங்களில் எங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும், உம் மாசில்லா திரு இருதயத்தின் உன்னதமான அன்பை சுவீகரித்துக் கொள்ளவும்,  எங்கள் இதயங்களிலும் எங்கள் நாடு மற்றும் உலக மாந்தர் அனைவரின் இதயங்களிலும் உமது திருமகனின் திரு இருதயத்தின் அரசை விண்ணக வாசிகள் ஏற்றுக் கொண்டது போல் மண்ணகத்தில் நாங்களும் ஏற்று வாழவும் உறுதி கூறுகிறோம்.

ஆமென்.

மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம்.

எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமைமிக்க அவரது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே!
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே!
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!
அர்ச்சியசிஷ்ட மரியாயே!
சர்வேசுரனுடைய மாதாவே!
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக,
இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக.
ஓ! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே! உமது தாயாகிய மரியம்மாளை, அவருடைய அற்புதச் சாயலை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவிசெய்ய தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! ஆவருடைய தாய்க்குரிய சலுகைகளை தேடுகிற நாங்கள் உமது இரட்சண்யத்தின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் சீவித்து ஆட்சி புரியும் சர்வேசுரா.

ஆமென்.

.


இடைவிடா சகாயத்தாய்க்கு நன்றியறிதல்.

நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

திருச்சபையின் தேவதிரவிய அனுமானங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும் எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத்தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோமாக.

( சிறிது நேரம் மௌன நன்றியறிதல்)

நோயாளிகளை ஆசீர்வதித்தல்.

செபிப்போமாக.
ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும். நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும். நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து, உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயராலே!
ஆமென்.

ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆசீர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக.

ஆமென்.

இடைவிடா சகாயத்தாயிடம் குழுவினர் விசுவாசம்.

ஓ! இடைவிடா சகாயத்தாயே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசுக்கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம்.

சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ இடைவிடா சகாயத்தாயே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.

ஆமென்.

இடைவிடா சகாயத்தாயிடம் மன்றாட்டு.

எங்கள் பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத்தலைவர்கள், சமூகத்தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருளும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்த எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் பரிசுத்த ஆவி அவர்களுக்கு வழிகாட்ட எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல்நலத்தில் நீடிக்கவும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தை திரும்ப அடையவும். எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும் எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

நமது இடைவிடா சகாயத்தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக்கூறுவோம்.

(சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)

இடைவிடா சகாயத்தாய் நவநாள் வேண்டுதல்.

ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கிணங்கி, கலிலேயாவின் கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே! எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும். எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொண்டு, எங்கள் விண்ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக.

ஓ! இடைவிடாத சகாயத்தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம். வாழ்வோரின் பாதுகாவலும், மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே! உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும், மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக. உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது. ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே, நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும். நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம். நீரே எங்கள் இடைவிடா சகாயத்தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.

(நமது இகபரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.)

ஓ! இடைவிடா சகாயத்தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் உம்முன் முழந்தாளிடுகிறோம். எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம். துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே, எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் தேவைகளை நிறைவேற்றும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால் நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத்தாயே, இந்த வரங்களையெல்லாம் எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல, ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.

ஆமென்.

சதா சகாயமாதாவுக்கு வல்லமையுள்ள நவநாள் செபம்.

இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும்.
(மும்முறை)

மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பிக்கையுமாக இருப்பவள் நீரே!

இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இடைவிடா சகாயத் தாயே உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.

இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசுக்கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும்.

இடைவிடா சகாயத் தாயே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.

அனுகூலமடைய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரைப் பார்த்து செபம்.

கன்னியர்களின் தந்தையும், பரிபாலனுமாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! பிரமாணிக்கமுள்ள காவலனே! பரிசுத்தமயமாகிய இயேசுவையும், கன்னியருக்கு அரசியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயையும் சர்வேசுரன் உமது அடைக்கலத்தில் ஒப்படைத்தாரே. உமது அருமைப் பராமரிப்புக்கு மிகவும் உரியவர்களாயிருக்கிற இந்த இருவரைக்குறித்து நான் இரந்து கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்...

வேண்டியதைக் குறிப்பிடுக.

நான் மாசற்ற சிந்தனைகளோடும், பரிசுத்த இருதயத்தோடும், கற்புள்ள சரீரத்தோடும், உத்தம தேவ சிநேகத்தோடும் பழுதின்றி நடந்து, அத்திவ்விய இயேசுவுக்கும், தேவமாதாவுக்கும் இடைவிடாமல் ஊழியம் பண்ணும்படிக்கு, எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தைக் கேட்டுத் தந்தருளும்.

ஆமென்.

பாப்பரசர் 13-ம் சிங்கராயர் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பேரில் செய்த செபம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுடைய துன்ப துயரங்களில் உமது சரணமாக ஓடி வந்தோம். உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு மன்றாடுகின்றோம்.

தேவ தாயாரான அமலோற்பவ கன்னிமாதாவின்பேரில் நீர் வைத்திருந்த அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து, அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய் பார்த்தருளி, எங்கள் அவசரங்களில் உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

திருக்குடும்பத்தைக் காத்து நடத்தின விவேக காவலனே! இயேசு கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும். அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே! சகல பாவங்களினின்றும் எங்களைத் தற்காத்தருளும். வல்லமை பொருந்திய பாதுகாவலனே! எங்கள் சத்துருக்களோடே நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும்.

மரண ஆபத்தினின்று திவ்விய பாலனை தேவரீர் அன்று மீட்டு இரட்சித்ததைப்போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் நின்றும் இக்கட்டு இடையுறுகளில் நின்றும் திருச்சபையை பாதுகாத்தருளும். உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரிகையைப் பின்சென்று, பரிசுத்தமாய் சீவித்துப் பக்தியாய் மரித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய இடைவிடாத உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும்.

ஆமென்.