இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

✠ தேவ மாதா


தேவமாதா ஆராதனை விளக்கம் - வீரமாமுனிவர்

தேவமாதாவின் பிரார்த்தனை விளக்கம்

மரியாயின் இரகசியம்

மரியாயின் மீது உண்மைப் பக்தி 1716

மாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் ஒன்று (பிரபஞ்சத்தைப் பற்றிய தெய்வீகத் திட்டத்தில் மாமரியின் பங்கு)

மாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் இரண்டு (மாமரியின் கதியின் உன்னத மகத்துவம்)

மாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் மூன்று (பொதுவில் மாமரியின் இலட்சணங்கள்)

மாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் நான்கு (கடவுளோடும், மனுக்குலத்தோடும் தன் சொந்த சுயத்தோடும் தனக்குள்ள தொடர்பில் மாமரியின் மகத்துவத்தின் விளைவுகள்)

மாமரியைப் பற்றிய அறிவு - புத்தகம் ஐந்து (மாமரியின் பேறுபலனும் மகிமையும்)

பரிசுத்த வேதாகமத்தில் நம் தாய் அன்னை மரியாள்!

அன்னை மாமரியின் முக்கியமான ஏழு காட்சிகள்!

வேளாங்கண்ணி மாதாவின் மூன்று காட்சிகள்!

மாதாவின் திருப்பெயர்கள்

லூர்து மாதா.

கார்மேல் மாதா.

பனிமய மாதா.

இடைவிடா சகாயமாதா.

துன்ப முடிச்சுக்களை அவிழ்க்கும் மாதா.

வியாகுலங்கள் நிறைந்த மாதா மீது பக்தி.

கபிரியேல் அதிதூதர் வாழ்த்து!

நான் கன்னி  ஆயிற்றே!

நீதிமானான புனித சூசையப்பர்!

ஆண்டவரின் தாய் எக்காலத்திலும் கன்னியானவள்!

இயேசுவின் சகோதர சகோதரிகள்!

அன்னை மாமரி நித்தியக் கன்னிகை!

தேவ அன்னை ஏன் அழுகிறார்கள்?

ஜெபமாலை குறித்து தேவமாதா சொன்னவை!

பாத்திமா செய்தி என்ன?

பாத்திமா அன்னை கொடுத்த மூன்றாவது இரகசியம்!

பாத்திமா சிறுமி ஜெசிந்தாவின் அறிவுரைகள்!

மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றி!

பரிகாரப் பக்தியின் சாரம்.

உத்தரியம் அணிவோம். அன்னையின் பாதுகாவலை பெற்றுக்கொள்வோம்!

நம்மை வழிநடத்தும் மாமரி அன்னை!

அன்னை மரியாள் தாழ்ச்சியின் மணிமகுடம்!

அன்னையின் பிறப்பே ஓர் அதிசயம்!

மாமரியின் சிறந்த பத்து புண்ணியங்கள்

மாமரியின் உதவி குறித்தும் ஜெபமாலை குறித்தும் தந்தை பியோவின் சான்றுகள்

அன்னை மரியாள் மனம் வருந்தும் பாவிகளின் தாய்

இரக்கத்தின் அரசி நம் அன்னை மாமரி

மீட்புச் செயலின் முதல் கனி அன்னை மரியாள்

அன்னையின் திருப்பயணங்கள்

மரியன்னையின் "ஆகட்டும்" என்ற சொல்

எங்கள் தஞ்சமே வாழ்ககிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! 

இரக்கத்தின் அரசியாம் மாமரி மீது நாம் வைக்கும் நம்பிக்கை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பது பற்றி...


தாய்மையும் மேன்மையும்

தேவதாயின் அமலோற்பவம்


மாமரி மீது உண்மைப் பக்தி எண் : 152-164.

கிறிஸ்தவ உத்தமதனம் நமதாண்டவருடன் ஐக்கியமாவதில் அடங்கியுள்ளது அதை அடையும் இலகுவான வழி, நெருங்கிய வழி, உத்தம வழி, பாதுகாப்பான வழி இப்பக்தி முயற்சியாகும்.

இது ஒரு இலகுவான வழி: சேசுகிறிஸ்து நம்மிடம் வந்ததினால் அவர் திறந்து வைத்த பாதை இது. இவ்வழியாய் நாம் அவரை அடைய எவ்வித இடையூறுமில்லை. மற்றவர்களில் சென்றும் நாம் இறைவனுடன் ஐக்கியம் அடைய முடியும் என்பது முற்றும் உண்மையே. ஆனால் பல சிலுவைகளாலும், இனம் புரியாத மரணங்களாலும், நம்மால் எளிதில் வெல்ல முடியாத பல கஷ்டங்களாலும் மட்டுமே அது கைகூடும். இருண்ட இரவை நாம் கடக்க நேரிடும். புரியாத போராட்டங்களையும், அவஸ்தைகளையும் சந்திக்க நேரிடும். விளிம்பில் நடந்தாற் போன்று மலைகள் மீது நடக்க நேரிடும். வேதனையான முட்கள் நடுவிலும் பயங்கர பாலைவனங்களிடையேயும் நடந்து செல்ல வேண்டிவரும். ஆனால் மாமரி என்னும் பாதை வழியாக நாம் எளிதாகவும் அமைதியாகவும் நடந்து செல்கின்றோம்.

உண்மைதான், இங்கு கடுமையான போராட்டங்கள் உள்ளன. மேற்கொள்ள வேண்டிய பெரிய கஷ்டங்களும் உள்ளன. ஆனால் இந்த அன்புத்தாய், இவ்வன்புத் தலைவி தன் பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுடைய இருளை ஒளிர்விப்பதற்கும், கலக்கங்களில் அவர்களுக்குப் பிரகாசிப்பதற்கும், பயத்தில் அவர்களைத் திடப்படுத்துவதற்கும், போராட்டங்களிலும், கஷ்டங்களிலும் அவர்களை கைதூக்குவதற்கும், எவ்வளவு அருகாமையில் தன்னைக் கொணர்ந்து எவ்வளவு பக்கத்தில் பிரசன்னமனிக் கிறார்களென்றால் கிறிஸ்துவைத் தேடும் இக்கன்னிப் பாதை, மற்றவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையிலே ரோஜா மலர்ப் பாதை! தேன் போன்ற பாதை! சேசு கிறிஸ்துவிடம் செல்ல இவ்வினிய பாதையைத் தெரிந்து கொண்ட சில அர்ச்சிஷ்டவர்கள் உள்ளார்கள். அவர்கள் ஒரு சிலரே. புனித எப்ரேம், புனித தமாசின் அருளப்பர், புனித பெர்னார்ட், புனித பெர்னார்டின், புனித பொன வெந்தூர், புனித பிரான்சிஸ் சலேசியார் இன்னும் மற்றவர்கள். காரணம், மாமரியின் பிரமாணிக்கமுள்ள மணாளனான பரிசுத்த ஆவி ஒரு தனி வரப்பிரசாதத்தால் இதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ஆனால் பெருந்தொகையினரான மற்றப் புனிதர்கள் நம் தேவ அன்னை மீது பக்தி பூண்டிருந்தாலும் இந்த வழியில் வரவில்லை. வந்தாலும் வெகு கொஞ்ச அளவே நுழைந்தார்கள். இதனாலேயே அவர்கள் அதிக கடினமான அதிக ஆபத்துள்ள சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

இப்பக்தி முயற்சி சேசு கிறிஸ்துவிடம் செல்வதற்கு ஒரு பாதுகாப்பான வழியாயிருப்பது. ஏனென்றால், நித்திய பிதாவிடம் நம்மைப் பாதுகாப்பாக கூட்டிச் செல்வது எப்படி சேசுவின் குணாதிசயமாக இருக்கின்றதோ, அப்படியே சேசுவிடம் நம்மைப் பாதுகாப்பாக கூட்டிச் செல்வது நம் மாமரி அன்னையின் குணாதிசயமாக இருக்கின்றது. தாங்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவதற்கு மாமரி இடையூறாக இருப்பதாக ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அது எப்படி முடியும்? எல்லா மக்களுக்கும் பொதுவாகவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் கடவுளிடம் வரப்பிரசாதத் தைப் பெற்றுள்ள கன்னிமரி அன்னை, அவருடன் ஒரு ஆன்மா ஐக்கியமாகும் அருளைப் பெறுவதைத் தடை செய்ய எப்படி முடியும்? வரப்பிரசாதங்களால் நிரம்பி வழியும் மாமரி , கடவுளுடன் எந்த அளவுக்கு ஐக்கியமடைந்திருந்தார்களென்றால், அவர் இம்மாமரியிட மே மாம்ச அவதாரம் எடுக்கும் அவசியம் ஏற்பட்டதே! அப்படிப்பட்ட கன்னி மாமரி ஒரு ஆன்மா உத்தம விதமாய்க் கடவுளுடன் ஐக்கியமாவதைத் தடை செய்ய எப்படி முடியும்?