சக்கரியாஸின் சங்கீதம்

(லூக். 1:68-79)

இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தர் தோத்தரிக்கப் படுவாராக. ஏனெனில் தமது பிரஜைகளைச் சந்தித்து, அவர்களை மீட்டுக் கொண்டார்.

பூர்வீக முதலிருந்தே தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாயால் அவர் திருவுளம் பற்றின படியே, 

தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்தில் நமக்கு ஓர் இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்.

நம்முடைய சத்துருக்களிடத்தினின்றும், நம்மைப் பகைக்கிறவர்களுடைய கையினின்றும் நம்மை இரட்சிக்கவும், நம்முடைய பிதாக்களுக்கு இரக்கஞ் செய்யவும், தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூரவும் (அவ்வண்ணஞ் செய்தார்.)

நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு அவரிட்ட ஆணை ஏதெனில்: 

நம்முடைய சத்துருக்களின் கையினின்று நாம் விடுதலையாகி, அச்சமின்றி நம்முடைய வாழ்நாளெல்லாம் தமது சமூகத்தில் பரிசுத்தத்தோடும் நீதியோடும் தமக்கு ஊழியஞ் செய்யும்படி அனுக்கிரகம் செய்வார் என்பதே.  

நீயோ பாலனே! உன்னதமானவருடைய தீர்க்கதரிசி எனப்படுவாய். ஏனெனில் ஆண்டவருடைய வழிகளை ஆயத்தஞ் செய்யும் படியாகவும், 

நமது கடவுளின் இரக்க உருக்கத்தால் அவருடைய ஜனத்தின் பாவமன்னிப்புக்காக அவர்களுக்கு இரட்சணிய அறிவைக் கொடுக்கும்படியாகவும், அவருடைய சமூகத்துக்கு முன் நடந்து போவாய்.

அந்த இரக்க உருக்கத்தினால் உன்னதத்தினின்று உதயமானவர் அந்தகாரத்திலும், மரண நிழலிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு ஒளிவீசவும், 

நமது பாதங்களைச் சமாதானத்தின் பாதையில் நடத்தவும் நம்மைச் சந்தித்திருக்கிறார்.

பிதாவுக்கும் சுதனுக்கும். . .