பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்புவிக்கும் செபம்.

(இச்செபத்தை தினமும் 81 முறை செபித்து வந்தால் நமது உடல் உள்ள பாதுகாவலையும் ஆன்மாவுக்கு ஆறுதலையும் பரிசுத்த ஆவியிடமிருந்து நிறைவாகப் பெற்று மகிழலாம்.)

அன்பான பரிசுத்த ஆவியே! உம்மை நாங்கள் போற்றுகிறோம்; புகழ்கிறோம். தந்தை மகன் பரிசுத்த ஆவிக்கு நன்றி. இறைவா உம் திருப்பாதங்களை முத்தம் செய்கிறோம். ஆண்டவரே உம் அருட்கரத்தால் எம்மை ஆசீர்வதியும். நாங்கள் என்றும் உமது பிள்ளைகளாக இருந்து உம்மிடம் வந்து சேரும் வரம் தாரும். உமக்காக நாங்கள் எதையும் தியாகம் செய்யும் பரிசுத்த உள்ளத்தை எங்களுக்குத் தாரும். ஒரு நிமிடம் கூட எம்மை விட்டுப் பிரியாதேயும். உம் பாதங்களை முத்தம் செய்து சரணடையும் எங்களை ஏற்று அரவணைத்துக் கொண்டு உம் அருளால் எங்களை நிரப்பியருளும்.
ஆமென்.

முடிவு செபங்கள்

என்றென்றும் வாழும் இறைத் தந்தையே! உம்மை ஆராதிக்கிறோம்; எங்களை ஆசீர்வதியும்.

என்றென்றும் வாழும் இறை மகனே! உம்மை ஆராதிக்கிறோம்; எங்களை ஆசீர்வதியும்.

என்றென்றும் வாழும் இறை ஆவியே! உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

எம்மைப் படைத்த பரிசுத்த தந்தையே! உம்மை ஆராதிக்கிறோம்; எங்களை ஆசீர்வதியும்.

எம்மைப் படைத்த பரிசுத்த தந்தையே! உமக்கு நன்றி கூறுகின்றோம்.

எம்மை மீட்டத் திருமகனே! உமக்கு நன்றி கூறுகின்றோம்.

எம்மைத் தூய்மைப்படுத்தும் பரிசுத்த ஆவியே! உமக்கு நன்றி கூறுகின்றோம்.

பரிசுத்த ஆவியே, என்றும் வற்றாத அன்பே! உம்மை அன்பு செய்கிறோம்.

பரிசுத்த ஆவியே, எம் பரிசுத்த வழிகாட்டியே! உம்மை வணங்கி ஆராதிக்கின்றோம்.

பரிசுத்த ஆவியாரின் ஆலயமாகிய பரிசுத்த அன்னையே! எமது ஆன்மாவை பரிசுத்த ஆவியாரின் பரிசுத்த இல்லமாக்கியருளும்.

செபிப்போமாக.
அனைத்துலகையும் படைத்து, ஆளும் மூவொரு இறைவா! உமது பரிசுத்த ஆவியை பனி மழைபோல் எங்கள் இதயங்களின் ஆழத்தில் இறங்கிவரச் செய்தருள்வீராக. அவர் தங்கும் இல்லமாக எங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவீராக. எங்கள் ஆன்மாக்களில் பரிசுத்த ஆவியின் ஆற்றலால் ஆன்மீக ஒளி பரவிடச் செய்தருள்வீராக.

ஆமென்.