(30ஆம் நாள்,ஆண்டு விழா போன்ற நாட்களில் இதனைப் பயன்படுத்தலாம்.)
குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
அருள்வாக்கு திவெ.14:13
விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன் : "இதுமுதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர் என எழுது” என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், "ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின் தொடரும்" என்று கூறினார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
(சிறிது நேரம் மௌனம்)
குரு: நம்மிடையே வாழ்ந்து இறந்துபோன இறைவனின் அடியார் ……………… க்காக மன்றாடுவோம்.
எல்: பரலோகத்தில் இருக்கிற ...
குரு: (கைகளை விரித்து) இறைவா, இரக்கம் காட்டுவதும், மன்னிப்பு அளிப்பதும் உமது இயல்பு; ஆகையால் உமது திருவடிகளுக்கு வந்துள்ள (திரு / திருமதி) ……………… யின் ஆன்மாமீது இரக்கம் கொண்டு, அவருடைய உறவினர் (நண்பர்) உமக்குச் செலுத்தும் செபங்களை ஏற்று, அவரது குற்றங்களையும் அவற்றிற்குரிய தண்டனையையும் மன்னித்து, அமைதியையும் முடிவில்லா வாழ்வையும் தந்திடுமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு கல்லறையின்மேல் தீர்த்தம் தெளிக்கிறார்.)