குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
அனைத்தையும் படைத்துப் பாதுகாப்பவரான இறைவா! கொடிய நோயுற்றுத் துன்புறும் இந்த விலங்கு(கள்) உமது வல்லமையுள்ள திருப்பெயராலும் உமது ஆற்றலுள்ள ஆசியாலும் குணமடையும்படியாக உமது இரக்கத்தை கெஞ்சி மன்றாடுகிறோம். தீயோனின் வல்லமை இவற்றுள் அற்றுப்போவதாக. இவற்றை இனி நோய் பற்றிக்கொள்ளாதபடி, ஆண்டவரே, இவற்றின் உயிருக்குப் பாதுகாவலாகவும், உடல் நலத்திற்கு மருந்தாகவும் இருப்பீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)