குரு: ஆண்டவர் பெயராலே நமக்கு உதவி உண்டு.
எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம்மோடும் இருப்பாராக.
குரு: மன்றாடுவோமாக:
அனைத்தையும் படைத்தாளும் இறைவா, மக்களுக்குப் பயன்படுமாறு நீர் படைத்த உயிரினங்களுள் பறப்பனவற்றையும் உருவாக்கினீர். நீதிமான் நோவா பேழையிலிருந்து வெளியேறிய போது பறவைகளையும் உமக்குப் பலி செலுத்தினார். இஸ்ரயேல் மக்கள் பாலைவெளியில் பயணம் செய்தபோது பறவைகளை அவர்களுக்கு உணவாகத் தந்தீர். இப்பறவைகளை (கோழிகளை) ஆசீர்வதித்தருள உம்மை மன்றாடுகிறோம். இதனால் இவை நோயின்றி வளர்ந்து நற்பலன் அளிப்பனவாக. இவற்றை வளர்த்துப் பயன்படுத்தும் அனைவரும் உமது ஆசியால் நிரப்பப் பெற்று முடிவில்லா வாழ்வு பெறுவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
(குரு அவற்றின்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)