விதைகளை மந்திரித்தல்

குரு: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு. 

எல்: விண்ணையும் மண்ணையும் படைத்தவர் அவரே. 

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உம்மோடும் இருப்பாராக.

குரு: மன்றாடுவோமாக:

இறைவா, உம் அடியார்கள் தங்கள் வாழ்வின் வளமைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த விதைகளை ஆசீர்வதித்தருளும். அமைதியாக வீசும் இளங்காற்றால் இவை பக்குவப்பட்டு, சீராகப் பருவமடைந்து, போதுமான மழை பொழிவதால் பயிர் வளர்ந்து அறுபது, நூறுமடங்காகப் பெருகவும், யாதொரு சேதமுமின்றிப் பலன் தரவும் வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

(விதைகளின்மேல் குரு தீர்த்தம் தெளிக்கிறார்.)